Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சீஷர்களை உருவாக்குவது

பாடம் 12

வெளிப்படையாகப் பேசுவது

வெளிப்படையாகப் பேசுவது

நியமம்: “அக்கறையோடு ஆலோசனை தருகிறவருடைய இனிய நட்பு, எண்ணெயையும் தூபப்பொருளையும் போலவே இதயத்துக்குச் சந்தோஷம் தரும்.”—நீதி. 27:9.

இயேசு என்ன செய்தார்?

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது மாற்கு 10:17-22-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1.   அ. என்னென்ன நல்ல குணங்களை அந்த இளம் தலைவனிடம் இயேசு பார்த்திருக்கலாம்?

  2.  ஆ. அவனுக்கு ஆலோசனை கொடுக்க இயேசு ஏன் அன்பாகவும், அதேசமயத்தில் வெளிப்படையாகவும் பேச வேண்டியிருந்தது?

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கிப் போக என்ன செய்ய வேண்டும் என்பதை மாணவரிடம் அன்பாகவும், அதேசமயம் வெளிப்படையாகவும் சொல்ல வேண்டும்.

இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. குறிக்கோள்களை வைப்பதற்கும் அடைவதற்கும் உதவுங்கள்.

  1.   அ. இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் ஒவ்வொரு பாடத்திலும் இருக்கிற “குறிக்கோள்” பகுதியைப் பயன்படுத்துங்கள்.

  2.  ஆ. குறுகிய கால, நீண்ட கால குறிக்கோள்களை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மாணவருக்குப் புரிய வையுங்கள்.

  3.  இ. மாணவர் செய்யும் முன்னேற்றத்தை அடிக்கடி பாராட்டுங்கள்.

4. முன்னேற எது தடை என்று கண்டுபிடியுங்கள், அதைத் தாண்ட உதவுங்கள்

  1.   அ. இப்படி யோசியுங்கள்:

    • ‘என் மாணவர் ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு ஏன் முன்னேறாமல் இருக்கிறார்?’

    • ‘நான் எப்படி அவருக்கு உதவலாம்?’

  2.  ஆ. அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அன்பாகவும் வெளிப்படையாகவும் சொல்வதற்கு தைரியத்தைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள்.

5. முன்னேறாத படிப்புகளை நிறுத்திவிடுங்கள்

  1.   அ. மாணவர் முன்னேறுகிறாரா இல்லையா என்று முடிவு செய்ய இப்படி யோசித்துப் பாருங்கள்:

    • ‘கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்கிறாரா?’

    • ‘சபைக் கூட்டங்களுக்கு வருகிறாரா, கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் பேசுகிறாரா?’

    • ‘ரொம்ப நாளாகப் படிப்பதால் இப்போது யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு ஆசைப்படுகிறாரா?’

  2.  ஆ. மாணவர் முன்னேற தயங்குகிறார் என்றால்:

    • அவரை எது தடுக்கிறது என்று யோசித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

    • நீங்கள் ஏன் படிப்பை நிறுத்துகிறீர்கள் என்பதை அன்பாகச் சொல்லுங்கள்.

    • மறுபடியும் படிப்பை ஆரம்பிக்க வேண்டுமென்றால், அவர் என்ன முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.