Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வருடத்தில் மிக முக்கியமான நாள் நீங்கள் தயாரா?

வருடத்தில் மிக முக்கியமான நாள் நீங்கள் தயாரா?

வருடத்தில் மிக முக்கியமான நாள் நீங்கள் தயாரா?

இயேசுவின் மரணத்திற்கு இன்னும் சில மணித்துளிகள்தான் இருந்தன; அப்போது அவர் ஒரு முக்கிய நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சி அவருடைய மரணத்தை நினைவில் வைத்துக்கொள்ள அவரது சீடர்களுக்கு உதவும். அதுதான் ‘எஜமானரின் இரவு விருந்து.’ (1 கொரிந்தியர் 11:20) “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று அவர் கொடுத்த கட்டளை அந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. (லூக்கா 22:19) இயேசு கொடுத்த இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், அவருடைய மரண நாளை மிக முக்கியமான நாளாக நினைப்பீர்கள்.

இந்த நிகழ்ச்சியை எப்போது அனுசரிக்க வேண்டும்? அது எந்தளவுக்கு முக்கியமானது? அதற்காக நீங்கள் எப்படித் தயாராகலாம்? இந்தக் கேள்விகளுக்குக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் பதில் தெரிந்துகொள்வது முக்கியம்.

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை?

பொதுவாக, முக்கிய நிகழ்ச்சிகளை நாம் வருடா வருடம்தான் நினைவுகூருவோம். டிசம்பர் 26, 2004-ல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியைத் தாக்கிய சுனாமியை எடுத்துக்கொள்வோம். அதில் தங்கள் அன்புக்குரியவர்களைப் பறிகொடுத்தவர்கள் தினம் தினம் அதை நினைத்து வேதனைப்படுவார்கள். இருந்தாலும், ஒவ்வொரு வருடமும் அந்த நாள் வரும்போது, அதை மிக அதிகமாக நினைத்துப் பார்ப்பார்கள்.

அதுபோலவே, பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்களும் முக்கியமானச் சம்பவங்களை வருடா வருடம் நினைத்துப் பார்த்தார்கள். (எஸ்தர் 9:21, 27) எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்களை யெகோவா தேவன் அற்புதமாக விடுதலை செய்தபோது, அதை வருடந்தோறும் கொண்டாடும்படி கட்டளையிட்டார். பஸ்கா பண்டிகை என பைபிள் அதை அழைக்கிறது. இஸ்ரவேல் மக்கள் ஒவ்வொரு வருடமும் தாங்கள் விடுதலை செய்யப்பட்ட அந்த நாளில் இந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.—யாத்திராகமம் 12:24-27; 13:10.

இந்த பஸ்கா பண்டிகையைத்தான் இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும் முதலில் கொண்டாடினார்கள்; அதற்குப் பின்பு, இயேசு இந்த விசேஷ நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். வருடா வருடம் அவரது மரண நாள் எப்படி அனுசரிக்கப்பட வேண்டும் என்பதை இதன் மூலம் காட்டினார். (லூக்கா 22:7-20) பஸ்கா பண்டிகை வருடா வருடம் கொண்டாடப்பட்டது. எனவே, அதற்குப் பதிலாகத் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியும் வருடத்தில் ஒருமுறை மட்டுமே அனுசரிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தத் தேதியில்?

எந்தத் தேதியில்?

இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க நாம் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று... பைபிள் காலங்களில், ஒரு நாள் என்பது சூரியன் மறையும்போது தொடங்கி அடுத்த நாள் சூரியன் மறையும்போது முடியும். ஆகவே, ஒரு சாயங்காலத்திலிருந்து அடுத்த சாயங்காலம் வரை ஒரு நாளாகக் கணக்கிடப்பட்டது.—லேவியராகமம் 23:32.

இரண்டு... இன்று நாம் பயன்படுத்துகிற காலண்டரும் பைபிள் காலத்தில் வாழ்ந்தவர்கள் பயன்படுத்தின காலண்டரும் ஒன்றல்ல. அந்த காலண்டரில் மாதங்களின் பெயர்கள் வித்தியாசமாக இருந்தன; அதாவது, மார்ச், ஏப்ரல் போன்ற பெயர்களுக்குப் பதிலாக ஆதார், நிசான் போன்ற பெயர்கள் இருந்தன. (எஸ்தர் 3:7) யூதர்கள் வளர்பிறையின் முதலாம் நாளிலிருந்து அடுத்த வளர்பிறையின் முதலாம் நாள் வரை ஒரு மாதமாகக் கணக்கிட்டார்கள். அவர்களுடைய காலண்டரில் முதல் மாதமாக இருந்த நிசான் மாதத்தின் 14-ஆம் நாளில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினார்கள். (லேவியராகமம் 23:5; எண்ணாகமம் 28:16) அதே நாளில்தான், அதாவது நிசான் 14-ஆம் தேதியில்தான் ரோமர்கள் நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைக் கழுமரத்தில் கொன்றார்கள். முதல் பஸ்கா கொண்டாடப்பட்டு 1,545 வருடங்களுக்குப் பிறகு அவர் இறந்தார். இப்போது புரிகிறதா, நிசான் 14 எவ்வளவு விசேஷமான நாள் என்று!

