Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத்தை முடிவுசெய்யும்

நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் எதிர்காலத்தை முடிவுசெய்யும்

கிட்டத்தட்ட 3,500 வருஷங்களுக்கு முன்பு, யெகோவா தன்னை வணங்கும் மக்களிடம் நிறைவான வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னது இதுதான்: “உங்கள் முன்னால் நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். நீங்களும் உங்கள் சந்ததிகளும் பிழைப்பதற்காக . . . வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”—உபாகமம் 30:19, 20.

அன்றிருந்த மக்கள், பிரகாசமான வாழ்க்கை கிடைக்க ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டியிருந்தது. இன்று, நாமும் அதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ‘கடவுளாகிய யெகோவாமேல் அன்பு காட்டி, அவருடைய பேச்சைக் கேட்டு நடக்க’ வேண்டும் என்று முடிவெடுத்தால் நமக்கும் பிரகாசமான எதிர்காலம் கிடைக்கும் என்று பைபிள் சொல்கிறது.—உபாகமம் 30:20.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பைபிளைப் படியுங்கள்: யெகோவாமேல் அன்பை வளர்த்துக்கொள்ள, முதலில் அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு, பைபிள் உங்களுக்கு உதவும்! அவரைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும்போது, அவருக்கு உங்கள்மேல் எவ்வளவு பாசம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ‘அவர் உங்கள்மேல் அக்கறையாக இருப்பதால்’ நீங்கள் அவரிடம் பேச வேண்டும் என்று, அதாவது ஜெபம் செய்ய வேண்டும் என்று, அவர் எதிர்பார்க்கிறார். (1 பேதுரு 5:7) நீங்கள் அவரிடம் நெருங்கி போக முயற்சி எடுக்கும்போது, அவரும் “உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.

கற்றுக்கொண்டதன்படி செய்யுங்கள்: பைபிள் ஆலோசனைகளின்படி செய்யும்போது நீங்கள் யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்படிச் செய்யும்போது, ‘வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும், நீங்கள் ஞானமாகவும் நடப்பீர்கள்.’—யோசுவா 1:8.