Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுடைய தாராள குணத்துக்கு நன்றியோடு இருங்கள்

யெகோவாவுடைய தாராள குணத்துக்கு நன்றியோடு இருங்கள்

யெகோவா தாராள குணமுள்ளவர். (யாக். 1:17) வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் முதல் பூமியில் இருக்கும் புல்வெளிவரை யெகோவாவின் எல்லா படைப்புகளும் அவருடைய தாராள குணத்தைப் புகழ்ந்து பாடுகின்றன.—சங். 65:12, 13; 147:7, 8; 148:3, 4.

சங்கீதக்காரன் படைப்பாளருக்கு நன்றியோடு இருந்ததால் அவர் செய்த எல்லாவற்றையும் புகழ்ந்து ஒரு பாடல் எழுதினார். “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்” என்று சொன்னார். (சங். 104:33) நீங்களும் யெகோவாவைப் புகழ ஆசைப்படுகிறீர்களா? 104-வது சங்கீதத்தை வாசிக்கும்போது நீங்களும் சங்கீதக்காரனைப் போலவே உணர்வீர்கள்.

யெகோவாவைப் போல தாராள குணமுள்ளவர் யாரும் கிடையாது

நாம் தாராள குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அதற்கான காரணங்களையும் நமக்குச் சொல்கிறார். அப்போஸ்தலர் பவுலை இப்படி எழுதும்படி யெகோவா சொன்னார்: “இந்த உலகத்தில் செல்வந்தர்களாக இருக்கிறவர்கள் மேட்டிமையாக நடந்துகொள்ளக் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிடு; நிலையற்ற செல்வங்கள்மீது நம்பிக்கை வைக்காமல், நம்முடைய மகிழ்ச்சிக்காக எல்லாவற்றையும் அள்ளி வழங்குகிற கடவுள் மீதே நம்பிக்கை வைக்க வேண்டுமென்றும் கட்டளையிடு; அதோடு, நன்மை செய்கிறவர்களாகவும், நற்செயல்களில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமென்றும் கட்டளையிடு; இவ்விதத்தில் எதிர்காலத்திற்கென்று நல்ல அஸ்திவாரத்தை அமைத்து, அதைப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டுமென்று கட்டளையிடு; இப்படிச் செய்யும்போது, உண்மையான வாழ்வைக் கண்டிப்பாக அவர்கள் அடைவார்கள்.”—1 தீ. 6:17-19.

பவுல் கொரிந்து சபையில் இருந்தவர்களுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதும்போது, நல்ல மனதோடு கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்று எழுதினார். “ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும்; ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரையே கடவுள் நேசிக்கிறார்” என்று சொன்னார். (2 கொ. 9:7) அடுத்து, தாராளமாகக் கொடுப்பவர்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன என்றும் பெற்றுக்கொள்பவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன என்றும் பவுல் சொன்னார்.—2 கொ. 9:11-14.

பவுல் அவருடைய கடிதத்தின் அந்தப் பகுதியை எழுதி முடிக்கும்போது, கடவுளுடைய தாராள குணத்திற்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பளிப்பைக் கொடுக்கிற கடவுளுக்கு நன்றி.” (2 கொ. 9:15) இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவா அவருடைய மக்களுக்குக் கொடுக்கும் எல்லா நல்ல விஷயங்களும்தான் அந்த அன்பளிப்பு! அது ரொம்ப உயர்ந்ததாக இருப்பதால் அதனுடைய மதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

யெகோவாவும் இயேசுவும் நமக்காகச் செய்திருக்கிற, இனிமேலும் செய்யப்போகிற எல்லாவற்றிற்கும் நாம் எப்படி நன்றி காட்டலாம்? யெகோவாவுடைய வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக நம் நேரம், சக்தி, பொருள் ஆகியவற்றைக் கொஞ்சமாகவோ அதிகமாகவோ கொடுப்பதன் மூலம் நாம் நன்றி காட்டலாம்!—1 நா. 22:14; 29:3-5; லூக். 21:1-4.

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 11 இந்தியாவில், “Jehovah’s Witnesses of India” என்ற பெயரில் நன்கொடைகளை அனுப்ப வேண்டும்.

^ பாரா. 13 இந்திய அரசு வழங்கிய பாஸ்போர்ட் வைத்திருக்கிறவர்கள், www.jwindiagift.org வெப்சைட்டைப் பயன்படுத்தி நன்கொடை கொடுக்கலாம்.

^ பாரா. 18 முடிவான தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு உங்கள் நாட்டின் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்.

^ பாரா. 26 ‘மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை கனம்பண்ணுங்கள்’ என்ற ஆவணம் இந்தியாவில் ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.