Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“அருமையான படம்!”

“அருமையான படம்!”

இந்தப் பத்திரிகையில் வரும் படங்களைப் பார்த்து எத்தனை முறை இப்படிச் சொல்லியிருப்போம்! இந்த அழகான சித்திரங்களுக்கும் புகைப்படங்களுக்கும் பின்னால் நிறைய வேலைகள் உட்பட்டிருக்கின்றன. அப்படியென்றால் அந்தப் படங்களுக்குக் கண்டிப்பாக ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அவை நம்மைச் சிந்திக்க வைக்கின்றன, மனதைத் தொடுகின்றன. முக்கியமாக, காவற்கோபுர படிப்புக்குத் தயாரிக்கவும் பதில் சொல்லவும் உதவுகின்றன.

உதாரணத்திற்கு, ஒவ்வொரு படிப்புக் கட்டுரையின் முதல் படத்தையும் எதற்காகப் போட்டிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்: அந்தப் படம் எதை விளக்குகிறது? கட்டுரையின் தலைப்போடும் முக்கிய வசனத்தோடும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? மற்ற படங்களும்கூட படிக்கிற விஷயத்தோடும் நம் வாழ்க்கையோடும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்.

காவற்கோபுர படிப்பு நடத்துபவர், ஒவ்வொரு படமும் படிக்கிற விஷயத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது, வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பற்றிச் சொல்ல சபையாருக்கு வாய்ப்பு கொடுப்பார். சில படங்களில், குறிப்பும் அது எந்தப் பாராவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் கொடுக்கப்பட்டிருக்கும். மற்ற படங்களை எந்த பாராவுடன் பொருத்துவது நல்லது என்று நடத்துபவர் தீர்மானிக்கலாம். இப்படிச் செய்யும்போது, கடவுளுடைய வார்த்தையிலுள்ள முத்தான பாடங்களை, வெறும் வார்த்தைகளாகப் பார்க்காமல் காட்சிகளாகப் பார்த்து எல்லோரும் பயனடையலாம்.

ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “கேக்மீது இருக்கும் அழகான க்ரீம் போல படங்கள்தான் கட்டுரைக்கு அழகு சேர்க்கின்றன.”