ஆனால், நம் காலண்டரில் நிசான் 14 எப்போது வரும்? ஒரு சின்னக் கணக்குப் போட்டால் அந்த நாளைக் கண்டுபிடித்துவிடலாம். வசந்த காலத்தில் 12 மணிநேரம் பகலும் 12 மணிநேரம் இரவும் உள்ள ஒரு நாள் வரும் (வட கோளத்தில் அப்போதுதான் வசந்தகாலம் ஆரம்பமாகும்); அந்த நாளுக்கு முன்போ பின்போ முதலாம் பிறை தெரியும், அதுவும் எருசலேமில் சூரிய மறைவுக்குப் பின் தெரியும். அன்றுதான் நிசான் 1 தொடங்குகிறது. அப்போதிலிருந்து 14 நாட்களைக் கணக்கிட்டால் நிசான் 14 வந்துவிடும். பொதுவாக, அன்றைக்குப் பௌர்ணமியாக இருக்கும். பைபிளில் சொல்லப்பட்டுள்ள இந்த முறையில் கணக்கிட்டுப் பார்த்தால், இந்த வருடத்தில் ஏப்ரல் 5, 2012 வியாழக்கிழமை அன்று நிசான் 14-ஆம் தேதி வருகிறது. *

யெகோவாவின் சாட்சிகள் இந்த வருடம் இயேசுவின் மரண நாளை அனுசரிப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அதற்காக உங்களை ‘வருக! வருக!’ என்று வரவேற்கிறார்கள். அந்தக் கூட்டம் நடைபெறுகிற இடம், நேரம் இதையெல்லாம் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளைக் கேளுங்கள். இந்த நிகழ்ச்சி காலையிலோ மத்தியானத்திலோ அல்ல, சாயங்காலம் சூரியன் மறைந்த பின்புதான் நடக்கும். ஏன்? பைபிளில் சொல்லப்பட்டுள்ளபடி, அது ‘இரவு விருந்து.’ (1 கொரிந்தியர் 11:20) இந்த வருடம், ஏப்ரல் 5, 2012 வியாழக்கிழமை சாயங்காலம்தான் இயேசுவின் மரண நினைவு நாள் தொடங்குகிறது. இயேசு இந்த விசேஷ நிகழ்ச்சியை 1,979 வருடங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதுதான் யூத காலண்டரில் நிசான் 14, இயேசு இறந்த நாள். அவருடைய மரணத்தை அன்றுதானே முக்கியமாக நினைத்துப்பார்க்க வேண்டும்!

எப்படித் தயாராகலாம்?

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வருகிற இந்த நிகழ்ச்சிக்காக நீங்கள் எப்படித் தயாராகலாம்? முதலாவது, இயேசு நமக்காகச் செய்த எல்லாவற்றையும் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசு ஏன் இறந்தார் என்பதைப் புரிந்துகொள்ளவும், அதற்கான நன்றியுணர்வை வளர்த்துக்கொள்ளவும் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? * புத்தகம் லட்சக்கணக்கானோருக்கு உதவியிருக்கிறது.—மத்தேயு 20:28.

இரண்டாவது, இயேசு இறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்களைப் படித்துப் பார்ப்பதாகும். அப்படிச் செய்தால், இந்த நிகழ்ச்சிக்காக உங்களுடைய இருதயத்தைத் தயார் செய்யலாம். அடுத்த பக்கங்களில், ஒரு அட்டவணை உள்ளது. வலது பக்கத்தில், இயேசுவின் மரணத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களை விவரிக்கிற வசனங்களும் அவற்றின் இணைப் பதிவுகளும் உள்ளன. அதோடு, அந்தப் பட்டியலில் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்  * புத்தகத்திலுள்ள சில அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன; இந்தச் சம்பவங்களை இன்னும் விளக்கமாகப் புரிந்துகொள்ள அவை உதவும்.

