Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களைத் தனிப்பட்ட நபர்களின் வெப்சைட்டிலோ சோஷியல் மீடியாவிலோ ஏன் போடக் கூடாது?

பைபிள் சம்பந்தமான நம்முடைய பிரசுரங்களை நாம் விலையில்லாமல் கொடுப்பதால், அவற்றை மற்ற வெப்சைட்களிலோ சோஷியல் மீடியாவிலோ போடலாமென்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அப்படிச் செய்வது நம்முடைய வெப்சைட்களின் விதிமுறைகளை மீறுவதாக இருக்கும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இதனால், படுமோசமான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. நம்முடைய வெப்சைட்களில் இருக்கிற “படங்கள், எலெக்ட்ரானிக் பிரசுரங்கள், வர்த்தகச் சின்னங்கள், இசை, புகைப்படங்கள், வீடியோக்கள், கட்டுரைகள் ஆகியவற்றை இன்டர்நெட்டில் போட” (அதாவது, மற்ற வெப்சைட்கள், கோப்புகளைப் பரிமாறுவதற்கான சைட்கள், வீடியோக்களை பரிமாறுவதற்கான சைட்கள் அல்லது சோஷியல் மீடியாவில் போட) யாருக்கும் அனுமதி கிடையாது என்று நம்முடைய வெப்சைட்களின் விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கட்டுப்பாடு ஏன் தேவைப்படுகிறது?

காப்புரிமை பெறப்பட்ட நம்முடைய பிரசுரங்களை மற்ற வெப்சைட்களில் போட யாருக்கும் அனுமதி கிடையாது

நம்முடைய வெப்சைட்களில் இருக்கிற எல்லாவற்றுக்கும் காப்புரிமை இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளையும் மற்றவர்களையும் கவருவதற்காக, விசுவாசதுரோகிகளும் நம்மை எதிர்க்கிற மற்றவர்களும் நம்முடைய பிரசுரங்களைத் தங்களுடைய வெப்சைட்களில் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய வெப்சைட்களில் இருக்கிற தகவல்கள், அவற்றைப் படிப்பவர்களின் மனதில் சந்தேக விதைகளை விதைக்கின்றன. (சங். 26:4; நீதி. 22:5) இன்னும் சிலர், நம்முடைய பிரசுரங்களில் இருக்கிற தகவல்களை அல்லது jw.org சின்னத்தை, தங்களுடைய விளம்பரங்களிலும், தாங்கள் விற்கிற பொருள்களிலும், மொபைல் அப்ளிகேஷன்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். காப்புரிமையும் வர்த்தகச் சின்னத்துக்கான பாதுகாப்பையும் நாம் பெற்றிருப்பதால், இவற்றைத் தடுப்பதற்கு நமக்குச் சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறது. (நீதி. 27:12) நம்முடைய வெப்சைட்களில் இருக்கிறவற்றை மற்ற வெப்சைட்களில் போடுவதற்கோ, தங்களுடைய பொருள்களை விற்பதற்கு jw.org சின்னத்தைப் பயன்படுத்துவதற்கோ யாரையும் நாம் அனுமதிக்க முடியாது, அவர்கள் நம்முடைய சகோதரர்களாக இருந்தாலும்கூட! அப்படி அனுமதித்தால், மற்றவர்கள் இவற்றைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக நாம் எடுக்கிற முயற்சிகளுக்கு நீதிமன்றங்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விடலாம். அதாவது, வர்த்தக நிறுவனங்களும் நம்மை எதிர்க்கிறவர்களும் இவற்றைப் பயன்படுத்துவதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடலாம்.

