Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிக்க டிப்ஸ்

படிக்க டிப்ஸ்

நம்முடைய நம்பிக்கைகளில் வரும் மாற்றங்களில் எப்படி அப்-டு-டேட்டாக இருப்பது?

பைபிளைப் புரிந்துகொள்ளும் விதத்தில், யெகோவா படிப்படியாக மாற்றங்களை செய்துகொண்டிருக்கும் விறுவிறுப்பான ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். (தானி. 12:4) ஆனால், இப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். இந்த மாற்றங்களில் அப்-டு-டேட்டாக இருக்க ஏதாவது உதவி இருக்கிறதா?

யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில் இந்த எல்லா மாற்றங்களையும் தொகுத்து ஒரு பட்டியலாக கொடுத்திருக்கிறார்கள். அதில், “யெகோவாவின் சாட்சிகள்” > “கருத்துகள், நம்பிக்கைகள்” > “நம் நம்பிக்கைகளைத் தெளிவுபடுத்துதல்” என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.

நம்முடைய புரிந்துகொள்ளுதலில் சமீபத்தில் வந்த ஏதோவொரு மாற்றத்தைப் பற்றி உங்கள் தனிப்பட்ட படிப்பில் ஆராய்ச்சி செய்து பாருங்கள். எந்த வசனங்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.