Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புன்னகை பூத்ததால்...

புன்னகை பூத்ததால்...

பிலிப்பைன்ஸில் இருக்கும் பகுயோ நகரத்தின் வியாபாரப் பகுதி! இரண்டு பெண்கள் அந்த வழியாக நடந்துபோகிறார்கள். ஒரு வீல் ஸ்டாண்டு அவர்கள் கண்ணில் படுகிறது. ஆனால் அதன் பக்கத்தில் அவர்கள் போகவில்லை. வீல் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஹெலன் என்ற சகோதரி அவர்களைப் பார்த்து புன்னகை செய்கிறார். அது அவர்களுடைய மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது.

கொஞ்ச நேரம் கழித்து, அந்தப் பெண்கள் தங்கள் வீட்டுக்கு பஸ்சில் போய்க்கொண்டிருக்கிறார்கள். அப்போது, ராஜ்ய மன்றத்தில் இருக்கும் jw.org போர்டைப் பார்க்கிறார்கள். இந்த வார்த்தைகள்தான் வீல் ஸ்டாண்டிலும் இருந்தது அவர்களுடைய ஞாபகத்துக்கு வருகிறது. உடனே, பஸ்சைவிட்டு இறங்குகிறார்கள். கூட்டங்கள் எப்போது நடக்கும் என்ற விவரங்கள் ராஜ்ய மன்றத்தின் கதவில் போடப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள்.

அடுத்த கூட்டத்துக்கே அவர்கள் போகிறார்கள். முதலில் யாரைப் பார்த்தார்கள் தெரியுமா? ஹெலனைத்தான்! தங்களைப் பார்த்து புன்னகை செய்தது இவர்தான் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். “அவங்க என்கிட்ட வர்றத பாத்து நான் பயந்துட்டேன். அய்யயோ, என்ன தப்பு பண்ணுனோம்னு தெரியலையேனு யோசிச்சேன்” என்று ஹெலன் சொல்கிறார். ஆனால், வீல் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் ஹெலனைப் பார்த்ததாக அந்தப் பெண்கள் சொன்னார்கள்.

கூட்டத்தில் கலந்துகொண்டதும் சகோதர சகோதரிகள் அன்பாகப் பழகியதும் அவர்களுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. கூட்டம் முடிந்ததும் எல்லாரும் ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்தார்கள். அதைப் பார்த்து, ‘நாங்களும் சுத்தம் செய்றோம்’ என்று அவர்கள் சொன்னார்கள். அந்த இரண்டு பேரில் ஒருவர் இப்போது பிலிப்பைன்ஸில் இல்லை. இன்னொருவர் தொடர்ந்து கூட்டங்களுக்கு வருகிறார், பைபிள் படிப்பும் படிக்கிறார். இதெல்லாம் எப்படி நடந்தது? புன்னகை பூத்ததால்!