‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’

இந்தப் புத்தகம், உங்கள் வாழ்க்கையில் பைபிள் நியமங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும், கடவுளுடைய அன்புக்குப் பாத்திரராய் இருக்கவும் உங்களுக்கு உதவும்.

ஆளும் குழு எழுதிய கடிதம்

யெகோவாவின்மேல் அன்பு வைத்திருக்கும் எல்லாரும் இயேசுவைப் போல் நடந்துகொள்ள வேண்டும் என்று ஆளும் குழுவினர் சொல்கிறார்கள். ஏனென்றால் இயேசு எப்போதுமே யெகோவாவின்மேல் அன்பு வைத்திருந்தார்.

அதிகாரம் 1

கடவுள்மீது அன்பு காட்டுவது என்றால்...

கடவுள்மீது அன்பு இருப்பதை நாம் எப்படிக் காட்டலாம் என்று பைபிள் ஒரே வரியில் சொல்கிறது.

அதிகாரம் 2

நல்ல மனசாட்சியோடு வாழ...

கடவுளுக்குப் பிடிக்காததைச் செய்துவிட்டு மனசாட்சியே உறுத்தாமல் வாழ முடியுமா?

அதிகாரம் 3

கடவுள் நேசிப்பவர்களை நேசியுங்கள்

நல்லவர்களை மட்டும்தான் யெகோவா நண்பராக வைத்துக்கொள்வார். நாமும் நல்ல நண்பர்களோடுதான் பழக வேண்டும்.

அதிகாரம் 4

அதிகாரத்தில் உள்ளவர்களை ஏன் மதிக்க வேண்டும்?

முக்கியமான 3 விஷயங்களில் நாம் அதிகாரத்தில் உள்ளவர்களை மதிக்க வேண்டுமென்று கடவுள் சொல்கிறார். இதைப் பற்றி பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

அதிகாரம் 5

உலகத்திலிருந்து விலகியிருப்பது எப்படி?

எந்த 5 விஷயங்களில் நாம் இந்த உலகத்தில் இருப்பவர்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது என்று பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 6

தரமான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க...

சரியான தீர்மானம் எடுக்க மூன்று கேள்விகள் உங்களுக்கு உதவும்.

அதிகாரம் 7

உயிரைக் கடவுள் மதிக்கிறார்​—⁠நீங்கள்?

நாம் கொலை செய்யாமல் இருப்பது மட்டும் போதுமா?

அதிகாரம் 8

சுத்தமான மக்களைக் கடவுள் நேசிக்கிறார்

யெகோவாவுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யாமல் இருக்க பைபிள் உங்களுக்கு உதவி செய்யும்.

அதிகாரம் 9

“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”

ஒவ்வொரு வருஷமும், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள். இந்தக் கண்ணியில் சிக்காமலிருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

அதிகாரம் 10

திருமணம்​—⁠அன்புக் கடவுளின் பரிசு

நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களா? சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு நீங்கள் எப்படித் தயாராகலாம்? நீங்கள் ஏற்கெனவே திருமணமானவர் என்றால், உங்கள் திருமண பந்தம் நீடிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

அதிகாரம் 11

‘திருமண ஏற்பாட்டை மதியுங்கள்’

உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்த உதவும் ஆறு கேள்விகளைக் கவனியுங்கள்.

அதிகாரம் 12

“பலப்படுத்துகிற நல்ல வார்த்தைகளையே” பேசுங்கள்

நம் பேச்சு மற்றவர்களுடைய மனதை ரணமாக்கலாம் அல்லது பலப்படுத்தலாம். பேச்சுத் திறன் என்ற பரிசை, அதைத் தந்த யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாகப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

அதிகாரம் 13

கடவுள் வெறுக்கும் கொண்டாட்டங்கள்

கடவுளை மகிமைப்படுத்துவதாகச் சொல்லப்படும் சில கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் உண்மையில் அவரைக் கோபப்படுத்துகின்றன.

அதிகாரம் 14

எல்லாவற்றிலும் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்

மற்றவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்வதற்கு முன்பு நாம் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும்.

அதிகாரம் 15

கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள்

முக்கியமான 5 கேள்விகளுக்கான பதில்கள், வேலையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சரியான முடிவெடுக்க உங்களுக்கு உதவும்.

அதிகாரம் 16

பிசாசையும் அவனது சூழ்ச்சிகளையும் எதிர்த்து நில்லுங்கள்

சாத்தானுக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனாலும், அதை நினைத்தே நாம் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதில்லை. ஏன்?

அதிகாரம் 17

‘உங்கள் மகா பரிசுத்த விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்’

கடவுள்மேல் இருக்கும் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த நீங்கள் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும். அப்போது, கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

பிற்சேர்க்கை

சபைநீக்கம் செய்யப்பட்டவரை எப்படி நடத்த வேண்டும்?

அவரோடு வைத்திருக்கும் சகவாசத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டுமா?

பிற்சேர்க்கை

முக்காடு​—⁠எப்போது அவசியம், ஏன் அவசியம்?

சரியான தீர்மானம் எடுக்க உதவும் மூன்று விஷயங்களை நீங்கள் பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

பிற்சேர்க்கை

கொடி வணக்கம், ஓட்டுப் போடுதல், படைத்துறை சாராத பொதுச் சேவை

இந்த விஷயங்களில் சுத்தமான மனசாட்சியைக் காத்துக்கொள்வதற்கு பைபிள் எப்படி உங்களுக்கு உதவும்?

பிற்சேர்க்கை

இரத்தத்தின் சிறு கூறுகளும் அறுவை சிகிச்சை முறைகளும்

மருத்துவ சிகிச்சை சம்பந்தமான சிக்கல்களைத் தீர்க்க நீங்கள் சில எளிய விஷயங்களைச் செய்யலாம்.

பிற்சேர்க்கை

சுய இன்பப் பழக்கத்தை விட்டொழித்தல்

இந்தக் கெட்ட பழக்கத்தை விடுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பிற்சேர்க்கை

விவாகரத்து, பிரிந்துவாழ்வது​—⁠பைபிளின் கருத்து

பைபிளின்படி, விவாகரத்து செய்தவர்கள் எப்போது இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள முடியும்?

பிற்சேர்க்கை

வியாபார விஷயங்களில் சண்டை சச்சரவுகளைத் தீர்த்தல்

ஒரு யெகோவாவின் சாட்சி இன்னொரு யெகோவாவின் சாட்சிமீது வழக்கு பதிவு செய்யலாமா?