Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘குறித்த காலம்’ அருகில்!

‘குறித்த காலம்’ அருகில்!

‘குறித்த காலம்’ அருகில்!

ஆபகூக் தீர்க்கதரிசியைப் போலவே இயேசுவின் சீடர்களும் துன்பம் தீர்க்கப்படுவதைக் காண ஏங்கினார்கள். கடவுளுடைய அரசாங்கம் பூமியில் நிலைமைகளைச் சரிசெய்யப்போவதைப் பற்றி அறிந்துகொண்ட பிறகு, அவர்கள் இயேசுவிடம் இவ்வாறு கேட்டார்கள்: “இவையெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்திற்கும் [ஆட்சிக்கும்] இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்திற்கும் அடையாளம் என்ன?” (மத்தேயு 24:3) அதற்கு இயேசு, பூமிமீது அந்த அரசாங்கம் எப்போது முழுமையாக ஆட்சி செய்யும் என்பது யெகோவா தேவனுக்கு மட்டுமே துல்லியமாகத் தெரியுமென பதிலளித்தார். (மத்தேயு 24:36; மாற்கு 13:32) என்றாலும், அந்தக் காலம் அருகிலிருப்பதைக் காட்டும் சில சம்பவங்களை இயேசுவும் மற்றவர்களும் முன்கூட்டியே சொன்னார்கள்.—வலது பக்கத்திலுள்ள பெட்டியைப் பாருங்கள்.

இந்தச் சம்பவங்கள் இன்று எங்கும் நடப்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா? உலகெங்கும் கல்வி புகட்டும் ஒரு வேலை நடக்கும் என்றும் இயேசு முன்கூட்டியே சொன்னார். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று அவர் சொன்னார்.—மத்தேயு 24:14.

அவர் சொன்னபடியே அந்த வேலை இன்று நடக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் அதைச் செய்து வருகிறார்கள். சுமார் 236 நாடுகளில், எழுபது லட்சத்திற்கும் அதிகமான சாட்சிகள், கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யவிருக்கிறது என்பதை மக்களுக்குச் சொல்கிறார்கள்; துன்பத்தையும் வேதனையையும் தீர்ப்பதே கடவுளுடைய நோக்கம் என்பதைக் கற்பிக்கிறார்கள்; அதோடு, கடவுள் எதிர்பார்க்கிற நீதியான செயல்களைச் செய்ய அவர்களுக்கு உதவுகிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித் தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, துன்பமில்லா உலகில் என்றென்றும் வாழும் வாய்ப்பைப் பெறுவீர்கள். (w09 12/01)

[பக்கம் 8-ன் பெட்டி]

கடைசி நாட்களைச் சுட்டிக்காட்டும் வசனங்கள்

மத்தேயு 24:6, 7; வெளிப்படுத்துதல் 6:4

• முன்னொருபோதும் இல்லாதளவுக்குப் போர்கள்

மத்தேயு 24:7; மாற்கு 13:8

• மிகப் பெரிய பூகம்பங்கள்

• பஞ்சங்கள்

லூக்கா 21:11; வெளிப்படுத்துதல் 6:8

• கொள்ளைநோய்கள்

மத்தேயு 24:12

• அக்கிரமம் அதிகமாதல்

• அன்பு தணிந்துபோதல்

வெளிப்படுத்துதல் 11:18

• பூமியை நாசமாக்குதல்

2 தீமோத்தேயு 3:2

• மிதமிஞ்சிய பண ஆசை

• பெற்றோருக்குக் கீழ்ப்படியாதிருத்தல்

• அளவுக்கு மிஞ்சிய சுயநலம்

2 தீமோத்தேயு 3:3

• பந்தபாசம் இல்லாதிருத்தல்

• எதற்குமே ஒத்துப்போகாதிருத்தல்

• சமுதாயத்தில் எல்லா வித மக்களும் சுயக்கட்டுப்பாடு இழந்திருத்தல்

• நல்ல காரியங்களை விரும்பாதவர்கள் எங்கும் காணப்படுதல்

2 தீமோத்தேயு 3:4

• கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசித்தல்

2 தீமோத்தேயு 3:5

• அநேகர் தங்களைக் கிறிஸ்தவர்கள் போல் காட்டிக்கொள்ளுதல்

மத்தேயு 24:5, 11; மாற்கு 13:6

• அநேக போலித் தீர்க்கதரிசிகள் மும்முரமாய்ச் செயல்படுதல்

மத்தேயு 24:9; லூக்கா 21:12

• உண்மைக் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுதல்

மத்தேயு 24:39

• பைபிளின் எச்சரிக்கைகளுக்கு மக்கள் கவனம் செலுத்தாதிருத்தல்

[பக்கம் 8-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பூமியெங்கும் கற்பிக்கிறார்கள்