பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்

படைப்புமுதல் இயேசுவின் பிறப்புவரை நடந்த சம்பவங்களையும், எதிர்காலத்தில் வரப்போகும் அரசாங்கம் வரையுள்ள விஷயங்களையும் இந்தப் புத்தகத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

இந்தப் புத்தகத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

பாடம் 1

கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்

கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. எல்லாவற்றையும் படைப்பதற்கு முன் அவர் ஏன் ஒரு தேவதூதரைப் படைத்தார்?

பாடம் 2

முதல் ஆணும் பெண்ணும்

முதல் ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார். அவர்களை ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அவர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்து, இந்த பூமி முழுவதையும் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

பாடம் 3

ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியவில்லை

ஏதேன் தோட்டத்திலிருந்த ஒரு குறிப்பிட்ட மரம் ஏன் விசேஷமாக இருந்தது? அந்த மரத்தின் பழத்தை ஏவாள் ஏன் சாப்பிட்டாள்?

பாடம் 4

கோபம் ஆபத்தானது

ஆபேல் கொடுத்த காணிக்கையைக் கடவுள் ஏற்றுக்கொண்டார். ஆனால், காயீன் கொடுத்ததை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப் பார்த்தபோது, காயீனுக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. அதனால், ஒரு மோசமான காரியத்தைச் செய்துவிட்டான்.

பாடம் 5

நோவா கட்டிய பேழை

கெட்ட தேவதூதர்கள் பூமிக்கு வந்து பெண்களைக் கல்யாணம் செய்தார்கள். அவர்களுடைய மகன்கள் ராட்சதர்களாக இருந்தார்கள், அவர்கள் பயங்கர அடாவடித்தனம் செய்தார்கள். எங்கே பார்த்தாலும் ஒரே வன்முறையாக இருந்தது. ஆனால், நோவா அவர்களைப் போல் இல்லை. அவர் கடவுளை நேசித்தார், அவருக்குக் கீழ்ப்படிந்தார்.

பாடம் 6

எட்டுப் பேர் தப்பிக்கிறார்கள்

ராத்திரி பகலாக 40 நாட்கள் மழை பெய்ததால் பெரிய வெள்ளம் வந்தது. நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் ஒரு வருஷத்துக்கும் மேல் அந்தப் பேழைக்குள் இருந்தார்கள். கடைசியில், அவர்கள் எல்லாரும் வெளியே வந்தார்கள்.

பாடம் 7

பாபேல் கோபுரம்

ஒரு நகரத்தையும் வானத்தைத் தொடுகிற அளவுக்கு ஒரு கோபுரத்தையும் மக்கள் கட்ட ஆரம்பித்தார்கள். கடவுள் ஏன் திடீரென்று அவர்களை வேறு வேறு மொழிகளில் பேச வைத்தார்?

பாடம் 8

ஆபிரகாமும் சாராளும் கீழ்ப்படிந்தார்கள்

ஆபிரகாமும் சாராளும் நகர வாழ்க்கையை விட்டுவிட்டு கானான் தேசத்தில் ஏன் நாடோடிகளாக வாழ்ந்தார்கள்?

பாடம் 9

ஒரு மகன் பிறக்கிறான்!

ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கைக் கடவுள் எப்படி நிறைவேற்றுவார்? எந்த மகன் மூலமாக அதை நிறைவேற்றுவார்? ஈசாக்கு மூலமா, இஸ்மவேல் மூலமா?

பாடம் 10

லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்

சோதோம் கொமோராமீது கடவுள் நெருப்பையும் கந்தகத்தையும் கொட்டினார். அந்த நகரங்களை அவர் ஏன் அழித்தார்? லோத்துவின் மனைவியை நாம் ஏன் நினைத்துப் பார்க்க வேண்டும்?

பாடம் 11

விசுவாசத்துக்கு வந்த சோதனை

கடவுள் ஆபிரகாமிடம், ‘தயவுசெய்து உன்னுடைய ஒரே மகனை மோரியாவில் இருக்கிற ஒரு மலையில் எனக்குப் பலி கொடு’ என்று சொன்னார். தன்னுடைய விசுவாசத்துக்கு வந்த சோதனையை ஆபிரகாம் எப்படி சந்திப்பார்?

