Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

அப்போஸ்தலன் பவுல் எதை மனதில் வைத்து ‘வெற்றி ஊர்வலத்தை’ பற்றிக் குறிப்பிட்டார்?

“கடவுள் நம்மை . . . கிறிஸ்துவுடன் வெற்றி ஊர்வலத்தில் நடத்திச் செல்வதற்காகவும், தம்மைப் பற்றிய அறிவின் வாசனையை நம் மூலமாக எல்லா இடங்களிலும் பரவச் செய்வதற்காகவும் அவருக்கு நன்றி சொல்கிறேன். மீட்பின் வழியில் இருப்பவர்கள் மத்தியிலும் அழிவின் வழியில் இருப்பவர்கள் மத்தியிலும் நாம் கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கும்போது, கடவுளுக்குமுன் இனிய வாசனையாக இருக்கிறோம். அழிவின் வழியில் இருப்பவர்களுக்கு மரணத்தை உண்டாக்கும் மரண வாசனையாகவும், மீட்பின் வழியில் இருப்பவர்களுக்கு வாழ்வை அளிக்கும் வாழ்வின் வாசனையாகவும் இருக்கிறோம்” என்று பவுல் எழுதினார்.—2 கொ. 2:14-16.

எதிரிகளை வென்று வீழ்த்திய படைத் தளபதியைக் கௌரவிப்பதற்காக ஆரவாரத்தோடு ஊர்வலம் செல்லும் ரோமர்களின் பழக்கத்தையே அப்போஸ்தலன் இங்கு குறிப்பிட்டார். அந்த ஊர்வலத்தின்போது, கொள்ளையடித்த பொருள்களை எடுத்துச் செல்வார்கள், சிறைபிடித்த கைதிகளை இழுத்துச் செல்வார்கள், பலி செலுத்துவதற்கு காளைகளையும் கொண்டு செல்வார்கள்; வெற்றிவாகை சூடிய தளபதியும் அவருடைய படைவீரர்களுமோ மக்களின் பாராட்டைப் பெறுவார்கள். ஊர்வலத்தின் இறுதியில், காளைகளை பலி செலுத்துவார்கள், அநேக கைதிகளையும் கொலை செய்துவிடுவார்கள்.

சிலருக்கு வாழ்வையும் மற்றவர்களுக்குச் சாவையும் குறிக்கிற ‘கிறிஸ்துவின் இனிய வாசனை’ என்று பவுல் எதை மனதில் வைத்து சொன்னார்? “ஊர்வலத்தின்போது வழிநெடுக தூபம் போட்டுக்கொண்டே செல்லும் ரோமர்களின் பழக்கத்தை” மனதில் வைத்து சொல்லியிருக்கலாம் என இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. “ஜெயங்கொண்ட வீரர்களுக்கு வெற்றியைக் குறித்த அந்த நறுமணப் புகை, கைதிகளுக்கு சாவு காத்திருந்ததை நினைப்பூட்டியது” என்றும் அது சொல்கிறது. (w10-E 08/01)

[பக்கம் 28-ன் படம்]

ரோமர்களின் வெற்றி ஊர்வலத்தைச் சித்தரிக்கும் ஓவியத்தின் ஒரு பகுதி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

[படத்திற்கான நன்றி]

Photograph taken by courtesy of the British Museum