Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

கல்யாணமாகாத ஒரு ஆணும் பெண்ணும், நியாயமான காரணமில்லாமல் ஒரு ராத்திரி முழுவதும் தனியாக இருந்தால், அவர்கள் பாவம் செய்ததாகவும், அதற்காக நீதிவிசாரணைக் குழு அமைப்பதென்றும் முடிவு செய்யலாமா?

செய்யலாம்! ஏனென்றால், நியாயமான காரணமில்லாமல் ஒரு ராத்திரி முழுவதும் ஒன்றாக அவர்கள் இருந்தது, பாலியல் முறைகேட்டில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதற்கான பலமான அத்தாட்சியாக இருக்கிறது. அதனால், நீதிவிசாரணைக் குழு அமைக்க வேண்டும். ஏதாவது நியாயமான காரணம் இருந்தால், நீதிவிசாரணைக் குழு தேவையில்லை.—1 கொ. 6:18.

நீதிவிசாரணைக் குழு வேண்டுமா வேண்டியதில்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு, ஒவ்வொரு சூழ்நிலையையும் மூப்பர் குழு கவனமாக யோசித்துப்பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, அந்த இரண்டு பேரும் காதலிக்கிறார்களா? அவர்களுடைய நடத்தை சம்பந்தமாக மூப்பர்கள் ஏற்கெனவே அவர்களுக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார்களா? ராத்திரி முழுவதும் அவர்கள் தனியாக இருந்ததற்கு என்ன காரணம்? ஏற்கெனவே திட்டம்போட்டுதான் அப்படி இருந்தார்களா? அவர்கள் நினைத்திருந்தால், அந்தச் சூழ்நிலையைத் தவிர்த்திருக்க முடியுமா அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சூழ்நிலை உருவானதால் தனியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதா? அதாவது, எதிர்பாராத ஒரு சம்பவத்தாலோ, அவசர சூழ்நிலை ஏற்பட்டதாலோ, வேறு வழியில்லாமல் ராத்திரி முழுவதும் தனியாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதா? (பிர. 9:11) அவர்கள் எங்கே தூங்கினார்கள்? இதுபோன்ற விஷயங்களை மூப்பர் குழு யோசித்துப்பார்க்க வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையும் வேறுபடுவதால், மற்ற சில விஷயங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு, மூப்பர்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

எல்லா தகவல்களையும் யோசித்துப்பார்த்துவிட்டு, நீதிவிசாரணைக் குழு அமைக்க வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றி மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.