நம்முடைய பிரசுரங்களை jw.org-ஐத் தவிர வேறு வெப்சைட்களிலிருந்து டவுன்லோட் செய்வது ஆபத்தானது. ஆன்மீக உணவைத் தருகிற பொறுப்பை ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ மட்டும்தான் யெகோவா கொடுத்திருக்கிறார். (மத். 24:45) ஆன்மீக உணவைக் கொடுப்பதற்கு தன்னுடைய அதிகாரப்பூர்வ வெப்சைட்களான www.pr418.com, tv.pr418.com, wol.pr418.com ஆகியவற்றை மட்டும்தான் அந்த “அடிமை” பயன்படுத்துகிறது. மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு JW Language®, JW Library®, JW Library Sign Language® ஆகிய மூன்று அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன்களை மட்டும்தான் அந்த அடிமை நமக்குக் கொடுத்திருக்கிறது. விளம்பரங்களோ, சாத்தானுடைய உலகத்தின் கறையோ இவற்றில் இருக்காது. ஆனால், ஆன்மீக உணவை மற்ற இடங்களிலிருந்து நாம் டவுன்லோட் செய்தால், தகவல்கள் மாற்றப்பட்டிருக்கலாம், தவறான கருத்துகள் அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.—சங். 18:26; 19:8.

அதோடு, கருத்துத் தெரிவிப்பதற்கு இடமளிக்கிற சில வெப்சைட்களில் நம்முடைய பிரசுரங்களைப் போடும்போது, விசுவாசதுரோகிகளும் குறை காண்பவர்களும் யெகோவாவுடைய அமைப்பின்மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற கருத்துகளை அதில் தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது. இவற்றைப் பார்க்கிற சில சகோதரர்கள் ஆன்லைன் விவாதங்களில் கலந்துகொள்ளத் தூண்டப்பட்டிருக்கிறார்கள். இது யெகோவாவின் பெயருக்குக் களங்கத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், ‘கலகம் செய்கிறவர்களுக்குச் சாந்தத்தோடு அறிவுரை சொல்வதற்கு’ இது சரியான வழி கிடையாது. (2 தீ. 2:23-25; 1 தீ. 6:3-5) அமைப்பின் பெயரிலும், ஆளும் குழுவின் பெயரிலும், ஆளும் குழு அங்கத்தினர்களின் பெயரிலும் போலியான சோஷியல் மீடியா அக்கௌண்ட்களும் வெப்சைட்களும் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், ஆளும் குழு அங்கத்தினர்கள் யாருக்குமே தனிப்பட்ட வெப்சைட்டோ சோஷியல் மீடியா அக்கௌண்ட்டோ கிடையாது.

மக்களை jw.org வெப்சைட்டைப் பார்க்கச் சொல்வதன்மூலம், “நல்ல செய்தி” பரவ உதவுகிறோம். (மத். 24:14) ஊழியத்தில் பயன்படுத்துவதற்காக நமக்குக் கொடுக்கப்படுகிற டிஜிட்டல் கருவிகளில் தொடர்ந்து பல முன்னேற்றங்கள் செய்யப்படுகின்றன. எல்லாருமே அவற்றிலிருந்து பிரயோஜனமடைய வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம். அதனால், நம்முடைய வெப்சைட்டின் விதிமுறைகளில் சொல்லப்பட்டிருக்கிறபடி, ஒரு பிரசுரத்தின் எலெக்ட்ரானிக் பிரதியை மற்றவர்களுக்கு ஈ-மெயில் மூலமாக அனுப்பலாம். அல்லது, jw.org-ல் இருக்கிற பிரசுரத்துக்கான லிங்க்கை அனுப்பலாம். ஆர்வம் காட்டுகிற மக்களிடம் நம்முடைய அதிகாரப்பூர்வ வெப்சைட்களைப் பார்க்கும்படி சொல்ல வேண்டும். இப்படி, ஆன்மீக உணவுக்கான ஒரே ஊற்றுமூலமான ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையிடம்’ அவர்களை வழிநடத்த வேண்டும்.

^ பாரா. 1 jw.org வெப்சைட்டின் முதல் பக்கத்தின் கீழே, ‘விதிமுறைகள்’ என்ற லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கிற கட்டுப்பாடுகள் நம்முடைய வெப்சைட்களில் இருக்கிற எல்லாவற்றுக்கும் பொருந்துகின்றன.