Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேச ஆரம்பிப்பது

பாடம் 4

மனத்தாழ்மை

மனத்தாழ்மை

நியமம்: “மனத்தாழ்மையினால் . . . மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்.”—பிலி. 2:3.

பவுல் என்ன செய்தார்?

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது அப்போஸ்தலர் 26:2, 3-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1.   அ. அகிரிப்பா ராஜாவிடம் பேசியபோது பவுல் எப்படி மனத்தாழ்மையைக் காட்டினார்?

  2.  ஆ. தன்மேல் கவனத்தைத் திருப்புவதற்குப் பதிலாக, பவுல் எப்படி யெகோவாமேலும் அவருடைய வார்த்தையின்மேலும் கவனத்தைத் திருப்பினார்?—அப்போஸ்தலர் 26:22-ஐப் பாருங்கள்.

பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. நாம் மனத்தாழ்மையோடும் மரியாதையோடும் பேசும்போது, நம் செய்தி மற்றவர்களுடைய மனதைத் தொடும்.

பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. எல்லாம் தெரிந்தவரைப்போல் காட்டிக்கொள்ளாதீர்கள். உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் அவர்களை நினைக்க வைக்காதீர்கள். அவர்களிடம் மரியாதையோடு பேசுங்கள்.

4. பைபிளிலிருந்து பேசுங்கள். கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற விஷயங்கள் மக்களுடைய மனதைத் தொடும். அதனால், அதிலிருந்து பேசும்போது, சரியான அஸ்திவாரத்தின்மேல் அவர்களுடைய விசுவாசத்தை நம்மால் கட்ட முடியும்.

5. சாந்தமாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் சொல்வதுதான் சரி என்பதை நிரூபிக்க முயற்சி செய்யாமல் மனத்தாழ்மையைக் காட்டுங்கள். எப்படி? யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் சாந்தமாக நடந்துகொள்ளுங்கள். ஒருவேளை, அந்த இடத்தைவிட்டு நீங்கள் கிளம்பக்கூட வேண்டியிருக்கலாம். (நீதி. 17:14; தீத். 3:2) நாம் சாந்தமாக நடந்துகொண்டால், வேறொரு சமயத்தில் அவர் நம் செய்தியைக் கேட்கலாம்.

இதையும் பாருங்கள்