Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனம் திருந்துவது

மனம் திருந்துவது

எல்லா மனிதர்களுமே ஏன் மனம் திருந்தி யெகோவாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?

ரோ 3:23; 5:12; 1யோ 1:8

இதையும் பாருங்கள்: அப் 26:20

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 18:9-14—நம் பாவங்களை ஒத்துக்கொள்வதும் கடவுளிடம் உதவி கேட்டு ஜெபம் செய்வதும் முக்கியம் என்பதைக் காட்ட இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார்

    • ரோ 7:15-25—பவுல் ஒரு அப்போஸ்தலராக இருந்தார், அவருக்குப் பலமான விசுவாசமும் இருந்தது; ஆனாலும், பாவ இயல்போடு அவர் போராட வேண்டியிருந்தது

மனம் திருந்துகிறவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?

எசே 33:11; ரோ 2:4; 2பே 3:9

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 15:1-10—ஒரு பாவி மனம் திருந்தும்போது யெகோவாவும் தேவதூதர்களும் சந்தோஷப்படுகிறார்கள் என்பதைக் காட்ட இயேசு உதாரணங்களைப் பயன்படுத்தினார்

    • லூ 19:1-10—வரி வசூலிப்பவர்களின் தலைவனான சகேயு அநியாயமாக மற்றவர்களிடமிருந்து பணம் பறித்துக்கொண்டு இருந்தான்; ஆனால், அவன் திருந்தி வாழ்ந்தபோது மன்னிப்பையும் மீட்பையும் பெற்றுக்கொண்டான்

நாம் உண்மையிலேயே மனம் திருந்தியிருப்பதை எப்படிக் காட்டலாம்?

உண்மையிலேயே மனம் திருந்தும் ஒருவருக்கு திருத்தமான அறிவு எப்படி உதவும்?

ரோ 12:2; கொலோ 3:9, 10; 2தீ 2:25

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • அப் 17:29-31—சிலைகளை வழிபடுகிறவர்கள் அறியாமையில் இருப்பதாக அத்தேனே நகர மக்களுக்கு பவுல் விளக்கினார்; மனம் திருந்தும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்

    • 1தீ 1:12-15—இயேசு கிறிஸ்துவைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பு பவுல் அறியாமையினால் பெரிய பாவங்களைச் செய்திருந்தார்

மனம் திருந்துவது எந்தளவு முக்கியம்?

நாம் நிறைய தடவை பாவம் செய்துவிட்டாலும், மனம் திருந்தினால் யெகோவா மன்னிப்பார் என்று ஏன் நம்பலாம்?

தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டு, திருந்தி வாழ்கிறவர்களை யெகோவா எப்படி நடத்துகிறார்?

சங் 32:5; நீதி 28:13; 1யோ 1:9

இதையும் பாருங்கள்: “இரக்கம்

மனம் திருந்துவது என்பது வெறுமனே வருத்தப்படுவதோ வாயளவில் மட்டும் மன்னிப்புக் கேட்பதோ கிடையாது என்று எப்படிச் சொல்லலாம்?

2நா 7:14; நீதி 28:13; எசே 18:30, 31; 33:14-16; மத் 3:8; அப் 3:19; 26:20

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 33:1-6, 10-16—மனாசே ராஜா வருஷக்கணக்காகப் பாவத்துக்குமேல் பாவம் செய்தார்; ஆனாலும், தன்னையே தாழ்த்திக்கொண்டு, விடாமல் ஜெபம் செய்து, தன் வழிகளை மாற்றிக்கொண்டார்; இப்படி, உண்மையிலேயே மனம் திருந்தியிருந்ததைக் காட்டினார்

    • சங் 32:1-6; 51:1-4, 17—தாவீது ராஜா யெகோவாவுக்கு எதிராகச் செய்த பாவங்களை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார், அந்தப் பாவங்களை ஒத்துக்கொண்டார், மன்னிப்புக் கேட்டு ஜெபமும் செய்தார்; இப்படி, மனம் திருந்தியிருந்ததைக் காட்டினார்

நமக்கு எதிராகப் பாவம் செய்தவர்கள் மனம் திருந்தும்போது நாம் ஏன் மன்னிக்க வேண்டும்?

மத் 6:14, 15; 18:21, 22; லூ 17:3, 4

இதையும் பாருங்கள்: “மன்னிப்பு