Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மைக் கடவுளைப்பற்றி

உண்மைக் கடவுளைப்பற்றி

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்

உண்மைக் கடவுளைப்பற்றி

கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறதா?

கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என இயேசு கற்பித்தார். “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று அவர் சொன்னார். (மத்தேயு 6:9) கடவுளுடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 83:17) இயேசு தமது சீஷர்களைப்பற்றி தம் தந்தையிடம் ஜெபம் செய்கையில், “உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்” என்றார்.—யோவான் 17:26.

யெகோவா யார்?

யெகோவாவே சகலத்தையும் படைத்தவர் என்பதால் இயேசு அவரை ‘ஒன்றான மெய்த்தேவன்’ என்று அழைத்தார். (யோவான் 17:3) ‘ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதை . . . நீங்கள் வாசிக்கவில்லையா?’ என்று அவர் சொன்னார். (மத்தேயு 19:4, 5) “தேவன் ஆவியாயிருக்கிறார்” என்றும் சொன்னார். (யோவான் 4:24) கடவுள் ஆவியாயிருப்பதால் நம்மால் அவரைப் பார்க்க முடியாது.—யாத்திராகமம் 33:17-20.

நாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார்?

ஒருவர் இயேசுவிடம் வந்து, கட்டளைகளிலேயே மிக முக்கியமான கட்டளை எது என்று கேட்டார். அதற்கு இயேசு இவ்வாறு பதில் அளித்தார்: “இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] ஒருவரே கர்த்தர் [யெகோவா, NW]. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [யெகோவாவிடத்தில், NW] உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.”—மாற்கு 12:28-31.

நாம் கடவுளை நேசிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

நான் “பிதாவில் அன்பாயிருக்கிறேன்” என்று இயேசு கூறினார். அந்த அன்பை அவர் எப்படி வெளிக்காட்டினார்? “பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன்” என்று அவர்தாமே சொன்னார். (யோவான் 14:31) ‘பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’ என்று அவர் மேலும் சொன்னார். (யோவான் 8:29) கடவுளைப்பற்றி கற்றுக்கொள்வதன்மூலம் நாம் அவரை சந்தோஷப்படுத்தலாம். தம்முடைய சீஷர்களுக்காக ஜெபம் செய்யும்போது இயேசு என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மை . . . அறிவதே நித்தியஜீவன்.”—யோவான் 17:3; 1 தீமோத்தேயு 2:4-ஐயும் பாருங்கள்.

கடவுளைப்பற்றி நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?

கடவுளைப்பற்றி கற்றுக்கொள்வதற்கு ஒரு வழி, அவர் படைத்திருக்கும் காரியங்களைக் குறித்து கவனமாய் சிந்தித்து பார்ப்பது. உதாரணத்திற்கு, இயேசு சொன்னதை எடுத்துக்கொள்ளுங்கள்: “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” இந்த உதாரணத்திலிருந்து இயேசு நமக்குக் கொடுக்கும் அறிவுரை என்ன? கடவுளை சேவிப்பதற்கு, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் குறித்த கவலைகள் நமக்குத் தடையாகிவிடும்படி நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்பதே.—மத்தேயு 6:26-33.

யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான மிகச் சிறந்த வழி அவருடைய வார்த்தையான பைபிளைப் படிப்பதே. இயேசு, வேதவாக்கியங்களை ‘தேவனுடைய வசனம்’ என்று அழைத்தார். (லூக்கா 8:21) “உம்முடைய வசனமே சத்தியம்” என்று கடவுளிடம் இயேசு சொன்னார்.—யோவான் 17:17; 2 பேதுரு 1:20, 21-ஐயும் பாருங்கள்.

மக்கள் யெகோவாவைப் பற்றிய உண்மையைக் கற்றுக்கொள்ள இயேசு உதவினார். “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா” என்று இயேசுவின் சீஷர் ஒருவர் சொன்னார். (லூக்கா 24:32) கடவுளைப்பற்றி கற்றுக்கொள்ள நாம் மனத்தாழ்மையோடு இருக்கவேண்டும், கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 18:3.

கடவுளைப் பற்றிய அறிவு நமக்கு ஏன் சந்தோஷத்தை அளிக்கிறது?

நம்முடைய வாழ்க்கைக்கான நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்வதற்கு கடவுள் நமக்கு உதவுகிறார். “ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:3, NW) சிறப்பாக வாழ்வதற்கான வழியை யெகோவா நமக்குக் காட்டுகிறார். “தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே [அதற்கு கீழ்ப்படிகிறவர்களே, NW] அதிக பாக்கியவான்கள்” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 11:28; ஏசாயா 11:9-ஐயும் பாருங்கள். (w08 2/1)

இதைப்பற்றி கூடுதலான தகவலைத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் முதல் அதிகாரத்தை பாருங்கள் a

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 12-ன் படம்]

“உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.”—யோவான் 17:26

[பக்கம் 12, 13-ன் படங்கள்]

படைப்பிலிருந்தும் பைபிளிலிருந்தும் நாம் யெகோவாவைப்பற்றி கற்றுக்கொள்ள முடியும்