Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேலை

வேலை

வேலைக்கும் சந்தோஷத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

திறமையாக வேலை செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

நீதி 22:29

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 1சா 16:16-23—தாவீது திறமையான இசைக் கலைஞராக இருந்தார்; அவருடைய இசை இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிம்மதி தந்தது; அதனால் ராஜாவுக்கு தாவீது ரொம்ப உதவியாக இருந்தார்

    • 2நா 2:13, 14—கைவேலைப்பாடுகள் செய்வதில் ஈராம்-அபி திறமைசாலியாக இருந்ததால் பிரமாண்டமான ஒரு கட்டுமான வேலைக்கு அவரை சாலொமோன் ராஜா பயன்படுத்தினார்

யெகோவாவின் ஊழியர்கள் எப்படிப்பட்ட வேலையாட்கள் என்று பெயரெடுக்க விரும்புகிறார்கள்?

எபே 4:28; கொலோ 3:23

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 24:10-21—ஆபிரகாமின் ஊழியர் கேட்டதைவிட அதிக உதவியை ரெபெக்காள் செய்தாள்; அதுவும், ஓடி ஓடி செய்தாள்

    • பிலி 2:19-23—தீமோத்தேயு மனத்தாழ்மையாக இருந்தார், கடினமாக உழைத்தார்; அதனால், அவருக்கு பவுல் ஒரு முக்கியமான பொறுப்பைக் கொடுத்தார்

கடவுளுடைய ஊழியர்கள் ஏன் சோம்பேறிகளாக இருப்பதில்லை?

நீதி 13:4; 18:9; 21:25, 26; பிர 10:18

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • நீதி 6:6-11—சோம்பலாக இல்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்ய எறும்பைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும்படி சாலொமோன் சொல்கிறார்

நம் தேவைகளுக்காக நாம் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?

நம் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள நாம் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?

1தீ 5:8

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ரூ 1:16, 17; 2:2, 3, 6, 7, 17, 18—தன் மாமியார் நகோமியைக் கவனித்துக்கொள்வதற்காக இளம் விதவையான ரூத் கடினமாக உழைத்தாள்

    • மத் 15:4-9—கடவுளுக்குச் சேவை செய்வதை ஒரு சாக்காகச் சொல்லி தங்கள் பெற்றோரைக் கவனிக்காமல் விட்டுவிட்டவர்களை இயேசு கண்டனம் செய்தார்

உழைத்து சம்பாதித்ததை என்ன செய்ய நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?

நாம் சம்பாதிக்கும் பணத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

நன்றாக வேலை செய்யவும் நம் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவும் யெகோவா நமக்கு உதவ விரும்புகிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

மத் 6:25, 30-32; லூ 11:2, 3; 2கொ 9:10

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 31:3-13—தன்னிடம் வேலை செய்த தன் மருமகன் யாக்கோபை லாபான் அநியாயமாக நடத்தினார்; ஆனால், யாக்கோபின் கடின உழைப்பை யெகோவா கவனித்தார், அதை ஆசீர்வதித்தார்

    • ஆதி 39:1-6, 20-23—போத்திபாரின் வீட்டில் அடிமையாக இருந்தபோதும் சரி, சிறையில் கைதியாக இருந்தபோதும் சரி, யோசேப்பின் உழைப்பை யெகோவா ஆசீர்வதித்தார்

கடவுளுக்குச் செய்யும் சேவையைவிட நம் வேலைக்கு நாம் ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது?

சங் 39:5-7; மத் 6:33; யோவா 6:27

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 12:15-21—கடவுளோடு இருக்கும் பந்தத்தைவிட பணம்தான் முக்கியம் என்று நினைப்பது முட்டாள்தனம் என்பதைப் புரிய வைக்க இயேசு ஒரு உதாரணத்தைச் சொன்னார்

    • 1தீ 6:17-19—ஆணவமாக நடந்துகொள்ளக் கூடாதென்று பணக்காரர்களாக இருந்த கிறிஸ்தவர்களை பவுல் எச்சரித்தார்; “நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாக” இருக்கும்படியும் அவர்களை உற்சாகப்படுத்தினார்

நாம் ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு என்னென்ன நியமங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்?

  • யாத் 20:4; அப் 15:29; எபே 4:28; வெளி 21:8—கடவுளுக்குப் பிடிக்காத எதையாவது இந்த வேலையில் நான் செய்ய வேண்டியிருக்குமா?

  • யாத் 21:22-24; ஏசா 2:4; 1கொ 6:9, 10; 2கொ 7:1—கடவுளுக்குப் பிடிக்காத ஒன்றை இந்த வேலை ஆதரிக்குமா? அதைச் செய்ய மற்றவர்களைத் தூண்டுமா? அதற்கு நானும் உடந்தையாவதுபோல் ஆகிவிடுமா?

  • ரோ 13:1-7; தீத் 3:1, 2—இந்த வேலையில் நான் ஏதாவது அரசாங்க சட்டங்களை மீற வேண்டியிருக்குமா?

  • 2கொ 6:14-16; வெளி 18:2, 4—இந்த வேலை என்னைப் பொய் மதத்தின் பாகமாக ஆக்கிவிடுமா அல்லது பொய் மதத்தை ஆதரிக்க வைத்துவிடுமா?

யெகோவாவுக்காக வேலை செய்வது

கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை எது?

யெகோவாவுக்கு முழுமூச்சோடு வேலை செய்ய நாம் ஏன் ஆசைப்படுகிறோம்?

லூ 13:24; ரோ 12:11; 1கொ 15:58; எபி 6:10-12

இதையும் பாருங்கள்: 1தீ 3:1

யெகோவாவுக்காக எல்லாரும் ஒரே அளவில் சேவை செய்ய வேண்டுமென்று நாம் ஏன் எதிர்பார்க்கக் கூடாது?

கலா 6:3-5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 25:14, 15—தன் சீஷர்கள் எல்லாரும் ஒரே அளவுக்கு வேலை செய்ய வேண்டுமென்று இயேசு எதிர்பார்ப்பதில்லை என்பதை அவர் சொன்ன உதாரணம் காட்டுகிறது

    • லூ 21:2-4—ஏழை விதவை போட்ட இரண்டு சிறிய காசுகளுக்கு உண்மையில் பெரிய மதிப்பு இருப்பதாக இயேசு சொன்னார்

யெகோவா தரும் நியமிப்புகளைச் செய்ய நமக்கு எப்படிப் பலம் கிடைக்கும்?

2கொ 4:7; எபே 3:20, 21; பிலி 4:13

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2தீ 4:17—தேவைப்பட்டபோதெல்லாம் தனக்குப் பலம் கிடைத்ததாக பவுல் சொன்னார்

யெகோவாவுக்காக நாம் கடினமாக உழைக்கும்போது ஏன் சந்தோஷம் கிடைக்கிறது?

சங் 40:8; யோவா 13:17; யாக் 1:25

இதையும் பாருங்கள்: மத் 25:23