Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இணைப்பு C

இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து படிப்பு நடத்துவது எப்படி?

இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து படிப்பு நடத்துவது எப்படி?

இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தைத் தயாரிக்கும் முன்பு சகோதரர்கள் நிறைய ஜெபம் செய்தார்கள், நிறைய ஆராய்ச்சியும் செய்தார்கள். அதனால், இந்தப் புத்தகத்திலிருந்து முழு பயனடைவதற்கு இங்கே சொல்லியிருப்பதுபோல் செய்யுங்கள்.

படிப்புக்கு முன்

  1. 1. நன்றாகத் தயாரியுங்கள். உங்கள் மாணவருடைய தேவைகள், சூழ்நிலைகள், மற்றும் நம்பிக்கைகளைப் பற்றியெல்லாம் நன்றாக யோசியுங்கள். முக்கியமாக, எந்தக் குறிப்புகளைப் புரிந்துகொள்ள அல்லது கடைப்பிடிக்க அவருக்கு உதவி தேவைப்படும் என்பதை முன்கூட்டியே யோசித்துப் பாருங்கள். “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கும் விஷயங்கள் அவருக்கு எப்படி உதவும் என்றும் யோசித்துப் பாருங்கள். தேவைப்பட்டால், அதிலிருக்கும் குறிப்புகளைப் படிப்பு நடத்தும்போது பயன்படுத்தத் தயாராக இருங்கள்.

படிப்பின்போது

  1. 2. மாணவர் ஒத்துக்கொண்டால், படிப்பின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஜெபம் செய்யுங்கள்.

  2. 3. நிறையப் பேசாதீர்கள். பாடத்தில் இருக்கும் குறிப்புகளுக்குக் கவனம் செலுத்துங்கள். மாணவர் தன் மனதில் இருப்பதைச் சொல்ல வாய்ப்பு கொடுங்கள்.

  3. 4. ஒரு புதிய பகுதியை ஆரம்பிக்கும்போது, “உள்ளே” என்று கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பை வாசியுங்கள். பிறகு, அங்கிருக்கும் ஒருசில பாடங்களின் தலைப்புகளைக் காட்டுங்கள்.

  4. 5. ஒரு பகுதியை முடித்த பிறகு, “மீண்டும் ஒரு பார்வை!” என்ற தலைப்பின் கீழ் இருக்கும் கேள்விகளைக் கலந்துபேசி, அவர் கற்றுக்கொண்ட உண்மைகளை ஞாபகம் வைக்க உதவுங்கள்.

  5. 6. ஒவ்வொரு பாடத்தையும் மாணவரோடு படிக்கும்போது:

    1. பாராக்களை வாசியுங்கள்.

    2. “வாசியுங்கள்” என்று போடப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையும் வாசியுங்கள்.

    3. தேவைப்படும்போது மற்ற வசனங்களையும் வாசியுங்கள்.

    4. “வீடியோவைப் பாருங்கள்” என்று சொல்லப்பட்டிருக்கும் எல்லா வீடியோக்களையும் போட்டுக் காட்டுங்கள் (உங்களுக்கு அந்த வசதி இருந்தால்).

    5. ஒவ்வொரு கேள்வியையும் மாணவரிடம் கேளுங்கள்.

    6. “ஆராய்ந்து பார்க்கலாம்!” பகுதியில் இருக்கும் ஒவ்வொரு படத்தையும் பார்க்கச் சொல்லுங்கள், கவனித்த விஷயங்களைச் சொல்லச் சொல்லுங்கள்.

    7. மாணவர் தன் முன்னேற்றத்தைத் தெரிந்துகொள்ள உதவுங்கள். அதற்கு, “குறிக்கோள்” பெட்டியைப் பயன்படுத்துங்கள். பெட்டியில் இருக்கும் குறிக்கோளை வைக்க... வேறு சில குறிக்கோள்களை வைக்க... அல்லது இரண்டையுமே செய்ய... அவரை உற்சாகப்படுத்துங்கள்.

    8. படிப்புக்காக அவர் தயாரித்தபோது, “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருந்த ஏதாவது ஒரு கட்டுரை அல்லது வீடியோ அவருக்கு ரொம்பப் பிடித்திருந்ததா என்று கேளுங்கள்.

    9. ஒரு பாடத்தை ஒரே படிப்பில் படித்து முடிக்க முயற்சி செய்யுங்கள்.

படிப்புக்குப் பின்

  1. 7. மாணவரைப் பற்றித் தொடர்ந்து யோசியுங்கள். அவருடைய முன்னேற்றத்தை ஆசீர்வதிக்கச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள். அவருக்கு எப்படி உதவி செய்யலாம் என்று தெரிந்துகொள்ள ஞானத்தைக் கேட்டும் ஜெபம் செய்யுங்கள்.