Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிக்க டிப்ஸ்

தனிப்பட்ட படிப்புக்கும் குடும்ப வழிபாட்டுக்கும் டிப்ஸ்

தனிப்பட்ட படிப்புக்கும் குடும்ப வழிபாட்டுக்கும் டிப்ஸ்

நிறைய பேரோடு சேர்ந்து, கூட்டங்களிலும் மாநாடுகளிலும் நாம் யெகோவாவை வணங்குகிறோம். ஆனால் அதுமட்டுமல்ல, தனிப்பட்ட விதத்திலும் குடும்பமாகவும் அவரை வணங்குகிறோம். தனிப்பட்ட படிப்புக்கும் குடும்ப வழிபாட்டுக்கும் இதோ சில டிப்ஸ்:

  • கூட்டங்களுக்குத் தயாரியுங்கள். அதில் வரும் பாடல்களைப் பாடிப் பழகுங்கள். பதில் சொல்ல குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் தயாரியுங்கள்.

  • ஒரு பைபிள் பதிவை வாசியுங்கள். அந்தப் பதிவில் வரும் ஒரு சம்பவத்தை வரையுங்கள். அதில் கற்றுக்கொண்டதை எழுதி வையுங்கள்.

  • பைபிளில் இருக்கும் ஒரு ஜெபத்தைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். ஜெபத்தை இன்னும் நன்றாக செய்ய அது எப்படி உங்களுக்கு உதவும் என்று கலந்துபேசுங்கள்.

  • அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோவைப் பாருங்கள். அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள் அல்லது ஒரு பாராவை எழுதுங்கள்.

  • ஊழியத்துக்காகத் தயாரியுங்கள், நடித்துப் பாருங்கள்.

  • கடவுளுடைய படைப்புகளைக் கவனியுங்கள்; ஆழமாக யோசியுங்கள். யெகோவாவைப் பற்றி அவை என்ன சொல்கிறது என்று கலந்துபேசுங்கள். a

a மார்ச் 2023 காவற்கோபுரத்தில் வந்த “படைப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.