Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்கள்

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்கள்

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்கள்

ஆகஸ்ட் 24, 2005, புதன்கிழமை காலையில் அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள பெத்தேல் குடும்பங்களுக்கு வீடியோ மூலம் சந்தோஷமான ஓர் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. செப்டம்பர் 1, 2005 முதற்கொண்டு இரண்டு புதிய அங்கத்தினர்கள்​—⁠ஜெஃப்ரி டபிள்யூ. ஜாக்ஸனும் மூன்றாம் ஆந்தணி மாரிஸும்​—⁠யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 1971-⁠ல், ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான டாஸ்மேனியாவில் சகோதரர் ஜாக்ஸன் பயனியர் ஊழியம் தொடங்கினார். அவர் ஜூன் 1974-⁠ல் ஜனட் (ஜெனி) என்பவரை மணந்தார். அதற்கு சில காலத்திற்குப் பிறகு அவர்கள் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். 1979 முதல் 2003 வரை தென் பசிபிக்கிலுள்ள துவாலூ, சமோவா, பிஜி ஆகிய தீவு நாடுகளில் மிஷனரிகளாக சேவை செய்தார்கள். இத்தீவுகளில் இருந்தபோது, பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்கும் வேலையிலும் அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். 1992 முதற்கொண்டு, சகோதரர் ஜாக்ஸன், சமோவா கிளை அலுவலகக் குழு அங்கத்தினராகவும், 1996 முதற்கொண்டு பிஜி கிளை அலுவலகக் குழு உறுப்பினராகவும் சேவை செய்தார். ஏப்ரல் 2003-⁠ல், அவரும் ஜெனியும் அமெரிக்க பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர் ஆனார்கள்; அங்கே மொழிபெயர்ப்பு துறையில் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே, ஆளும் குழுவினுடைய போதனா குழுவிற்கு ஓர் உதவியாளராக ஜாக்ஸன் நியமிக்கப்பட்டார்.

சகோதரர் மாரிஸும்கூட 1971-⁠ல் அமெரிக்காவில் பயனியர் சேவை தொடங்கினார். அந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சூஸன் என்பவரை மணந்தார். அவர்களுடைய முதல் மகன் ஜெஸி பிறக்கும் வரையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்தார்கள். பிற்பாடு, இரண்டாவது மகன் பால் பிறந்தான். 1979-⁠ல் சகோதரர் மாரிஸ் ஒழுங்கான பயனியராக மீண்டும் முழுநேர ஊழியத்தில் இறங்கினார். பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்த பிறகு அவருடைய மனைவியும் பயனியர் சேவை செய்யத் தொடங்கினார். அமெரிக்காவில் தேவை அதிகமுள்ள இடங்களான ரோட் தீவிலும் வடக்கு கரோலினாவிலும் அவரது குடும்பத்தினர் சேவை செய்தார்கள். வடக்கு கரோலினாவில் சகோதரர் மாரிஸ் உதவி வட்டார கண்காணியாக சேவை செய்தார், பிள்ளைகள் இருவரும் ஒழுங்கான பயனியர் சேவை செய்தார்கள். ஜெஸியும் பாலும் 19-⁠ம் வயதில் அமெரிக்க கிளை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்கள். இதற்கிடையே, சகோதரர் மாரிஸ் வட்டாரக் கண்காணியாக சேவை செய்யத் தொடங்கினார். அடுத்து, 2002-⁠ல் அவரும் சூஸனும் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டார்கள், அங்கு தங்களுடைய புதிய நியமிப்பை ஆகஸ்ட் 1-⁠ல் துவங்கினார்கள். பாட்டர்ஸனில் சகோதரர் மாரிஸ் ஊழிய துறையில் வேலை செய்தார். பிற்பாடு ஆளும் குழுவினுடைய ஊழியக் குழுவுக்கு ஓர் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்தப் புதிய அங்கத்தினர்களைத் தவிர, சி. டபிள்யூ. பார்பர், ஜே. இ. பார், எஸ். எஃப். ஹெர்ட், எம். எஸ். லெட், ஜி. லாஷ், டி. ஜாரஸ், ஜி. எச். பியர்ஸ், ஏ. டி. ஷ்ரோடர், டி. எச். ஸ்ப்ளேன், டி. சிட்லிக் ஆகியோரும் ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஆளும் குழுவின் உறுப்பினர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்.