பாடம் 12

யாக்கோபுக்குச் சொத்து கிடைக்கிறது

ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் ஏசா, யாக்கோபு என்ற இரட்டைப் பிள்ளைகள் இருந்தார்கள். ஏசா முதலில் பிறந்ததால் அவனுக்கு விசேஷச் சொத்து கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு கிண்ணம் கூழுக்காக அவன் ஏன் அதைக் கொடுத்துவிட்டான்?

பாடம் 13

யாக்கோபும் ஏசாவும் சமாதானமாகிறார்கள்

யாக்கோபுக்கு ஒரு தேவதூதரிடமிருந்து எப்படி ஆசீர்வாதம் கிடைத்தது? அவர் எப்படி ஏசாவோடு சமாதானமானார்?

பாடம் 14

கடவுளுக்குக் கீழ்ப்படிந்த ஒரு அடிமை

யோசேப்பு நல்லதைத்தான் செய்தார். ஆனாலும், ரொம்பக் கஷ்டப்பட்டார். ஏன்?

பாடம் 15

யோசேப்பை யெகோவா மறக்கவே இல்லை

யோசேப்பு அவருடைய குடும்பத்தை விட்டு ரொம்பத் தூரத்தில் வாழ்ந்தாலும், கடவுள் அவர்கூடவே இருந்தார்.

பாடம் 16

யோபு யார்?

கஷ்டங்கள் வந்தாலும் அவர் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நடந்தார்.

பாடம் 17

மோசே யெகோவாவை வணங்க முடிவு எடுத்தார்

அம்மாவின் புத்திசாலித்தனத்தால் குழந்தை மோசே காப்பாற்றப்பட்டார்

பாடம் 18

எரிகிற முட்புதர்

முட்புதர் ஏன் நெருப்பில் கருகவில்லை?

பாடம் 19

முதல் மூன்று தண்டனைகள்

திமிர் பிடித்த பார்வோன் ஒரு சாதாரண விஷயத்தைச் செய்ய மறுத்ததால், அவனுடைய மக்களுக்குப் பயங்கர கஷ்டம் வந்தது.

பாடம் 20

அடுத்த ஆறு தண்டனைகள்

இந்தத் தண்டனைகளுக்கும் முதல் மூன்று தண்டனைகளுக்கும் என்ன வித்தியாசம்?

பாடம் 21

பத்தாவது தண்டனை

பத்தாவது தண்டனைதான் படுமோசமாக இருந்தது; கடைசியில், கர்வம்பிடித்த பார்வோன் விட்டுக்கொடுத்து விட்டான்.

பாடம் 22

செங்கடலில் நடந்த அற்புதம்

பத்துத் தண்டனைகளைத் தாண்டி வந்த பார்வோன், செங்கடலில் கடவுள் செய்த அற்புதத்தில் தப்பித்தானா?

பாடம் 23

யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கு

சீனாய் மலையின் அடிவாரத்தில் கூடாரம் போட்டிருந்தபோது இஸ்ரவேலர்கள் கடவுளுக்கு ஒரு வாக்குக் கொடுத்தார்கள்.

பாடம் 24

கொடுத்த வாக்கை மீறினார்கள்

மோசே பத்துக் கட்டளைகளை வாங்கிக் கொண்டிருந்தபோது, பயங்கரமான ஒரு பாவத்தை மக்கள் செய்தார்கள்.

பாடம் 25

கடவுளை வணங்குவதற்காக ஒரு கூடாரம்

இந்த விசேஷ கூடாரத்தில் ஒப்பந்தப் பெட்டி இருந்தது.

பாடம் 26

பன்னிரண்டு உளவாளிகள்

கானான் தேசத்தை உளவு பார்த்த மற்ற 10 உளவாளிகளைவிட யோசுவாவும் காலேபும் வித்தியாசமாக இருந்தார்கள்.

