Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேச ஆரம்பிப்பது

பாடம் 6

தைரியம்

தைரியம்

நியமம்: “நம் கடவுளுடைய நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்வதற்காக அவருடைய உதவியால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டோம்.”—1 தெ. 2:2.

இயேசு என்ன செய்தார்?

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது லூக்கா 19:1-7-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1.   அ. சிலர் ஏன் சகேயுவைவிட்டு ஒதுங்கி இருந்திருக்கலாம்?

  2.  ஆ. அவரிடம் நல்ல செய்தியைச் சொல்வதற்கு இயேசுவை எது தூண்டியது?

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லாரிடமும் நல்ல செய்தியைச் சொல்ல நமக்குத் தைரியம் தேவை.

இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. யெகோவாவை நம்பியிருங்கள். பிரசங்கிப்பதற்கு கடவுளுடைய சக்தி இயேசுவுக்குப் பலம் கொடுத்தது. அந்த சக்தி உங்களுக்கும் பலம் கொடுக்கும். (மத். 10:19, 20; லூக். 4:18) சிலரிடம் பேச உங்களுக்குப் பயமாக இருந்தால், யெகோவாவிடம் தைரியத்தைக் கேளுங்கள்.—அப். 4:29.

4. மக்களைப் பற்றித் தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சிலருடைய தோற்றம், சமுதாய அந்தஸ்து, பண வசதி, வாழ்க்கை முறை, அல்லது மத நம்பிக்கை—இதையெல்லாம் பார்க்கும்போது அவர்களிடம் பேச நாம் தயங்கலாம். ஆனால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்:

  1.   அ. ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்று யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் தெரியும்; நமக்குத் தெரியாது.

  2.  ஆ. யெகோவாவால் எப்படிப்பட்ட ஆட்களுக்கும் உதவி செய்ய முடியும்.

5. தைரியமாகவும், அதேசமயம் மரியாதையாகவும், ஜாக்கிரதையாகவும் நடந்துகொள்ளுங்கள். (மத். 10:16) வாக்குவாதம் செய்யாதீர்கள். நல்ல செய்தியை ஒருவர் கேட்கவில்லை என்றால் அல்லது அந்த இடத்தில் இருப்பது பாதுகாப்பில்லை என்று உங்களுக்குத் தோன்றினால், பணிவோடு உங்கள் பேச்சை முடித்துக்கொள்ளுங்கள்.—நீதி. 17:14.

இதையும் பாருங்கள்