Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Comstock Images/Stockbyte via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

நீங்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுப்பீர்கள்?—பைபிள் என்ன சொல்கிறது?

நீங்கள் யாரை தலைவராக தேர்ந்தெடுப்பீர்கள்?—பைபிள் என்ன சொல்கிறது?

 எந்த தலைவரை தேர்ந்தெடுப்பது என்ற முக்கியமான தீர்மானத்தை மக்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 ஆனால், இதை பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

மனித தலைவர்களுக்கு வரம்புகள் இருக்கின்றன

 எல்லா மனித தலைவர்களுக்கும் இருக்கிற ஒரு வரம்பை பற்றி பைபிள் சொல்கிறது:

  •    “உங்கள் தலைவர்களை நம்பாதீர்கள், மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது. அவர்களுடைய உயிர்மூச்சு போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள். அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.”—சங்கீதம் 146:3, 4, அடிக்குறிப்பு.

 ஒரு தலைவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி, என்றைக்காவது ஒரு நாள் அவர் மரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும். அவருக்குப்பின் ஆட்சி செய்கிறவர்கள் அவர் செய்த நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்வார்கள் என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியாது.—பிரசங்கி 2:18, 19.

 உண்மை என்னவென்றால், மனிதர்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்யும் விதத்தில் உருவாக்கப்படவில்லை என்று பைபிள் சொல்கிறது.

  •    “மனுஷனுக்குத் . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை.”—எரேமியா 10:23.

 அப்படியென்றால், இன்றைக்கு யார்தான் ஒரு சிறந்த தலைவராக இருக்க முடியும்?

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர்

 நிறைய திறமைகள் இருக்கிற, நம்பகமான ஒருவரை கடவுள் தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்தான் இயேசு கிறிஸ்து. (சங்கீதம் 2:6) கடவுளுடைய அரசாங்கத்துக்கு இயேசுதான் ராஜா. அந்த அரசாங்கம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்கிறது.—மத்தேயு 6:10.

 நீங்கள் இயேசுவை உங்களுடைய தலைவராக ஏற்றுக்கொள்வீர்களா? அப்படி செய்வது ரொம்ப முக்கியம். ஏனென்றால், பைபிள் இப்படி சொல்கிறது:

  •    “மகனுக்கு [இயேசு கிறிஸ்துவுக்கு] மதிப்பு கொடுங்கள். இல்லையென்றால், கடவுளுக்கு பயங்கர கோபம் வரும். அவருடைய கோபம் சட்டென்று பற்றியெரியும். நீங்கள் அழிந்துபோவீர்கள். அவரிடம் தஞ்சம் அடைகிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்.”—சங்கீதம் 2:12.

 நீங்கள் முடிவு செய்ய இதுதான் சரியான சமயம்! இயேசு 1914-ல் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்று பைபிள் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. சீக்கிரத்தில் கடவுளுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் நீக்கிவிடும்.—தானியேல் 2:44.

 இயேசுவை உங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு எப்படி ஆதரவு கொடுக்கலாம் என்பதை தெரிந்துகொள்ள, “கடவுளுடைய அரசாங்கத்துக்கு இப்போதே ஆதரவு கொடுங்கள்!” என்ற கட்டுரையை பாருங்கள்.