பாடம் 27

யெகோவாவுக்கு எதிரான கலகம்

கோராகு, தாத்தான், அபிராம் மற்றும் 250 பேர் யெகோவாவைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

பாடம் 28

பிலேயாமின் கழுதை பேசுகிறது

பிலேயாமினால் பார்க்க முடியாத ஒருவரை அவனுடைய கழுதை பார்த்துவிட்டது.

பாடம் 29

யோசுவாவை யெகோவா தேர்ந்தெடுக்கிறார்

யோசுவாவுக்குக் கடவுள் கொடுத்த ஆலோசனைகள் நமக்கும் பிரயோஜனமாக இருக்கின்றன.

பாடம் 30

உளவாளிகளை ராகாப் ஒளித்து வைக்கிறாள்

எரிகோவின் மதில்சுவர் இடிந்து விழுந்தது. ஆனால், ராகாபின் வீடு மதிலில் கட்டப்பட்டிருந்தாலும், இடியாமல் அப்படியே இருக்கிறது.

பாடம் 31

யோசுவாவும் கிபியோனியர்களும்

“சூரியனே, அசையாமல் நில்” என்று கடவுளிடம் யோசுவா ஜெபம் செய்தார். கடவுள் பதில் கொடுத்தாரா?

பாடம் 32

புதிய தலைவரும் தைரியமுள்ள இரண்டு பெண்களும்

யோசுவா இறந்த பிறகு, இஸ்ரவேலர்கள் சிலைகளை வணங்க ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களுக்கு நிறைய கஷ்டங்கள் வந்தன. நியாயாதிபதி பாராக், பெண் தீர்க்கதரிசி தெபொராள், கூடார ஆணி வைத்திருந்த யாகேல் ஆகியோர் மூலமாக அவர்களுக்கு உதவி கிடைத்தது.

பாடம் 33

ரூத்தும் நகோமியும்

கணவனை இழந்த இரண்டு பெண்கள் இஸ்ரவேலுக்குத் திரும்பிப் போனார்கள். அவர்களில் ஒருத்தியான ரூத், வயலில் வேலை செய்ய போனாள். அங்கே போவாஸ் அவளைக் கவனித்தார்.

பாடம் 34

மீதியானியர்களை கிதியோன் தோற்கடிக்கிறார்

மீதியானியர்கள் இஸ்ரவேலர்களைப் பாடாய்ப் படுத்தியதால், அவர்கள் உதவி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சினார்கள். கிதியோனின் சிறிய படை எப்படி எதிரி படையிலிருந்த 1,35,000 வீரர்களைத் தோற்கடித்தது?

பாடம் 35

ஆண் குழந்தைக்காக அன்னாளின் ஜெபம்

அன்னாளையும் பெனின்னாளையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு சீலோவில் இருக்கிற வழிபாட்டுக் கூடாரத்துக்கு எல்க்கானா போகிறார். ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்று அன்னாள் அங்கே ஜெபம் செய்கிறாள். ஒரு வருஷத்திற்குள், சாமுவேல் பிறக்கிறான்!

பாடம் 36

யெப்தா செய்த சத்தியம்

யெப்தா என்ன சத்தியம் செய்தார், ஏன்? யெப்தா செய்த சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொண்டதும் அவருடைய மகள் என்ன சொன்னாள்?

பாடம் 37

யெகோவா சாமுவேலிடம் பேசுகிறார்

தலைமைக் குருவான ஏலியின் இரண்டு மகன்களும் வழிபாட்டுக் கூடாரத்தில் குருமார்களாகச் சேவை செய்தார்கள். ஆனால், கடவுளுடைய சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை. சாமுவேல் அவர்களைப் போல் இல்லை. யெகோவா சாமுவேலிடம் பேசினார்.

பாடம் 38

யெகோவா சிம்சோனுக்குப் பலம் தருகிறார்

பெலிஸ்தியர்களை எதிர்ப்பதற்காக சிம்சோனுக்குக் கடவுள் பலம் கொடுத்தார். ஆனால், சிம்சோன் தவறான முடிவு எடுத்ததால் பெலிஸ்தியர்களின் கையில் சிக்கினார்.

