Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்


பாடங்களிலிருந்து பயன் பெற...

பாடங்களிலிருந்து பயன் பெற...

ஒருவரின் உதவியோடு படியுங்கள்: இந்தப் புத்தகத்தை உங்களுக்குக் கொடுத்தவரிடம் இதைச் சொல்லித்தரச் சொல்லுங்கள் அல்லது சொல்லித்தர யாரையாவது அனுப்பும்படி jw.org வெப்சைட்டில் எழுதிக் கேளுங்கள்.

முதல் பகுதி

ஒவ்வொரு பாராவையும் படியுங்கள். முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துவதற்காகத் தடித்த எழுத்துக்களில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளையும் (A) வசனங்களையும் (B) சேர்த்துப் படியுங்கள். “வாசியுங்கள்” என்று சில வசனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதையும் கவனியுங்கள்.

இரண்டாவது பகுதி

ஆராய்ந்து பார்க்கலாம்! பகுதியின் சுருக்கம் ஆரம்பத்தில் (C) கொடுக்கப்பட்டிருக்கிறது. கலந்துபேச வேண்டிய விஷயங்களைத் துணைத் தலைப்புகள் (D) சொல்கின்றன. வசனங்களை வாசியுங்கள், கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், வீடியோக்களை (E) பாருங்கள்.

படங்களையும் பட விளக்கங்களையும் (F) கவனியுங்கள். சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (G) பகுதியைப் படித்துவிட்டு அதற்கு எப்படிப் பதில் சொல்வீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

கடைசிப் பகுதி

சுருக்கம் மற்றும் ஞாபகம் வருகிறதா? (H) பகுதிகள், அந்தப் பாடத்தின் முக்கியக் குறிப்புகளை வலியுறுத்துகின்றன. பாடத்தைப் படித்து முடித்த தேதியை எழுதி வையுங்கள். குறிக்கோள் (I) என்ற பகுதி, நீங்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று சொல்லும். அலசிப் பாருங்கள் (J) பகுதியில் நீங்கள் வாசிப்பதற்கு அல்லது பார்ப்பதற்குக் கூடுதலான கட்டுரைகளோ வீடியோக்களோ கொடுக்கப்பட்டிருக்கும்.

வசனங்களைக் கண்டுபிடிக்க...

பைபிள் புத்தகமும் (A), அதிகாரமும் (B), வசனமும் அல்லது வசனங்களும் (C) பாடங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, யோவான் 17:3 என்பது யோவான் புத்தகத்தில் 17-ஆம் அதிகாரத்தில் 3-ஆம் வசனத்தைக் குறிக்கிறது.