Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இந்த வருஷத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகைகளைப் படித்தீர்களா? கீழே இருக்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா?

யாக்கோபு 5:11-ல் சொல்லப்பட்டிருக்கிற “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்” என்ற வார்த்தைகள் என்ன உறுதியைத் தருகின்றன?

யெகோவா இரக்கமுள்ளவராக இருப்பதால் நம்முடைய பாவங்களை மன்னிக்கத் தயாராக இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், பாசத்தோடு அவர் நமக்கு உதவுகிறார் என்றும் யாக்கோபு 5:11 சொல்கிறது. நாமும் அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டும்.—w21.01, பக். 21.

தலைமை ஸ்தானத்தை யெகோவா ஏன் ஏற்படுத்தினார்?

அன்பு இருப்பதால்தான் இந்த ஏற்பாட்டை யெகோவா செய்தார். இந்த ஏற்பாடு இல்லையென்றால் யெகோவாவின் குடும்பத்தில் குழப்பம்தான் மிஞ்சும். சந்தோஷமும் இருக்காது. இந்த ஏற்பாட்டின்படி நடக்கும்போது, குடும்பத்தில் யார் முடிவுகளை எடுப்பார்கள்... யார் அவற்றை செயல்படுத்துவார்கள்... என்பதை குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் தெரிந்துவைத்திருப்பார்கள்.—w21.02, பக். 3.

மெசேஜ் அனுப்புகிற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

இந்த அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும்போது, யாரிடம் பழகுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆட்களை இணைக்கிற பெரிய பெரிய குரூப்புகளில் இருந்தால், இதைப் பற்றித் தெரிந்துகொள்வது கஷ்டம். (1 தீ. 5:13) உறுதி செய்யப்படாத விஷயங்களைப் பரப்புவது, வியாபார நோக்கத்துக்காக சகோதர சகோதரிகளைப் பயன்படுத்துவது, போன்ற ஆபத்துகள் இதில் இருக்கின்றன.—w21.03, பக். 31.

சித்திரவதை அனுபவித்து சாகும்படி இயேசுவை யெகோவா விட்டுவிட்டதற்கு என்ன சில காரணங்கள் இருக்கின்றன?

முதல் காரணம், ஒரு சாபத்திலிருந்து யூதர்களை விடுதலை செய்வதற்காக இயேசு மரக் கம்பத்தில் தொங்க வேண்டியிருந்தது. (கலா. 3:10, 13) இரண்டாவது காரணம், தலைமைக் குருவாக ஆகப்போகிற இயேசுவுக்கு யெகோவா பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது. மூன்றாவது காரணம், பயங்கரமான சோதனை வரும்போது, மனிதர்களால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டியிருந்தது. (யோபு 1:9-11)—w21.04, பக். 16-17.

ஊழியத்தில் மக்களைப் பார்க்க முடியவில்லை என்றால் என்ன செய்யலாம்?

எந்த நேரத்தில் போனால் நிறைய பேரைப் பார்க்க முடியுமோ அந்த நேரத்தில் ஊழியத்துக்குப் போங்கள். வெவ்வேறு இடங்களில் ஊழியம் செய்துபாருங்கள். வெவ்வேறு விதங்களில் ஊழியம் செய்துபாருங்கள். உதாரணத்துக்கு, கடிதம் எழுதிப் பாருங்கள்.—w21.05, பக். 15-16.

“திருச்சட்டத்தின் மூலம் திருச்சட்டத்துக்கு இறந்துவிட்டேன்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன?​ (கலா. 2:19)

திருச்சட்டம் மனிதர்களுடைய குற்றங்களை வெளிப்படுத்தியது. அதோடு, கிறிஸ்துவிடம் இஸ்ரவேலர்களை வழிநடத்தியது. (கலா. 3:19, 24) கிறிஸ்துவை பவுல் ஏற்றுக்கொள்வதற்கும் திருச்சட்டம்தான் வழிநடத்தியது. அதனால்தான், “திருச்சட்டத்துக்கு இறந்துவிட்டேன்” என்று பவுல் சொன்னார்.—w21.06, பக். 31.

சகித்திருக்கிற விஷயத்தில் யெகோவா எப்படி நமக்கு முன்மாதிரி வைத்திருக்கிறார்?

தன்னுடைய பெயர்மேல் சுமத்தப்பட்ட களங்கத்தை, தன்னுடைய உன்னத அரசாட்சிக்கு வந்த எதிர்ப்பை, தன்னுடைய பிள்ளைகளில் சிலர் தனக்கு எதிராக கலகம் செய்ததை, ஓயாமல் பிசாசு சொல்லிக்கொண்டிருக்கிற பொய்களை, தன்னுடைய ஊழியர்கள் படுகிற கஷ்டங்களை, இறந்துபோன தன்னுடைய நண்பர்களின் பிரிவை, கெட்டவர்கள் மற்றவர்களைக் கொடுமைப்படுத்துவதை, பூமியை மனிதன் நாசம் பண்ணிக்கொண்டிருப்பதை யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார்.—w21.07, பக். 9-12.

பொறுமையாக இருப்பதில் யோசேப்பிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

தன்னுடைய சகோதரர்கள் தனக்குச் செய்த அநியாயத்தை யோசேப்பு சகித்தார். எகிப்தில், அவர்மீது பொய்யான குற்றச்சாட்டு போடப்பட்டதால் பல வருஷங்கள் சிறையில் இருந்தார்.—w21.08, பக். 12.

ஆகாய் 2:6-9, 20-22 எப்படிப்பட்ட உலுக்குதலைப் பற்றிச் சொல்கிறது?

நாம் சொல்லும் நல்ல செய்தியை தேசங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், மக்கள் நிறைய பேர் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். சீக்கிரத்தில், தேசங்கள் உலுக்கப்படும்போது அவை அழியும்.—w21.09, பக். 15-19.

நாம் ஏன் சோர்ந்துபோகாமல் ஊழியம் செய்ய வேண்டும்?

நாம் எடுக்கிற முயற்சிகளை யெகோவா பார்த்து சந்தோஷப்படுகிறார். நாம் சோர்ந்துபோகாமல் இருந்தால் முடிவில்லாத வாழ்வைப் பெறுவோம்.—w21.10, பக். 25-26.

“உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்” என்ற ஆலோசனைக்குக் கீழ்ப்படிய லேவியராகமம் 19-ஆம் அதிகாரம் நமக்கு எப்படி உதவுகிறது? (1 பே. 1:15)

இந்த வசனம் லேவியராகமம் 19:2-லிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. 1 பேதுரு 1:15-ல் சொல்லப்பட்டிருக்கிற ஆலோசனைக்கு எந்தெந்த விதங்களில் கீழ்ப்படியலாம் என்பதற்கு நிறைய உதாரணங்கள் லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.—w21.12, பக். 3-4.