பாடம் 39

இஸ்ரவேலின் முதல் ராஜா

இஸ்ரவேலர்களை வழிநடத்த நியாயாதிபதிகளைக் கடவுள் கொடுத்திருந்தார். ஆனால் அவர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டார்கள். இஸ்ரவேலின் முதல் ராஜாவாக சவுலை சாமுவேல் அபிஷேகம் செய்தார். ஆனால், யெகோவா சவுலை ஒதுக்கிவிட்டார். ஏன்?

பாடம் 40

தாவீதும் கோலியாத்தும்

இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக தாவீதை யெகோவா தேர்ந்தெடுத்தார். தன்னைத் தேர்ந்தெடுத்தது சரிதான் என்பதை தாவீது நிரூபிக்கிறான்.

பாடம் 41

தாவீதும் சவுலும்

இவர்களில் ஒருவர் ஏன் இன்னொருவரை வெறுக்கிறார்? வெறுப்புக்கு ஆளானவர் எப்படி நடந்துகொள்கிறார்?

பாடம் 42

தைரியமும் உண்மையுமுள்ள யோனத்தான்

ராஜாவின் மகன் தாவீதின் நெருங்கிய நண்பரானார்.

பாடம் 43

தாவீது ராஜா செய்த தவறு

தவறான செயலால் நிறைய பிரச்சினைகள் வருகின்றன.

பாடம் 44

யெகோவாவுக்காக ஒரு ஆலயம்

சாலொமோன் ராஜாவின் ஜெபத்தைக் கடவுள் கேட்டார், அவருக்குப் பெரிய பொறுப்புகளைக் கொடுத்தார்.

பாடம் 45

ராஜ்யம் பிரிகிறது

இஸ்ரவேலர்கள் பலர் யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிடுகிறார்கள்

பாடம் 46

கர்மேல் மலையில் ஒரு சோதனை

உண்மையான கடவுள் யார், யெகோவாவா? பாகாலா?

பாடம் 47

யெகோவா எலியாவைப் பலப்படுத்துகிறார்

அவர் உனக்கும் பலம் தருவார் என்று நம்புகிறாயா?

பாடம் 48

விதவையின் மகன் உயிரோடு வருகிறான்

ஒரே வீட்டில் இரண்டு அற்புதங்கள்!

பாடம் 49

கெட்ட ராணிக்குத் தண்டனை

நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை யேசபேல் அபகரிக்க நினைத்தாள். அதற்காக அவரைக் கொல்ல திட்டம் போட்டாள். அவள் செய்த அக்கிரமத்தை யெகோவா பார்த்தார்.

பாடம் 50

யோசபாத்துக்கு யெகோவா உதவினார்

எதிரி தேசங்கள் யூதாவைத் தாக்க வந்தபோது, நல்ல ராஜாவான யோசபாத் கடவுளிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார்.

பாடம் 51

மாவீரரும் குட்டிப் பெண்ணும்

இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு குட்டிப் பெண், யெகோவாவின் மகா வல்லமையைப் பற்றி தன் எஜமானியிடம் சொன்னாள். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

பாடம் 52

யெகோவாவின் நெருப்பு போன்ற படை

‘அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள் அதிகம்’ என்பதை எலிசாவின் வேலைக்காரர் எப்படிப் புரிந்துகொண்டார்?

பாடம் 53

யோய்தா தைரியமாக நடந்துகொண்டார்

உண்மையுள்ள ஆலய குரு ஒருவர், பொல்லாத ராணியை எதிர்க்கிறார்.

பாடம் 54

யோனாவிடம் கடவுள் காட்டிய பொறுமை

கடவுளுடைய தீர்க்கதரிசி ஒருவர் எப்படி மீனின் வயிற்றுக்குள் போனார்? எப்படி வெளியே வந்தார்? யெகோவா அவருக்கு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுத்தார்?

