பாடல் 154
உண்மை அன்பு
1. அன்பு பொங்கிடும்
இதயங்களையே,
நம்மை சுற்றிலும் பார்க்கின்றோம்.
ஆயுதம் ஏந்தும்
இந்த பூமியிலே,
அன்பை ஆடையாய் அணிந்தோம்.
(பல்லவிக்கு முன்)
மண்ணும் விண்ணும் மாறலாம்,
மாறாது அன்புதான்!
(பல்லவி)
பார், கொள்ளை அன்பை
நம்மேல் பொழிகிறார்
யெகோவாவே!
ஆம், உண்மை அன்பு
நம் வாழ்வின் ஸ்வாசமே!
ஒருகாலத்திலும்
ஒழிவதில்லையே,
உண்மை அன்பு!
2. பாரம் தாங்காமல்
தடுமாறும்போது,
தேவன் தாங்குவார் அன்பாலே!
நாமும் தந்தை போல்
அன்பு காட்டும்போது,
நிம்மதி வரும் நெஞ்சிலே!
(பல்லவிக்கு முன்)
மண்ணும் விண்ணும் மாறலாம்,
மாறாது அன்புதான்!
(பல்லவி)
பார், கொள்ளை அன்பை
நம்மேல் பொழிகிறார்
யெகோவாவே!
ஆம், உண்மை அன்பு
நம் வாழ்வின் ஸ்வாசமே!
ஒருகாலத்திலும்
ஒழிவதில்லையே!
(பல்லவி)
பார், கொள்ளை அன்பை
நம்மேல் பொழிகிறார்
யெகோவாவே!
ஆம், உண்மை அன்பு
நம் வாழ்வின் ஸ்வாசமே!
ஒருகாலத்திலும்
ஒழிவதில்லையே,
உண்மை அன்பு!
உண்மை அன்பு!
உண்மை அன்பு!