ஜூன் 1, 2022
உலக செய்திகள்
பொது ஊழியம் மீண்டும் ஆரம்பம்!
வீட்டுக்கு வீடு ஊழியத்தைத் தவிர எல்லா விதமான பொது ஊழியத்தையும் மறுபடியும் செய்ய ஆரம்பிக்கலாம் என்று ஆளும் குழு எல்லா கிளை அலுவலக குழுக்களுக்கும் மே 31, 2022 அன்று தெரிவித்தது. ஒவ்வொரு கிளை அலுவலக குழுவும் அவர்களுடைய கிளை அலுவலக பகுதியில் உள்ள சூழ்நிலைகளை கவனமாகப் பார்ப்பார்கள். அதோடு, உள்ளூர் அரசாங்கம் ஏதாவது கட்டுப்பாடுகள் விதித்திருக்கின்றனவா என்றும் பார்ப்பார்கள். இதையெல்லாம் மனதில் வைத்து சீக்கிரத்தில் சபைகளுக்கு வழிநடத்துதல்களைக் கொடுப்பார்கள். (ரோமர் 13:1) அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்வதற்கு நமக்குக் கிடைத்திருக்கிற இந்த அருமையான வாய்ப்பை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம்!—மத்தேயு 28:19, 20.