பாடம் 55

யெகோவாவின் தூதர் எசேக்கியாவைக் காப்பாற்றினார்

யெகோவா தன் மக்களைக் காப்பாற்ற மாட்டார் என்று யூதாவின் எதிரிகள் சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னது தவறு!

பாடம் 56

யோசியா கடவுளின் சட்டத்தை நேசித்தார்

யோசியா எட்டு வயதில் யூதாவின் ராஜாவாக ஆனார். தன்னுடைய மக்கள் யெகோவாவை வணங்க அவர் உதவினார்.

பாடம் 57

பிரசங்கிப்பதற்கு எரேமியாவை யெகோவா அனுப்புகிறார்

இளம் எரேமியா சொன்னதைக் கேட்டு ஊர்ப் பெரியவர்களுக்குப் பயங்கர கோபம் வந்தது.

பாடம் 58

எருசலேம் அழிக்கப்படுகிறது

யூதா மக்கள் பொய்க் கடவுள்களை வணங்கி வந்ததால் யெகோவா அவர்களை விட்டுவிட்டார்.

பாடம் 59

யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்த நான்கு பையன்கள்

யூதாவைச் சேர்ந்த இளைஞர்கள் பாபிலோனில் அரண்மனையில் இருந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள்.

பாடம் 60

அழியாத ஒரு அரசாங்கம்

நேபுகாத்நேச்சார் பார்த்த வித்தியாசமான கனவுக்கு தானியேல் அர்த்தம் சொன்னார்.

பாடம் 61

அவர்கள் சிலையை வணங்கவில்லை

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் பாபிலோன் ராஜா செய்த தங்கச் சிலையை வணங்க மறுத்தார்கள்.

பாடம் 62

பெரிய மரத்தைப் போன்ற ஒரு ராஜ்யம்

நேபுகாத்நேச்சாருக்கு நடக்கப்போவதை அவனுக்கு வந்த கனவு காட்டியது.

பாடம் 63

சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகள்

புரியாத இந்த வார்த்தைகள் எப்போது எழுதப்பட்டன, அவற்றின் அர்த்தம் என்ன?

பாடம் 64

சிங்கக் குகையில் தானியேல்

தானியேல் மாதிரி நீயும் யெகோவாவிடம் தினமும் ஜெபம் செய்!

பாடம் 65

எஸ்தர் தன் மக்களைக் காப்பாற்றுகிறாள்

எஸ்தர் வேறு தேசத்தைச் சேர்ந்தவள். அநாதையாக இருந்த எஸ்தர் ஒரு ராணியானாள்.

பாடம் 66

எஸ்றா திருச்சட்டத்தைக் கற்றுக்கொடுத்தார்

எஸ்றா சொன்னதைக் கேட்ட பிறகு, இஸ்ரவேலர்கள் கடவுளிடம் ஒரு சத்தியம் செய்தார்கள்.

பாடம் 67

எருசலேமின் மதில்சுவர்கள்

எதிரிகள் தங்களைத் தாக்க திட்டம் போட்டிருந்ததை நெகேமியா தெரிந்துகொண்டார். ஆனால் அவர் ஏன் பயப்படவில்லை?

பாடம் 68

எலிசபெத்துக்குக் குழந்தை பிறக்கிறது

எலிசபெத்துக்குக் குழந்தை பிறக்கும்வரை அவளுடைய கணவரால் பேச முடியாது என்று தேவதூதர் ஏன் சொன்னார்?

பாடம் 69

காபிரியேல் மரியாளைச் சந்திக்கிறார்

அவர் சொன்ன செய்தி அவளுடைய வாழ்க்கையையே மாற்றியது.

பாடம் 70

இயேசு பிறந்ததைத் தேவதூதர்கள் அறிவிக்கிறார்கள்

அறிவிப்பைக் கேட்ட மேய்ப்பர்கள் உடனடியாக கிளம்பினார்கள்.

பாடம் 71

இயேசுவை யெகோவா காப்பாற்றினார்

ஒரு கெட்ட ராஜா இயேசுவைக் கொல்ல நினைக்கிறான்.

