பைபிள் வசனங்களின் விளக்கம்
பழக்கமான பைபிள் வசனங்கள் மற்றும் சொற்றொடர்களின் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். வசனங்களின் சூழமைவைத் தெரிந்துகொண்டு வாசியுங்கள். அவற்றின் பின்னணித் தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள். அடிக்குறிப்புகளோடும் இணை வசனங்களோடும் சேர்த்து வசனங்களை வாசிக்கும்போது அவற்றை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஆதியாகமம் 1:1-ன் விளக்கம்—“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”
பைபிளிலிருக்கும் இந்த முதல் வசனத்தில், என்ன இரண்டு முக்கியமான உண்மைகள் இருக்கின்றன?
யாத்திராகமம் 20:12-ன் விளக்கம்—“உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்”
இந்தக் கட்டளையோடு சேர்த்து கடவுள் ஒரு வாக்குறுதியையும் கொடுத்தார். இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய அது மக்களைத் தூண்டியது.
சங்கீதம் 37:4-ன் விளக்கம்—“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு”
ஞானமாக நடப்பதற்கும், கடவுள் ஏற்றுக்கொள்கிற நபர்களாக இருப்பதற்கும் இந்த சங்கீதம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
சங்கீதம் 46:10-க்கான விளக்கம்—“அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்”
சர்ச்சில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் அர்த்தமா?
நீதிமொழிகள் 3:5, 6—‘உன் சுயபுத்தியின்மேல் சாயாதே’
உங்களைவிட கடவுளைத்தான் நீங்கள் அதிகமாக நம்புகிறீர்கள் என்பதை எப்படிக் காட்டலாம்?
நீதிமொழிகள் 17:17-ன் விளக்கம்—“நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்”
உண்மையான நண்பன் யார் என்பதை இந்த நீதிமொழி அழகாக விவரிக்கிறது.
ஏசாயா 41:10-ன் விளக்கம்—“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்”
தன்னை உண்மையோடு வணங்குபவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதாக யெகோவா உறுதி தருகிறார்.
ஏசாயா 42:8-ன் விளக்கம்—“நான் கர்த்தர்”
கடவுள் தனக்கு என்ன பெயரை வைத்துகொண்டார்?
எரேமியா 29:11-ன் விளக்கம்—“நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்”
ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் என்ன நடக்க வேண்டும் என்பதை கடவுள் முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருக்கிறாரா?
மத்தேயு 6:34-ன் விளக்கம்—“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்”
எதிர்காலத்துக்காகத் திட்டமிடக் கூடாது என்று இயேசு சொல்லவில்லை.
மாற்கு 1:15-ன் விளக்கம்—“தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று”
கடவுளுடைய அரசாங்கம் ஏற்கெனவே ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டதாக இயேசு சொன்னாரா?
யோவான் 1:1-ன் விளக்கம்—“ஆதியிலே வார்த்தை இருந்தது”
மனிதராக பூமிக்கு வருவதற்கு முன் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இந்த வசனம் காட்டுகிறது.
யோவான் 3:16-ன் விளக்கம்—“தேவன் . . . இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”
கடவுளாகிய யெகோவா நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார், நாம் என்றென்றும் வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறார். இதை எப்படிக் காட்டியிருக்கிறார்?
ரோமர் 10:13-ன் விளக்கம்—‘கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன்’
மீட்புப் பெறுவதற்கும் முடிவில்லாமல் வாழ்வதற்குமான வாய்ப்பை தேசம், இனம், சமூக அந்தஸ்து என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாருக்குமே கடவுள் கொடுக்கிறார்.