பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?

நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது, இறந்த பிறகு என்ன நடக்கிறது, குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்வது போன்ற விஷயங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறதென்று நீங்கள் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

உலகம் எப்படி இருக்க வேண்டுமென கடவுள் விரும்புகிறார்?

இன்று ஏன் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம். சீக்கிரத்தில் கஷ்டங்களுக்கும் வியாதிகளுக்கும் மரணத்துக்கும் மற்ற எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுள் முடிவுகட்டுவார் என்று பைபிள் சொல்கிறது.

அதிகாரம் 1

கடவுள் யார்?

கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அவருடைய குணங்களைப் பற்றியும் அவருடைய நண்பராக ஆவது எப்படி என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 2

பைபிள்​—⁠கடவுள் தந்த புத்தகம்

உங்களுடைய பிரச்சினைகளைச் சமாளிக்க பைபிள் எப்படி உதவும்? நீங்கள் ஏன் பைபிள் தீர்க்கதரிசனங்களை நம்பலாம்?

அதிகாரம் 3

கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார்?

புதிய உலகத்தில் இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறும்போது வாழ்க்கை எப்படி இருக்கும்?

அதிகாரம் 4

இயேசு கிறிஸ்து யார்?

இயேசுதான் மேசியா என்பதையும், அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்பதையும், அவர் ஏன் யெகோவாவின் ஒரே மகன் என்று அழைக்கப்படுகிறார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 5

மீட்புவிலை​—⁠கடவுள் தந்திருக்கும் மிகச் சிறந்த பரிசு

மீட்புவிலை என்றால் என்ன? அதிலிருந்து நீங்கள் எப்படி நன்மை அடையலாம்?

அதிகாரம் 6

இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

இறந்தவர்களுடைய நிலைமையைப் பற்றியும் மனிதர்களுக்கு மரணம் வருவதற்கான காரணத்தைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 7

இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்!

நீங்கள் யாரையாவது மரணத்தில் பறிகொடுத்திருக்கிறீர்களா? அவர்களை மறுபடியும் பார்க்க முடியுமா? உயிர்த்தெழுதல் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 8

கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன

நிறைய பேருக்குப் பரமண்டல ஜெபம் தெரியும். “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன?

அதிகாரம் 9

உலக அழிவு நெருங்கிவிட்டதா?

நம்மைச் சுற்றியிருக்கும் ஆட்களுடைய செயல்களும் குணங்களும், பைபிள் சொல்கிறபடி உலக முடிவு நெருங்கிவிட்டதை எப்படிக் காட்டுகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 10

தேவதூதர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

நல்ல தேவதூதர்களையும் கெட்ட தேவதூதர்களையும் பற்றிய உண்மையை பைபிள் சொல்கிறது. இவர்கள் நிஜமானவர்களா? இவர்களால் நமக்கு உதவி செய்யவோ கெடுதல் செய்யவோ முடியுமா?

அதிகாரம் 11

ஏன் இவ்வளவு வேதனை?

உலகத்தில் உள்ள வேதனைகளுக்குக் கடவுள்தான் காரணம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வேதனைகள் வருவதற்கான காரணங்களைப் பற்றிக் கடவுள் என்ன சொல்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 12

கடவுளுடைய நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

யெகோவாவுக்குப் பிரியமாக வாழ உங்களால் முடியும். சொல்லப்போனால், நீங்கள் அவருடைய நண்பராக இருக்க முடியும்.

அதிகாரம் 13

உயிர் என்ற பரிசுக்கு மதிப்புக் காட்டுங்கள்

கருக்கலைப்பு, இரத்தம் ஏற்றுதல், மிருகங்களின் உயிர் போன்றவற்றைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்?

அதிகாரம் 14

உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க முடியும்

இயேசு அன்பு காட்டிய விதம், கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு நல்ல உதாரணம். அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

அதிகாரம் 15

கடவுளை வணங்குவதற்குச் சரியான வழி

உண்மை மதத்தைச் சேர்ந்தவர்களுடைய ஆறு அடையாளங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 16

கடவுள் விரும்புகிறபடி அவரை வணங்குங்கள்

உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது நீங்கள் என்ன சவால்களைச் சந்திக்கலாம்? அவர்களுடைய மனதைப் புண்படுத்தாத விதத்தில் நீங்கள் எப்படிப் பேசலாம்?

அதிகாரம் 17

ஜெபம்​—⁠நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்

நீங்கள் செய்யும் ஜெபத்தைக் கடவுள் கேட்கிறாரா? இதைத் தெரிந்துகொள்ள, ஜெபத்தைப் பற்றி பைபிள் சொல்லும் விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகாரம் 18

கடவுளுக்கு என்னை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா?

ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஞானஸ்நானம் எதை அடையாளப்படுத்துகிறது என்பதையும், எப்படி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 19

எப்போதுமே யெகோவாவிடம் நெருங்கியிருங்கள்

கடவுள் நமக்காகச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் நாம் எப்படி அவருக்கு அன்பும் நன்றியும் காட்ட முடியும்?

பின்குறிப்புகள்

பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? என்ற புத்தகத்திலுள்ள வார்த்தைகளுக்கான விளக்கங்கள்