Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூஞ்சோலை நம் கண்ணெதிரே!

பூஞ்சோலை நம் கண்ணெதிரே!
  1. 1. குயில் பாட்டின் மெல்லிசையே

    காதில் ஒலிக்கின்றதே!

    வயலோர தென்றல் காற்றே

    வருடிப் போகுதே செல்லமாய்!

    என் கண்களை என்னாலே

    நம்ப முடியலயே!

    எழில் கொஞ்சும் பூமியே

    ஆஹா நம் கண் எதிரே!

  2. 2. துள்ளி ஓடும் ஆற்றுநீரில்

    அள்ளிப் பருகலாமே!

    மலையோர பயிர்களே

    தலையாட்டும் காற்றில் மெல்லமாய்!

    அமோகமாய் பலனை

    அறுவடை செய்வோமே!

    எழில் சிந்தும் பூமியே

    ஆஹா நம் கண் எதிரே!

    (பிரிட்ஜ்)

    ஓ, அருமை உள்ளங்களின்

    உறவுகள் இனிமையே!

    கண்ணீரெல்லாம் கரைந்ததே!

    விண்ணும் மண்ணும் கைதட்டுதே!

  3. 3. நண்பரெல்லாம் ஒன்றுகூடி

    அன்பைப் பரிமாறலாம்.

    நேசம் பொங்கும் நெஞ்சத்தோடு

    புது நாளை துவங்கினோமே.

    யெகோவாவுக்குச் சொன்னோமே

    கோடி கோடி நன்றியே!

    ஆசிகள் அனைத்துமே

    ஆஹா நம் கண் எதிரே!

    (பிரிட்ஜ்)

    உன் அழகு முகத்தையே

    கண்ணால் காண ஏங்கினோமே.

    உன்னை அள்ளி அணைக்கவே

    காத்து காத்து கிடந்தோமே!

  4. 4. புத்தம்புது பூமி

    கண் முன்னால் தெரியுதே!

    நம் யெகோவா சொன்னதெல்லாம்

    நிஜமாகுமே விரைவிலே!

    பறந்தோடும் சோகமெல்லாம்

    இதை நினைக்கையிலே!

    ஆசையாய் காத்திருப்போம்

    பூஞ்சோலை நம் கண் எதிரே!