Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நிறைவான வாழ்க்கை—நம் கனவு!

நிறைவான வாழ்க்கை—நம் கனவு!

சந்தோஷத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் நிம்மதிக்கும் குறைவே இல்லாத ஒரு நிறைவான வாழ்க்கைக்குதான் நாம் ஆசைப்படுவோம். நிறைய பேரின் கனவும் அதுதான்!

சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற கனவு, வெறும் கனவாகவே போய்விடும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஏனென்றால், வாழ்க்கையில் திடீரென்று எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. கொரோனா பெருந்தொற்றைப் பற்றி யோசித்துப்பாருங்கள். மக்களுடைய வாழ்க்கையையே அது புரட்டிப் போட்டிருக்கிறது. பொருளாதாரச் சரிவையும் நிறைய உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், நல்ல வாழ்க்கை என்பதே கேள்விக்குறிதான் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருப்பதால், நிறைவான வாழ்க்கை வாழ என்னவெல்லாம் செய்யலாம் என்று மக்கள் யோசிக்கிறார்கள். அதற்கு, சிலர் விதியை அல்லது அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள். இன்னும் சிலர், கல்வியையும் பணத்தையும் நம்பி அதன் பின்னால் ஓடுகிறார்கள். வேறு சிலர், நல்ல மனிதனாக வாழ்ந்தாலே போதும் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

மேலே சொல்லியிருக்கிற விஷயங்கள் நிறைவான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்தக் கேள்விகளை யோசித்துப்பாருங்கள்:

  • உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை எது முடிவு செய்கிறது?

  • கல்வியும் பணமும் நிறைவான வாழ்க்கையைக் கொடுக்குமா?

  • நல்ல மனிதனாக வாழ்ந்தாலே வாழ்க்கை நன்றாக இருக்குமா?

  • நிறைவான வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறதா?

பதில்களைத் தெரிந்துகொள்ள பக்கங்களைத் திருப்புங்கள்.