இடது பக்கத்தில், பைபிள் கால காலண்டரின்படியும் இன்றைய காலண்டரின்படியும் அந்தச் சம்பவங்கள் நடைபெற்ற தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நம் எஜமானரின் இரவு விருந்து நடந்த நாள் வரைக்கும் ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தன என்பதற்கான வசனங்களை பைபிளிலிருந்து வாசித்துப் பார்க்க நீங்கள் நேரம் ஒதுக்கலாமே! அப்படி ஒதுக்கினால், வருடத்தின் மிக முக்கியமான அந்த நாளுக்காக நீங்களும் தயாராகலாம் அல்லவா? (w11-E 02/01)

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 11 ஒருவேளை, இன்றுள்ள யூதர்கள் கொண்டாடுகிற பஸ்கா பண்டிகையின் தேதி வித்தியாசமாக இருக்கலாம். ஏன்? பஸ்கா பண்டிகையை அவர்கள் நிசான் 15-ஆம் தேதி கொண்டாடுகிறார்கள்; யாத்திராகமம் 12:6-ல் கடவுள் கொடுத்த கட்டளை அந்த நாளைத்தான் குறிப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். (காவற்கோபுரம் பிப்ரவரி 1, 1991 பக்கங்கள் 24, 25-ஐப் பாருங்கள்.) ஆனால், கடவுள் மோசேயிடம் கொடுத்த சட்டத்தின்படி பஸ்கா பண்டிகையை இயேசு நிசான் 14-ஆம் தேதியில்தான் கொண்டாடினார். இந்தத் தேதியை எப்படிக் கணக்கிடுவது என்பதற்கான கூடுதல் தகவலைத் தெரிந்துகொள்ள, ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 15, 1977-ல் பக்கங்கள் 383-384-ஐப் பாருங்கள்.

^ பாரா. 14 இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. பக்கங்கள் 47-56-ஐயும், 206-208-ஐயும் பாருங்கள். இந்தப் புத்தகத்தை www.watchtower.org என்ற வெப்சைட்டிலும் படிக்கலாம்.

^ பாரா. 15 இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]

இயேசுவின் மரண நாளை அனுசரியுங்கள் வியாழன், ஏப்ரல் 5, 2012

[பக்கம் 21, 22-ன் அட்டவணை/படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கடைசி வாரம்

2012 சனி மார்ச் 31

ஓய்வுநாள்

யோவான் 11:55–12:1

gt 101, பாரா. 2-4 *

நிசான் 9 (சூரியன் மறைந்த பின் ஆரம்பம்)

பைபிள் காலங்களில், ஒரு நாள் என்பது சூரியன் மறையும்போது தொடங்கி அடுத்த நாள் சூரியன் மறையும்போது முடியும்

தொழுநோயாளியாக இருந்த சீமோன் வீட்டில் விருந்து

இயேசுவின் தலையில் மரியாள் தைலத்தை ஊற்றுகிறாள்

இயேசுவையும் லாசருவையும் பார்க்க யூதர்கள் வருகிறார்கள்

மத்தேயு 26:​6-13

மாற்கு 14:​3-9

யோவான் 12:​2-11

gt 101, பாரா. 5-9

2012 ஞாயிறு ஏப்ரல் 1

▪ எருசலேமுக்குள் இயேசுவின் வெற்றிபவனி

ஆலயத்தில் கற்பிக்கிறார்

மத்தேயு 21:​1-11, 14-17

மாற்கு 11:​1-11

லூக்கா 19:​29-44

யோவான் 12:​12-19

gt 102

நிசான் 10 (சூரியன் மறைந்த பின் ஆரம்பம்)

இரவு பெத்தானியாவில் தங்குகிறார்

2012 திங்கள் ஏப்ரல் 2

▪ விடியற்காலையில் எருசலேமுக்குச் செல்கிறார்

▪ ஆலயத்திலுள்ள வியாபாரிகளைத் துரத்துகிறார்

▪ பரலோகத்திலிருந்து யெகோவா பேசுகிறார்

மத்தேயு 21:​12, 13, 18, 19

மாற்கு 11:​12-19

லூக்கா 19:​45-48

யோவான் 12:​20-50

gt 103, 104

நிசான் 11 (சூரியன் மறைந்த பின் ஆரம்பம்)

2012 செவ்வாய் ஏப்ரல் 3

▪ ஆலயத்தில் கற்பிக்கிறார் உவமைகளைப் பயன்படுத்துகிறார்,

▪ பரிசேயரைக் கண்டனம் செய்கிறார்

▪ விதவையின் காணிக்கையைப் புகழ்கிறார்

▪ எருசலேமின் அழிவை முன்னறிவிக்கிறார்

▪ தம்முடைய எதிர்கால பிரசன்னத்திற்கு அடையாளம் தருகிறார்

மத்தேயு 21:19–25:⁠46

மாற்கு 11:20–13:⁠37

லூக்கா 20:1–21:⁠38

gt 105 முதல் 112, பாரா 1 வரை

நிசான் 12 (சூரியன் மறைந்த பின் ஆரம்பம்)

