Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய அரசாங்கம்​—⁠உண்மைகள்

கடவுளுடைய அரசாங்கம்​—⁠உண்மைகள்

“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்” என்று ஜெபம் செய்ய சொல்லி இயேசு தன்னைப் பின்பற்றியவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? அது என்ன செய்யப்போகிறது? அதற்காக நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

இயேசுதான் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜா.

லூக்கா 1:31-33: “அவருக்கு இயேசு என்று நீ பெயர் வைக்க வேண்டும். அவர் உயர்ந்தவராக இருப்பார்; உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்; அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார். அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது.”

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித்தான் இயேசு முக்கியமாகப் பிரசங்கித்தார்.

மத்தேயு 9:35: “இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார், எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார்.”

கடவுளுடைய அரசாங்கம் எப்போது வரும் என்பதற்கான அடையாளத்தை இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்னார்.

மத்தேயு 24:7: “ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் ஏற்படும்.”

இன்று இயேசுவின் சீஷர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் சொல்கிறார்கள்.

மத்தேயு 24:14: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”