பாடம் 72

இளம் இயேசு

ஆலயத்தில் இருந்த போதகர்கள் ஏன் இயேசுவைப் பார்த்து அசந்துபோனார்கள்?

பாடம் 73

மேசியா வரப்போவதை யோவான் அறிவிக்கிறார்

யோவான் வளர்ந்த பிறகு, ஒரு தீர்க்கதரிசியாக ஆனார். மேசியா வரப்போவதைப் பற்றி எல்லாருக்கும் சொன்னார். அதைக் கேட்டு மக்கள் என்ன செய்தார்கள்?

பாடம் 74

இயேசு மேசியாவாக ஆகிறார்

இயேசுதான் கடவுள் அனுப்பிய ஆட்டுக்குட்டி என்று யோவான் ஏன் சொன்னார்?

பாடம் 75

இயேசுவை பிசாசு சோதிக்கிறான்

பிசாசு மூன்று தடவை இயேசுவைச் சோதிக்கிறான். அந்த மூன்று சோதனைகள் என்ன? அதற்கு இயேசு எப்படிப் பதில் கொடுத்தார்?

பாடம் 76

ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்

இயேசு ஏன் மிருகங்களை ஆலயத்திலிருந்து விரட்டினார்? காசு மாற்றுகிறவர்களின் மேஜைகளை ஏன் கீழே தள்ளினார்?

பாடம் 77

கிணற்றின் பக்கத்தில் ஒரு பெண்

இயேசு தன்னிடம் பேசியதைப் பார்த்து சமாரியப் பெண் ஏன் ஆச்சரியப்பட்டாள்? வேறு யாரிடமும் சொல்லாத எந்த விஷயத்தை இயேசு அவளிடம் சொன்னார்?

பாடம் 78

இயேசு பிரசங்கிக்கிறார்

‘மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆவதற்கு’ தன்னுடைய சீஷர்கள் சிலரை அவர் கூப்பிட்டார். பிறகு, நல்ல செய்தியைப் பிரசங்கிக்க தன்னுடைய சீஷர்களில் 70 பேருக்குப் பயிற்சி கொடுத்தார்.

பாடம் 79

இயேசு செய்த அற்புதங்கள்

இயேசு எங்கே போனாலும், நோயாளிகள் அவரிடம் வந்தார்கள். அவர்களை இயேசு குணமாக்கினார். இறந்துபோன ஒரு குட்டிப் பெண்ணைக்கூட அவர் உயிரோடு எழுப்பினார்.

பாடம் 80

இயேசுவின் 12 அப்போஸ்தலர்கள்

எதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்? அவர்களுடைய பெயர்கள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

பாடம் 81

மலைப் பிரசங்கம்

கூடிவந்த மக்களுக்கு முக்கியமான விஷயங்களை இயேசு சொல்லிக்கொடுத்தார்.

பாடம் 82

ஜெபம் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கிறார்

எப்படிப்பட்ட விஷயங்களை தன்னுடைய சீஷர்கள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்?

பாடம் 83

அற்புதமாக உணவு கொடுக்கிறார்

இந்த அற்புதத்திலிருந்து இயேசுவையும் யெகோவாவையும் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

பாடம் 84

தண்ணீர்மேல் இயேசு நடக்கிறார்

இந்த அற்புதத்தைப் பார்த்தபோது சீஷர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

பாடம் 85

ஓய்வுநாளில் இயேசு குணமாக்குகிறார்

அவர் அப்படிச் செய்தது ஏன் நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை?

பாடம் 86

லாசருவை இயேசு உயிரோடு எழுப்புகிறார்

மரியாள் அழுவதைப் பார்த்ததும் இயேசுவும் அழ ஆரம்பித்தார். ஆனால், அவர்களுடைய அழுகை ஆனந்தமாக மாறியது.

பாடம் 87

இயேசுவின் கடைசி பஸ்கா

தன்னுடைய அப்போஸ்தலர்களோடு கடைசியாக ஒன்றுசேர்ந்து சாப்பிட்ட சமயத்தில், முக்கியமான அறிவுரைகளை இயேசு அவர்களுக்குக் கொடுத்தார்.

