யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
கடவுளிடம் நீங்கள் நெருங்கி வர வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். அதை எப்படி செய்யலாம் என்று பைபிளிலிருந்து தெரிந்துகொள்ள இந்த புத்தகம் உங்களுக்கு உதவும்.
அறிமுக வார்த்தைகள்
யெகோவா தேவனோடு உடைக்க முடியாத ஒரு உறவை நீங்களும் வளர்த்துக்கொள்ளலாம்.
அதிகாரம் 1
“இவர்தான் நம் கடவுள்!”
கடவுளுடைய பெயர் ஏற்கெனவே தெரிந்திருந்தும் மோசே ஏன் அதைக் கேட்டார்?
அதிகாரம் 2
உண்மையிலேயே ‘கடவுளிடம் நெருங்கி வர’ முடியுமா?
இந்த வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவா, நமக்கு ஒரு அழைப்பையும் ஒரு வாக்கையும் கொடுக்கிறார்.
அதிகாரம் 3
“யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்”
பைபிள் ஏன் பரிசுத்தத்தன்மையை அழகோடு சம்பந்தப்படுத்தி பேசுகிறது?
பகுதி 1
‘பிரமிக்க வைக்கிற பலம்’
அதிகாரம் 4
“யெகோவா . . . மகா வல்லமை உள்ளவர்”
கடவுளுடைய வல்லமையைப் பார்த்து நாம் பயப்பட வேண்டுமா? ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம்!
அதிகாரம் 5
படைக்கும் வல்லமை—‘வானத்தையும் பூமியையும் படைத்தவர்’
கடவளுடைய படைப்புகளான பிரமாண்டமான சூரியன் முதல் பொடிசான ரீங்காரச் சிட்டு வரை எல்லாமே அவரைப் பற்றி முக்கியமான விஷயங்களை சொல்லித்தருகிறது.
அதிகாரம் 6
அழிக்கும் வல்லமை—“யெகோவா ஒரு மாவீரர்!”
‘சமாதானத்தின் கடவுளால்’ எப்படிப் போர் செய்ய முடியும்?
அதிகாரம் 7
காக்கும் வல்லமை—‘கடவுள் நம் அடைக்கலம்’
கடவுள் அவருக்கு சேவை செய்பவர்களை இரண்டு விதங்களில் பாதுகாக்கிறார். அவற்றில் ஒன்று ரொம்ப ரொம்ப முக்கியமானது.
அதிகாரம் 8
புதுப்பிக்கும் வல்லமை—யெகோவா ‘எல்லாவற்றையும் புதிதாக்குகிறார்’
யெகோவா ஏற்கெனவே உண்மை வணக்கத்தை புதுப்பித்துவிட்டார். எதிர்காலத்தில் எதை புதுப்பிக்க போகிறார்?
அதிகாரம் 9
‘கிறிஸ்து கடவுளுடைய வல்லமையாக இருக்கிறார்’
இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களும், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களும் யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன சொல்லித்தருகிறது?
அதிகாரம் 10
வல்லமையை பயன்படுத்துவதில் “கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்”
நீங்கள் நினைப்பதைவிட உங்களிடம் நிறைய வல்லமை இருக்கலாம். அதை நீங்கள் எப்படி சரியாக பயன்படுத்தலாம்?
பகுதி 2
“யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்”
அதிகாரம் 12
“கடவுளிடம் அநியாயம் இருக்கிறதா?”
யெகோவா அநியாயத்தை வெறுக்கிறார் என்றால், இன்றைக்கு உலகில் ஏன் அநியாயம் தலைவிரித்து ஆடுகிறது?
அதிகாரம் 14
‘பலருடைய உயிருக்கு ஈடான ஒரு மீட்புவிலையை’ யெகோவா அளித்தார்
ரொம்ப எளிமையான, ஆனால் ஆழமாக யோசிக்க வைக்கிற ஒரு பைபிள் போதனை உங்களை கடவுளிடம் நெருங்கிப் போக வைக்கும்.
அதிகாரம் 15
இயேசு ‘இந்த உலகத்தில் நியாயத்தை நிலைநாட்டுவார்’
இயேசு எப்படி நீதியை நிலைநாட்டினார்? இப்போது எப்படி அதை செய்துகொண்டிருக்கிறார்? எதிர்காலத்தில் எப்படி நீதியை முழுமையாக நிலைநாட்டுவார்?
