Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இணைப்பு A

நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்

நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்

பைபிளிலிருந்து நாம் சொல்லும் விஷயங்கள் உண்மை என்பதை நல்மனமுள்ள ஆட்கள் புரிந்துகொள்வார்கள் என்று இயேசு சொன்னார். (யோவான் 10:4, 27) அதனால், மற்றவர்களிடம் பேசும்போதெல்லாம் பைபிளில் இருக்கும் உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம், அதுவும் எளிமையாக! “உங்களுக்கு ஒன்று தெரியுமா . . . ” அல்லது “இதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா . . . ” என்று சொல்லிக்கூட, ஒரு உண்மையை அறிமுகப்படுத்த நாம் முயற்சி செய்யலாம். பிறகு, அந்த உண்மையோடு சம்பந்தப்பட்ட வசனத்தை அல்லது வசனங்களைப் பயன்படுத்தி அதை விளக்கலாம். நாம் சொல்லும் எளிமையான ஒரு பைபிள் உண்மைகூட ஒருவருடைய மனதில் விதை போல விழுந்துவிடலாம். அந்த விதையைக் கடவுளால் வளர வைக்க முடியும்!—1 கொ. 3:6, 7.

 எதிர்காலம்

  1. 1. இன்று நடக்கும் சம்பவங்களும் மக்களுடைய குணங்களும், ஒரு மாற்றம் சீக்கிரம் வரப்போவதைக் காட்டுகின்றன.—மத். 24:3, 7, 8; லூக். 21:10, 11; 2 தீ. 3:1-5.

  2. 2. பூமி அழியவே அழியாது.—சங். 104:5; பிர. 1:4.

  3. 3. பூமி அழகான பூஞ்சோலையாகும்.—ஏசா. 35:1, 2; வெளி. 11:18.

  4. 4. எல்லாருக்கும் முழு ஆரோக்கியம் இருக்கும்.—ஏசா. 33:24; 35:5, 6.

  5. 5. நீங்கள் பூமியில் என்றென்றும் வாழலாம்.—சங். 37:29; மத். 5:5.

 குடும்பம்

  1. 6. கணவன் ‘தன்மீது அன்பு காட்டுவதுபோல் தன் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்.’—எபே. 5:33; கொலோ. 3:19.

  2. 7. “மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.”—எபே. 5:33; கொலோ. 3:18.

  3. 8. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்.—மல். 2:16; மத். 19:4-6, 9; எபி. 13:4.

  4. 9. பெற்றோரை மதித்து அவர்களுக்குக் கீழ்ப்படியும் பிள்ளைகளுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும்.—நீதி. 1:8, 9; எபே. 6:1-3.

NASA, ESA and the Hubble Heritage Team (STScI/AURA)-ESA/Hubble Collaboration. Licensed under CC BY 4.0. Source.

 கடவுள்

  1. 10. கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது.—சங். 83:18; எரே. 10:10.

  2. 11. பைபிள் மூலம் கடவுள் நம்மிடம் பேசுகிறார்.—2 தீ. 3:16, 17; 2 பே. 1:20, 21.

  3. 12. கடவுள் நியாயமானவர், பாகுபாடு பார்க்காதவர்.—உபா. 10:17; அப். 10:34, 35.

  4. 13. நமக்கு உதவி செய்ய கடவுள் விரும்புகிறார்.—சங். 46:1; 145:18, 19.

 ஜெபம்

  1. 14. தன்னிடம் ஜெபம் செய்யும்படி கடவுள் நம்மிடம் சொல்கிறார்.—சங். 62:8; 65:2; 1 பே. 5:7.

  2. 15. நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்லித்தருகிறது.—மத். 6:7-13; லூக். 11:1-4.

  3. 16. நாம் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும்.—மத். 7:7, 8; 1 தெ. 5:17.

 இயேசு

  1. 17. இயேசு மிகச் சிறந்த போதகர், அவருடைய ஆலோசனைகள் இன்றும் உதவுகின்றன.—மத். 6:14, 15, 34; 7:12.

  2. 18. இன்று நடக்கிற சம்பவங்களைப் பற்றி இயேசு அன்றே சொன்னார்.—மத். 24:3, 7, 8, 14; லூக். 21:10, 11.

  3. 19. இயேசு கடவுளுடைய மகன்.—மத். 16:16; யோவா. 3:16; 1 யோ. 4:15.

  4. 20. இயேசு சர்வவல்லமையுள்ள கடவுள் கிடையாது.—யோவா. 14:28; 1 கொ. 11:3.

Based on NASA/Visible Earth imagery

 கடவுளுடைய அரசாங்கம்

  1. 21. கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோகத்தில் இருக்கிற நிஜமான அரசாங்கம்.—தானி. 2:44; 7:13, 14; மத். 6:9, 10; வெளி. 11:15.

  2. 22. மனித அரசாங்கங்களுக்குப் பதிலாகக் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யும்.—சங். 2:7-9; தானி. 2:44.

  3. 23. கடவுளுடைய அரசாங்கம்தான் மனிதர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும்.—சங். 37:10, 11; 46:9; ஏசா. 65:21-23.

 கஷ்டம்

  1. 24. கடவுள் கஷ்டத்தைக் கொடுப்பதில்லை.—உபா. 32:4; யாக். 1:13.

  2. 25. இந்த உலகத்தை சாத்தான் ஆட்சி செய்கிறான்.—லூக். 4:5, 6; 1 யோ. 5:19.

  3. 26. நம்முடைய கஷ்டத்தைக் கடவுள் பார்க்கிறார், நமக்கு உதவ விரும்புகிறார்.—சங். 34:17-19; ஏசா. 41:10, 13.

  4. 27. எல்லா கஷ்டத்தையும் கடவுள் சீக்கிரம் தீர்த்துவிடுவார்.—ஏசா. 65:17; வெளி. 21:3, 4.

 மரணம்

  1. 28. இறந்தவர்களுக்கு எந்த உணர்வும் இல்லை; எந்தக் கஷ்டத்தையும் அவர்கள் அனுபவிப்பதில்லை.—பிர. 9:5; யோவா. 11:11-14.

  2. 29. இறந்தவர்களால் நமக்கு நல்லதோ கெட்டதோ செய்ய முடியாது.—சங். 146:4; பிர. 9:6, 10.

  3. 30. இறந்தவர்களைக் கடவுள் மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார்.—யோபு 14:13-15; யோவா. 5:28, 29; அப். 24:15.

  4. 31. “இனிமேல் மரணம் இருக்காது.”—ஏசா. 25:8; வெளி. 21:3, 4.

 மதம்

  1. 32. எல்லா மதங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை.—எரே. 7:11; மத். 7:13, 14, 21-23.

  2. 33. வெளிவேஷம் போடுகிறவர்களைக் கடவுள் வெறுக்கிறார்.—ஏசா. 29:13; மீ. 3:11; மாற். 7:6-8.

  3. 34. உண்மையான அன்புதான் உண்மை மதத்தின் அடையாளம்.—மீ. 4:3; யோவா. 13:34, 35.