Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நோவா காலத்து பெருவெள்ளம் கற்பனையல்ல, நிஜம்

நோவா காலத்து பெருவெள்ளம் கற்பனையல்ல, நிஜம்

நோவா காலத்து பெருவெள்ளம் கற்பனையல்ல, நிஜம்

சண்டை சச்சரவே இல்லாத சமாதானமான உலகத்தில் வாழமாட்டோமா என்று ஏங்குகிறீர்களா? குற்றச்செயலோ கொடுமையோ இல்லாத ஓர் உலகத்தில் வாழவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், வெகு காலத்துக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை சிந்தித்தால் உங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும். இந்தச் சம்பவம், மிகவும் நல்லவராக வாழ்ந்த நோவா என்பவரைப் பற்றியது. இது ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் ஒரு பெரிய கப்பலைக் கட்டினார். அதனால், பூமியையே மூழ்கடிப்பதுபோல் ஒரு பெரிய வெள்ளம் வந்தபோது அவரும் அவருடைய குடும்பமும் உயிர் தப்பினார்கள், கெட்டவர்களோ அழிந்துபோனார்கள்.

உலகமே அறிந்த கதைகளில் இதுவும் ஒன்று. நோவாவைப் பற்றிய பதிவு ஆதியாகமம் என்ற பைபிள் புத்தகத்தில் 6 முதல் 9 அதிகாரங்களில் இருக்கிறது. அதற்கு பிறகு இது குரானிலும் உலகிலுள்ள ஏராளமான புராணக் கதைகளிலும் எழுதப்பட்டுள்ளது. அந்தப் பெருவெள்ளம் உண்மையிலே வந்ததா? அல்லது மக்கள் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட ஒரு கதையா? இறையியல் வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் இதைப்பற்றி பல நூற்றாண்டுகளாக விவாதம் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தப் பதிவு கற்பனையல்ல நிஜம்தான் என்று கடவுள் தந்திருக்கிற புத்தகமாகிய பைபிள் ஆணித்தரமாகச் சொல்கிறது. சரி, இதைச் சிந்தித்துப் பாருங்கள்:

இந்த அழிவு எந்த வருடம், எந்த மாதம், எந்த நாள் வந்ததென்று பைபிள் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. அதுமட்டுமல்ல, அந்தப் பெரிய கப்பல் மிதந்துபோய் எங்கே கடைசியாக நின்றது, எப்போது நின்றது, தண்ணீரெல்லாம் எப்போது வற்றிப்போனது என்பதையும் தெளிவாகச் சொல்கிறது. அந்தக் கப்பலின் வடிவமைப்பு, அளவு, அதைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகிய விவரங்கள்கூட துல்லியமாக கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கட்டுகதைகளிலோ இவ்வளவு நுட்பமான விவரங்கள் இருக்காது.

நோவா நிஜமாகவே வாழ்ந்தவர் என்று பைபிளிலுள்ள இரண்டு வம்சாவளி பட்டியல் காட்டுகின்றன. (1 நாளாகமம் 1:4; லூக்கா 3:36) இந்தப் பட்டியலைத் தயாரித்த எஸ்ரா, லூக்கா ஆகிய இரண்டு பேருமே கவனமாக ஆராய்ச்சி செய்தவர்கள். இயேசு கிறிஸ்து நோவாவுடைய வம்சத்திலிருந்து வந்தார் என்று லூக்கா ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

நோவாவைப் பற்றியும் பெருவெள்ளத்தைப் பற்றியும் தீர்க்கதரிசிகளான ஏசாயாவும் எசேக்கியேலும் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்படும் கிறிஸ்துவின் விசேஷ ஊழியர்களான பவுலும் பேதுருவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.​—ஏசாயா 54:9; எசேக்கியேல் 14:14, 20; எபிரெயர் 11:7; 1 பேதுரு 3:19, 20; 2 பேதுரு 2:5.

பெருவெள்ளத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.” (லூக்கா 17:26, 27) அந்தப் பெருவெள்ளம் நிஜமாகவே வரவில்லை என்றால் ‘மனுஷகுமாரனுடைய நாட்கள்’ பற்றி இயேசு சொன்னது அர்த்தமற்றதாக இருக்கும்.

கடைசி நாட்களில் ‘ஏளனம் செய்பவர்கள்’ இருப்பார்கள் என்றும் பைபிள் சொல்வதை அவர்கள் அசட்டை செய்வார்கள் என்றும் அப்போஸ்தலன் பேதுரு பல ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். “வெள்ளப்பெருக்கினால் [நோவாவின்] உலகம் அழிவுற்றது” என்பதை “இவர்கள் வேண்டுமென்றே மறந்து விடுகிறார்கள்” என்று அவர் எழுதினார். இந்த உண்மையை நாமும் வேண்டுமென்றே மறந்துவிட வேண்டுமா? நிச்சயம் அப்படி இருக்கக் கூடாது. “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் . . . அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது” என்று பவுல் தொடர்ந்து எழுதினார்.​—2 பேதுரு 3:3–7; பொது மொழிபெயர்ப்பு.

மறுபடியும் கடவுள், கெட்டவர்களை அழித்து, நல்லவர்களைக் காப்பாற்ற போகிறார். நோவாவின் மாதிரியைப் பின்பற்றினால் சமாதானமான உலகில் வாழப்போகும் நல்லவர்களில் நாமும் ஒருவராய் இருப்போம். (w08 6/1)