Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை | கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?

ஏன் இந்தக் கேள்வி?

ஏன் இந்தக் கேள்வி?

‘கடவுள் இல்லாமல் வாழ முடியும் என்கிறார்கள் லட்சக்கணக்கானோர், நீங்கள்?’—இது நாத்திகர்கள் எழுப்பிய ஒரு விளம்பரப் பலகையில் காணப்பட்ட கேள்வி. கடவுளே வேண்டாம் என்று அவர்கள் நினைப்பதை இது காட்டுகிறது.

மறுபட்சத்தில், கடவுளை நம்புவதாகச் சொல்லும் அநேகரும் அதற்கு நேர்மாறாகத்தான் நடக்கிறார்கள். கத்தோலிக்க தலைமை பிஷப் சால்வட்டோர் ஃபிஸிக்கெலா தன்னுடைய சர்ச் அங்கத்தினர்களைப் பற்றி சொல்கிறார்: “எங்கள் வாழ்க்கைமுறையைப் பார்த்தால் யாருமே கிறிஸ்தவர்கள் என்று சொல்லமாட்டார்கள், எங்களுக்கும் கடவுளை நம்பாதவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.”

சிலர் தங்கள் சொந்த வேலையில் மூழ்கியிருப்பதால் கடவுளைப் பற்றி யோசிப்பதே கிடையாது. அவர் எங்கேயோ கண்காணாத இடத்தில் இருப்பதால் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவர் தங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், ஏதாவது கஷ்டமோ நஷ்டமோ ஏற்பட்டால் மட்டும் அவரைத் தேடுகிறார்கள். வேலைக்காரனைப் போல், கூப்பிட்ட குரலுக்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.

இன்னும் சிலர் தங்கள் மதப் போதனைகளால் எந்த நன்மையும் இல்லை என்று நினைக்கிறார்கள், அதைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஓர் ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை என்று ஜெர்மனியைச் சேர்ந்த 76 சதவீத கத்தோலிக்கர்கள் சொல்கிறார்கள். இது பைபிளுக்கும் தங்கள் சர்ச் போதனைகளுக்கும் முரணானது. (1 கொரிந்தியர் 6:18; எபிரெயர் 13:4) இப்படி மதப் போதனைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் கத்தோலிக்க மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். அதனால்தான், அநேக மத குருமார்கள் தங்கள் மதத்தினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போல் நடக்கிறார்கள் என வருந்துகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது கடவுள் இல்லாமலேயே நம்மால் வாழ முடியுமா என்ற கேள்வி எழும்புகிறது. இந்தக் கேள்வி ஒன்றும் புதிதல்ல. மனித குலத்தின் ஆரம்பத்திலேயே கேட்கப்பட்ட கேள்விதான். பதிலைத் தெரிந்துக்கொள்ள, ஆதியாகமம் என்ற முதல் பைபிள் புத்தகத்தில் சொல்லப்படும் சில விவாதங்களுக்குக் கவனம் செலுத்துங்கள். (w13-E 12/01)