கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
செய்வார்
-
செய்ய மாட்டார்
-
செய்யலாம்
கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?
“பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது.”—தானியேல் 2:44.
“நமக்காக ஒரு மகன் கொடுக்கப்பட்டிருக்கிறார். ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும்.”—ஏசாயா 9:6, புதிய உலக மொழிபெயர்ப்பு.
இதைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?
-
கடவுளுடைய நீதியான அரசாங்கத்தால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.—ஏசாயா 48:17, 18.
-
புதிய பூமியில், ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
கடவுளுடைய வார்த்தை சொல்வதை நம்பலாமா?
நிச்சயம் நம்பலாம், இரண்டு காரணங்களுக்காக:
-
கடவுளுடைய அரசாங்கம் என்னென்ன செய்யும் என்பதை இயேசு செய்து காட்டினார். கடவுளுடைய அரசாங்கம் வரவேண்டும், கடவுளுடைய விருப்பம் இந்தப் பூமியில் நிறைவேற வேண்டும் என்று இயேசு தன்னைப் பின்பற்றியவர்களிடம் ஜெபம் செய்ய சொன்னார். (மத்தேயு 6:9, 10) அந்தச் சமயத்தில் என்னென்ன நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை இயேசு செய்து காட்டினார்.
இயேசு பூமியிலிருந்தபோது, பசியாய் இருந்தவர்களுக்குச் சாப்பாடு கொடுத்தார், நோயாளிகளை குணமாக்கினார், இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார்! (மத்தேயு 15:29-38; யோவான் 11:38-44) இயேசு இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது, பசிபட்டினி, நோய்நொடி போன்ற எந்தப் பிரச்சினையும் இருக்காது என்பதைச் செய்து காட்டினார்.—வெளிப்படுத்துதல் 11:15.
-
கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் பூமியை ஆட்சிசெய்யும் என்பதற்கு இந்த உலக நிலைமைகளே அத்தாட்சி. கடவுளுடைய அரசாங்கம் பூமியில் சமாதானத்தை கொண்டுவருவதற்கு முன்பு, இந்த உலகத்தில் போர்களும் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் அதிகமாக இருக்கும் என்று இயேசு சொன்னார்.—மத்தேயு 24:3, 7.
இன்றைக்கு உலகத்தில் இதைத்தான் பார்க்கிறோம். அதனால், கடவுளுடைய அரசாங்கம் இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் நிச்சயம் முடிவுகட்டும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.