பாடம் 88

இயேசு கைது செய்யப்படுகிறார்

இயேசுவைக் கைது செய்வதற்காக, வாள்களையும் தடிகளையும் வைத்திருக்கிற ஒரு பெரிய கும்பலோடு யூதாஸ் இஸ்காரியோத்து கெத்செமனே தோட்டத்துக்கு வந்தான்.

பாடம் 89

இயேசுவைத் தெரியாது என்று பேதுரு சொல்கிறார்

காய்பாவின் வீட்டு முற்றத்தில் என்ன நடந்தது? அவருடைய வீட்டுக்குள் இயேசுவுக்கு என்ன நடந்தது?

பாடம் 90

கொல்கொதாவில் இயேசு இறந்துபோகிறார்

இயேசுவைக் கொல்லும்படி பிலாத்து ஏன் கட்டளை போட்டார்?

பாடம் 91

இயேசு உயிரோடு எழுப்பப்பட்டார்

இயேசு கொலை செய்யப்பட்ட பிறகு என்ன ஆச்சரியமான சம்பவங்கள் நடந்தன?

பாடம் 92

மீனவர்கள்முன் இயேசு தோன்றுகிறார்

அவர்களுடைய கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக அவர் என்ன செய்தார்?

பாடம் 93

இயேசு பரலோகத்துக்குத் திரும்பிப் போகிறார்

அதற்கு முன், தன்னுடைய சீஷர்களுக்கு மிக முக்கியமான ஆலோசனைகளைக் கொடுத்தார்.

பாடம் 94

சீஷர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது

கடவுளுடைய சக்தி என்ன அற்புதமான திறமையை அவர்களுக்குக் கொடுத்தது?

பாடம் 95

யாராலும் அவர்களைத் தடுக்க முடியவில்லை

இயேசுவைக் கொலை செய்த மதத் தலைவர்கள் அவருடைய சீஷர்களின் வாயை அடைக்கப் பார்த்தார்கள். ஆனால், அது முடியவில்லை.

பாடம் 96

சவுலை இயேசு தேர்ந்தெடுக்கிறார்

சவுல் கிறிஸ்தவர்களைப் பயங்கரமாக எதிர்த்தார். ஆனால், சீக்கிரத்தில் எல்லாமே மாறியது.

பாடம் 97

கொர்நேலியுவுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்கிறது

யூதராக இல்லாத இவருடைய வீட்டுக்கு பேதுருவைக் கடவுள் ஏன் அனுப்பினார்?

பாடம் 98

கிறிஸ்தவ மதம் பல தேசங்களுக்குப் பரவுகிறது

அப்போஸ்தலன் பவுலும் அவருடைய மிஷனரி தோழர்களும் ரொம்பத் தூரத்தில் இருந்த இடங்களில் பிரசங்க வேலையை ஆரம்பித்தார்கள்.

பாடம் 99

சிறைக்காவலன் கிறிஸ்தவனாக ஆகிறான்

இந்தக் கதையில் பேய், நிலநடுக்கம், வாள் ஆகியவை எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன?

பாடம் 100

பவுலும் தீமோத்தேயுவும்

இவர்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். நிறைய வருஷங்கள் ஒன்றுசேர்ந்து கடவுளுக்குச் சேவை செய்தார்கள்.

பாடம் 101

பவுல் ரோமுக்கு அனுப்பப்படுகிறார்

பயணத்தில் நிறைய ஆபத்துகள் வந்தன. என்ன கஷ்டம் வந்தாலும் இந்த அப்போஸ்தலன் சோர்ந்துவிடவில்லை.

பாடம் 102

யோவானுக்குக் கிடைத்த தரிசனங்கள்

எதிர்காலத்தைப் பற்றிய தரிசனங்களை இயேசு அவருக்கு வரிசையாகக் காட்டினார்.

பாடம் 103

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

கடவுளுடைய அரசாங்கம் வரும்போது இந்தப் பூமியில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் காட்டுகிறது.