கனவு நனவாகுமே!
டவுன்லோட்:
1. கண்ணீரில் தினம் நம் வாழ்க்கை,
கரை தேடி அலைகின்றோம்.
இமை மூடி நான் பார்க்கின்றேன்
என் கண் முன்னே பூஞ்சோலையே!
(பல்லவி)
விழிகளை மூடும் கண்ணீர் எங்கே?
வலியில்லாத வாழ்க்கை நம் முன்னே!
இமைப்பொழுதும் சோகங்கள் இல்லையே!
உள்ளம் சொல்லும் அழகான வாழ்வுக்கு நன்றி!
2. ஓசை கேட்டதில்லை என் காதில்.
ஒளி இழந்தது கண்கள்.
இதோ நாளை எல்லாம் மாறும்!
இசை தேனாய் காதில் பாயும்!
(பல்லவி)
விழிகளை மூடும் கண்ணீர் எங்கே?
வலியில்லாத வாழ்க்கை நம் முன்னே!
இமைப்பொழுதும் சோகங்கள் இல்லையே!
ஆஹா ஆஹா, கோடி நன்றி தினம் நான் சொல்வேன்!
(பிரிட்ஜ்)
சிட்டாய் சுற்றி வரவே ஏங்கினேன்.
பறப்பேனே ஒருநாள் தானே!
(பல்லவி)
விழிகளை மூடும் கண்ணீர் எங்கே?
வலியில்லாத வாழ்க்கை நம் முன்னே!
மலைகளிலே ஓடும் புள்ளி மானைப் போல்
துள்ளும் காலம் இதோ கண் முன்னே!
(பல்லவி)
விழிகளை மூடும் கண்ணீர் எங்கே?
வலியில்லாத வாழ்க்கை நம் முன்னே!
ஒரு நொடியும் சோகங்கள் இல்லையே!
நன்றி சொல்கின்றோம் யெகோவாவே!