2012 புதன் ஏப்ரல் 4

▪ பெத்தானியாவில் சீடர்களுடன் ஓய்வெடுக்கிறார்

▪ காட்டிக்கொடுக்க யூதாஸ் திட்டமிடுகிறான்

மத்தேயு 26:​1-5, 14-16

மாற்கு 14:​1, 2, 10, 11

லூக்கா 22:​1-6

gt 112, பாரா. 2-4

நிசான் 13 (சூரியன் மறைந்த பின் ஆரம்பம்)

2012 வியாழன் ஏப்ரல் 5

▪ பேதுருவும் யோவானும் பஸ்காவுக்காக ஏற்பாடு செய்கிறார்கள்

▪ மதியத்திற்கு மேல் இயேசுவும் மற்ற 10 அப்போஸ்தலர்களும் வந்து சேருகிறார்கள்

மத்தேயு 26:​17-19

மாற்கு 14:​12-16

லூக்கா 22:​7-13

gt 112, பாரா 5 - 113, பாரா 1

நிசான் 14 (சூரியன் மறைந்த பின் ஆரம்பம்)

▪ பஸ்கா கொண்டாடுகிறார்கள்

▪ அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுகிறார்

▪ யூதாஸை அனுப்பிவிடுகிறார்

▪ நினைவுநாள் அனுசரிப்பை ஆரம்பித்து வைக்கிறார்

மத்தேயு 26:​20-35

மாற்கு 14:​17-31

லூக்கா 22:​14-38

யோவான் 13:1–17:⁠26

gt 113, பாரா 2 - 116 முடிவு வரை

நள்ளிரவு

2012 வெள்ளி ஏப்ரல் 6

▪ கெத்செமனே தோட்டத்தில் காட்டிக்கொடுக்கப்படுகிறார், கைதுசெய்யப்படுகிறார்

▪ அப்போஸ்தலர்கள் ஓடிப்போகிறார்கள்

▪ நியாயசங்க விசாரணை

▪ இயேசுவை பேதுரு மறுதலிக்கிறார்

மத்தேயு 26:​36-75

மாற்கு 14:​32-72

லூக்கா 22:​39-62

யோவான் 18:​1-27

gt 117 முதல் 120 முடிவு வரை

▪ மறுபடியும் நியாயசங்கத்தின் முன்

▪ பிலாத்துவிடமும், ஏரோதுவிடமும் மறுபடியும் பிலாத்துவிடமும் கொண்டுபோகப்படுகிறார்

▪ மரண தண்டனை விதிக்கப்பட்டு கழுமரத்தில் அறையப்படுகிறார்

▪ மதியம் கிட்டத்தட்ட மூன்று மணிக்கு இறந்துபோகிறார்

▪ உடல் கழுமரத்திலிருந்து இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது

மத்தேயு 27:​1-61

மாற்கு 15:​1-47

லூக்கா 22:63–23:⁠56

யோவான் 18:​28-40

gt 121 முதல் 127, பாரா 7 வரை

நிசான் 15 (சூரியன் மறைந்த பின் ஆரம்பம்)

▪ ஓய்வுநாள்

2012 சனி ஏப்ரல் 7

▪ கல்லறைக்குக் காவல்காரரை நியமிக்க பிலாத்து அனுமதிக்கிறார்

மத்தேயு 27:​62-66

gt 127, பாரா. 8-9

நிசான் 16 (சூரியன் மறைந்த பின் ஆரம்பம்)

2012 ஞாயிறு ஏப்ரல் 8

▪ உயிர்த்தெழுப்பப்படுகிறார்

▪ சீடர்களுக்குக் காட்சி அளிக்கிறார்

மத்தேயு 28:​1-15

மாற்கு 16:​1-8

லூக்கா 24:​1-49

யோவான் 20:​1-25

gt 127, பாரா 10 - 129, பாரா 10

[அடிக்குறிப்பு]

^ பாரா. 29 இந்த எண்கள், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் (gt) புத்தகத்திலுள்ள அதிகாரங்களைக் குறிக்கின்றன. இயேசு கடைசியாகச் செய்த ஊழியத்தைப் பற்றிய விளக்கமான பட்டியலுக்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் புதிய உலக மொழிபெயர்ப்பு, பிற்சேர்க்கை பக்கங்கள் 621-623-ஐப் பார்க்கவும். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.