Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவை பேதுரு மறுதலித்த சம்பவம்

இயேசுவை பேதுரு மறுதலித்த சம்பவம்

இளம் வாசகருக்கு

இயேசுவை பேதுரு மறுதலித்த சம்பவம்

அறிவுரைகள்: ஓர் அமைதியான சூழலில் இந்த பைபிள் பகுதியை ஆழ்ந்து படியுங்கள். வசனங்களை வாசிக்கையில் நீங்களும் அங்கே இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். காட்சிகளை மனக்கண்ணில் ஓடவிடுங்கள். அங்கு ஒலிக்கும் சத்தங்களைக் கேளுங்கள். முக்கிய கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை நீங்கள் உணர்ந்து பாருங்கள்.

காட்சியை மனத்திரையில் ஓடவிடுங்கள்.—மத்தேயு 26:31-35, 69-75-ஐ வாசியுங்கள்.

இக்காட்சியில் எத்தனைபேர் இருந்ததாகக் கற்பனை செய்கிறீர்கள்?

_______

பேதுருவிடம் கேள்வி கேட்டவர்கள் அவரிடம் சிநேகமாகக் கேட்டார்களா? ஆர்வத்துடிப்பில் கேட்டார்களா? கோபமாக கேட்டார்களா? அல்லது வேறு ஏதாவது எண்ணத்துடன் கேட்டார்களா?

_______

பேதுரு இயேசுவுடன் இருந்ததாக மற்றவர்கள் அடித்துக் கூறியபோது அவர் எப்படி உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

_______

இயேசுவை பேதுரு ஏன் மறுதலித்தார்? அவர்மீது பேதுருவிற்கு அந்தளவுக்கு அன்பு இல்லாததாலா அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலா?

_______

ஆழ்ந்து ஆராயுங்கள்.—லூக்கா 22:31-34; மத்தேயு 26:55-58; யோவான் 21:9-17-ஐ வாசியுங்கள்.

பேதுரு தவறு செய்ததற்கு அவருடைய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை எப்படிக் காரணமாக இருந்திருக்கலாம்?

_______

பேதுரு தவறு செய்யப்போவதை இயேசு அறிந்திருந்தும் அவர்மீது தமக்கு நம்பிக்கை இருந்ததை எவ்வாறு காண்பித்தார்?

_______

இயேசுவை பேதுரு மறுதலித்தபோதிலும், மற்ற சீஷர்களைவிட தனக்கு அதிக தைரியம் இருந்ததை அவர் எவ்வாறு காண்பித்தார்?

_______

பேதுருவை இயேசு மன்னித்தார் என்பதை எப்படிக் காட்டினார்?

_______

“நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்று இயேசு ஏன் பேதுருவிடம் மூன்றுமுறை கேட்டார்?

_______

இயேசுவுடன் இந்த உரையாடலுக்குப் பிறகு பேதுரு எப்படி உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

_______

கற்றுக்கொண்டதைக் கடைப்பிடியுங்கள். பின்வருபவை குறித்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை எழுதுங்கள்:

மனித பயம்.

_______

தம்முடைய சீஷர்கள் தவறு செய்தபோதிலும் அவர்களிடம் இயேசு கரிசனையோடு நடந்துகொண்ட விதம்.

_______

_______

இந்த பைபிள் பதிவில் உங்கள் மனதைத் தொட்ட மிக முக்கியமான விஷயம் எது, ஏன்?

_______ (w08 1/1)