Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிக்க டிப்ஸ்

புதையல்களைக் கண்டுபிடியுங்கள்

புதையல்களைக் கண்டுபிடியுங்கள்

பைபிளை வாசிக்கும்போது புதையல்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு ஆராய்ச்சி செய்வது உதவும். அதை எப்படி செய்யலாம்?

ஆழமாக தோண்டுங்கள். பைபிள் பதிவுகளின் விவரங்களை அலசிப் பாருங்கள். உதாரணத்துக்கு, அதை யார் எழுதியது, யாருக்காக எழுதப்பட்டது, எப்போது எழுதப்பட்டது, எந்த சூழ்நிலையில் எழுதப்பட்டது, எழுதப்பட்டதற்கு முன்பும் பின்பும் என்ன நடந்தது என்றெல்லாம் யோசியுங்கள்.

பாடங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். ‘அந்த பதிவில் வருகிற மக்கள் எப்படி உணர்ந்தார்கள்? எப்படிப்பட்ட குணங்களைக் காட்டினார்கள்? நான் எப்படிப்பட்ட குணங்களைக் காட்ட வேண்டும்? எவற்றை தவிர்க்க வேண்டும்?’ போன்ற கேள்விகளை ஆராய்ச்சி செய்யுங்கள்.

கற்றுக்கொண்டபடி செய்யுங்கள். ஊழியத்திலும் மற்றவர்களிடம் பழகும் விதத்திலும் கற்றுக்கொண்டபடி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்களால் விவேகத்தோடு நடக்க முடியும். பைபிள் இப்படி சொல்கிறது: “[யெகோவாவுடைய] கட்டளைகளைக் கடைப்பிடிக்கிற எல்லாரும் மிகுந்த விவேகத்தோடு நடக்கிறார்கள்.”—சங். 111:10.

  • டிப்ஸ்: வாரநாட்களில் நடக்கும் கூட்டத்தில் வருகிற “பைபிளில் இருக்கும் புதையல்கள்” என்று பகுதியைக் கவனியுங்கள். பைபிளில் இருக்கிற விஷயங்களை வாழ்க்கையில் எப்படி பொருத்தலாம் என்பதைப் பற்றி அந்தப் பகுதி சொல்லித்தரும். நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளும் யோசித்துப்பார்க்க சில குறிப்புகளும் உதாரணங்களும் அதில் இருக்கின்றன.