Skip to content

உக்ரைனில், டியாகிவில் இருக்கும் மாநாட்டு மன்றம் அகதிகளாக வருகிறவர்களை வரவேற்பதற்காக தயார் நிலையில் இருக்கிறது

மார்ச் 8, 2022
உக்ரைன்

அறிக்கை #1 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

அறிக்கை #1 | உக்ரைன்—யுத்த பூமியில் பொழிகிறது பாச மழை

உக்ரைனில் குண்டு வெடிப்புகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதால் மரியுபோல், கார்கிவ், ஹோஸ்டோமெல் போன்ற இடங்களில் இருக்கிற நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு வாழ்க்கையே மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. அடித்தளத்தில் இருந்து அல்லது பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த இடங்களில் இருந்து சிலர் கிட்டத்தட்ட ஒரு வாரமாக வெளியே வர முடியாத நிலைமையில் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்த உணவுப் பொருள்களும் தீர்ந்துகொண்டே இருக்கின்றன. மின்சாரமும் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. இன்டர்நெட் வசதிகளும், தொலைபேசி இணைப்புகளும் அவ்வப்போது மட்டுமே வேலை செய்கின்றன. அதனால், அங்கிருக்கிற சகோதர சகோதரிகளைத் தொடர்புகொள்வதே பெரிய கஷ்டமாக இருக்கிறது.

வருத்தமான விஷயம் என்னவென்றால், மைர்னோஹரட் என்ற இடத்தில் மூப்பராக சேவை செய்கிற 28 வயதுள்ள சகோதரர் டிமிட்ரோ ரோஸ்டோர்ஸ்கீ, கண்ணிவெடியில் கால் வைத்ததால் காயமடைந்து இறந்துபோனார். குண்டு வெடிப்புகள் அதிகமாக நடக்கிற இடங்களில் வாழ்கிற நம்முடைய சகோதர சகோதரிகளுக்காகவும், தங்களுடைய அன்பானவர்களை இழந்தவர்களுக்காகவும் நாங்கள் ஜெபம் செய்கிறோம். —2 தெசலோனிக்கேயர் 3:1.

உக்ரைனில், ஒவ்ரூசில் இருக்கும் ராஜ்ய மன்றம் குண்டு வெடிப்பில் மிகவும் சேதமடைந்திருக்கிறது

மார்ச் 7, 2022 கணக்குபடி, கீழே இருக்கும் தகவல்கள் உக்ரைனில் இருந்து அறிக்கை செய்யப்படுகின்றன:

நம்முடைய சகோதர சகோதரிகளின் நிலைமை

  • 2 பிரஸ்தாபிகள் இறந்துவிட்டார்கள்

  • 8 பிரஸ்தாபிகள் காயம் அடைந்திருக்கிறார்கள்

  • 20,617 பிரஸ்தாபிகள் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு உக்ரைனிலேயே பாதுகாப்பான வேறொரு இடத்துக்கு மாறிப் போயிருக்கிறார்கள்

  • 25 வீடுகள் நாசமடைந்திருக்கின்றன

  • 29 வீடுகள் மிகவும் சேதமடைந்திருக்கின்றன

  • 173 வீடுகள் ஓரளவு சேதமடைந்திருக்கின்றன

  • 5 ராஜ்ய மன்றங்கள் சேதமடைந்திருக்கின்றன

நிவாரண நடவடிக்கைகள்

  • 27 பேரழிவு நிவாரண குழுக்கள் (DRCs) உக்ரைனில் செயல்படுகின்றன

  • 6,548 பிரஸ்தாபிகளைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு DRC குழுக்கள் நேரடியாக உதவியிருக்கின்றன

  • 7,008 பிரஸ்தாபிகள் வேறு நாடுகளுக்கு தப்பித்துப் போயிருக்கிறார்கள், அங்கே இருக்கிற சகோதர சகோதரிகள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்

  • மேற்கு உக்ரைனில், செர்னிவ்சி, இவானோ-பிராங்கிவ்ஸ்க், லிவீவ் மற்றும் ட்ரான்ஸ்கார்ப்பதியன் போன்ற பகுதிகளில் இருக்கிற 1 மாநாட்டு மன்றமும் 30 ராஜ்ய மன்றங்களும் அகதிகளாக வருகிறவர்களை வரவேற்பதற்காக தயார் நிலையில் இருக்கின்றன