அதிகாரம் 16
கடவுளோடு நடக்கையில் ‘நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்’
எது சரி எது தவறு என்பதைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், மற்றவர்களை எப்படி நடத்துகிறோம், இவை எல்லாமே நியாயமாக நடப்பதில் அடங்கியிருக்கின்றன.
பகுதி 3
‘ஞானம் உள்ளவர்’
அதிகாரம் 17
‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானவை!’
யெகோவாவுக்கு இருக்கும் அறிவு, புத்தி மற்றும் பகுத்தறியும் திறனைவிட அவருடைய ஞானம் ஏன் தலைசிறந்தது?
அதிகாரம் 18
‘கடவுளுடைய வார்த்தையில்’ இருக்கும் ஞானம்
கடவுள் ஏன் மனிதர்களை பயன்படுத்து அவர் எழுத நினைத்த விஷயங்களை எழுதினார்? அதில் ஏன் சில விஷயங்கள் சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது அல்லது விடப்பட்டிருக்கிறது?
அதிகாரம் 19
‘பரிசுத்த ரகசியத்தில் இருக்கிற கடவுளுடைய ஞானம்’
கடவுள் படிப்படியாக வெளிப்படுத்திய அந்த பரிசுத்த ரகசியம் என்ன?
அதிகாரம் 20
‘ஞானமுள்ளவர்’—ஆனாலும் மனத்தாழ்மையுள்ளவர்
இந்த பிரபஞ்சத்தையே ஆட்சி செய்கிற உன்னத பேரரசரால் எப்படி மனத்தாழ்மையாக இருக்க முடிகிறது?
அதிகாரம் 21
‘கடவுளிடமிருந்து வரும் ஞானத்தை’ இயேசு வெளிக்காட்டுகிறார்
ஒருமுறை இயேசுவை கைது செய்ய சென்றவர்கள் அவர் பேசியதை கேட்டு அசந்துபோய், அவரை கைது செய்யாமல் வெறும் கையோடு திரும்பினார்கள். அந்தளவுக்கு இயேசு கற்பித்த விதம் இருந்தது!
அதிகாரம் 22
‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காட்டுகிறீர்களா?
கடவுளிடமிருந்து வரும் ஞானத்தை காட்டுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 4 விஷயங்களை பைபிள் சொல்கிறது.
பகுதி 4
“கடவுள் அன்பாகவே இருக்கிறார்”
அதிகாரம் 23
‘கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டினார்’
“கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்பதற்கு உண்மையிலேயே என்ன அர்த்தம்?
அதிகாரம் 24
எதுவுமே ‘கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது’
‘உங்களை எல்லாம் கடவுளுக்கு பிடிக்கவே பிடிக்காது, நீங்கள் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை’ போன்ற அப்பட்டமான பொய்களை தகர்த்தெறியுங்கள்.
அதிகாரம் 25
‘நம் கடவுள் காட்டுகிற கரிசனை’
யெகோவா நம்மேல் காட்டும் பாசம் எப்படி ஒரு தாய் தன் குழந்தைமேல் காட்டும் பாசத்தை போல் இருக்கிறது?
அதிகாரம் 26
“மன்னிக்க தயாராக இருக்கிற” கடவுள்
கடவுளுக்கு அபாரமான ஞாபக சக்தி இருக்கும்போது, அவரால் எப்படி நம்முடைய பாவங்களை மன்னித்து மறக்க முடியும்?
அதிகாரம் 28
“நீங்கள் ஒருவர்தான் பற்றுமாறாதவர்”
யெகோவாவுடைய பற்றுமாறாமல் நடக்கும் குணம் ஏன் அவருடைய உண்மைத்தன்மையைவிட சிறந்தது?
அதிகாரம் 29
‘கிறிஸ்துவின் அன்பை தெரிந்துகொள்வது’
இயேசு மூன்று விதங்களில் காட்டிய அன்பு யெகோவாவின் அன்பை அப்படியே பிரதிபலிக்கிறது.
அதிகாரம் 30
“தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”
நாம் என்னென்ன வழிகளில் அன்பு காட்டலாம் என்று ஒன்று கொரிந்தியர் புத்தகம் சொல்கிறது.
அதிகாரம் 31
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய ரொம்ப முக்கியமான கேள்வி என்ன? அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?