Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சில தகவல்கள்

சில தகவல்கள்

அட்டன்டண்டுகள் உங்களுக்கு உதவ அட்டன்டண்டுகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வாகனங்களை நிறுத்துவது, இருக்கைகளைப் பிடிப்பது, மன்றத்துக்குள் வருவது, போவது போன்ற விஷயங்களில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள்.

ஞானஸ்நானம் ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்காக மேடையின் முன்னால், இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். இதில் மாற்றம் இருந்தால் அறிவிக்கப்படும். சனிக்கிழமை காலையில் ஞானஸ்நானப் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்பே ஞானஸ்நானம் எடுப்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் உட்கார வேண்டும். ஒவ்வொருவரும் துடைக்கத் துண்டும், அடக்கமான மாற்று உடையும் கொண்டுவர வேண்டும்.

நன்கொடைகள் யெகோவாவிடம் நெருங்கி வரவும், மாநாட்டை அனுபவித்து மகிழவும் போதுமான இருக்கை வசதிகள், ஒலிபெருக்கி, வீடியோ சாதனங்கள் போன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்காக அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் மனதார தரும் நன்கொடை, இந்தச் செலவுகளைச் சமாளிக்கவும் உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வசதிக்காக, நன்கொடைப் பெட்டிகள் மாநாட்டு மன்றத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. donate.pr418.com வெப்சைட்டைப் பயன்படுத்தி ஆன்லைனிலும் நன்கொடை கொடுக்கலாம். உங்கள் நன்கொடைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. உலகளாவிய வேலைக்காக நீங்கள் தாராளமாகக் கொடுக்கும் நன்கொடைகளுக்கு ஆளும் குழுவினர் நன்றி சொல்கிறார்கள்.

முதலுதவி அவசரத் தேவை ஏற்படும்போது மட்டுமே இந்த இலாகாவை அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

கண்டெடுக்கப்பட்டவை கண்டெடுக்கப்பட்ட எல்லா பொருள்களும் இந்த இலாகாவில் ஒப்படைக்கப்பட வேண்டும். நீங்கள் எதையாவது தொலைத்துவிட்டால் இந்த இலாகாவில், உங்கள் பொருளை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுங்கள். காணாமல்போன பிள்ளைகளை இங்கே ஒப்படையுங்கள். தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க, தயவுசெய்து உங்கள் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; உங்கள் கூடவே வைத்துக்கொள்ளுங்கள்.

இருக்கைகள் தயவுசெய்து மற்றவர்கள்மீது கரிசனை காட்டுங்கள். உங்களோடு வருபவர்களுக்காக, உங்கள் குடும்பத்தாருக்காக அல்லது உங்களோடு பைபிள் படிப்பவர்களுக்காக மட்டுமே இருக்கைகளைப் பிடியுங்கள். மற்ற இருக்கைகளில் எந்தப் பொருள்களையும் வைக்காதீர்கள்.

வாலண்டியர் சேவை மாநாட்டில் சேவை செய்ய விரும்பினால் தயவுசெய்து தகவல் மற்றும் வாலண்டியர் சேவை இலாகாவுக்குத் தெரிவியுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஏற்பாடு

© 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania