Skip to content

தனிப்பட்ட விவரங்களின் பயன்பாடு—கென்யா

தனிப்பட்ட விவரங்களின் பயன்பாடு—கென்யா

ஒருவர் ஒரு பிரஸ்தாபியாக ஆகும்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய மத அமைப்பு (“யெகோவாவின் சாட்சிகள்”)—யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபை, அந்த நாட்டு கிளை அலுவலகம், யெகோவாவின் சாட்சிகளுடைய அதுபோன்ற ஒத்துழைக்கும் அமைப்புகள்—அவரது அல்லது அவளது தனிப்பட்ட விவரங்களை சட்டப்பூர்வ மத அக்கறைகளுக்கு இணங்க சட்டப்படி பயன்படுத்துகிறது. யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி, பிரஸ்தாபிகள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை தங்களுடைய சபைக்கு மனப்பூர்வமாக கொடுக்கிறார்கள், இதனால் கடவுளை வணங்குவதற்காக அவர்கள் மத நடவடிக்கைகளில் பங்கேற்கலாம், அதோடு ஆன்மீக உதவியையும் பெறலாம்.—1 பேதுரு 5:2.

தனிப்பட்ட விவரங்கள் என்பது ஒரு நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், ஞானஸ்நானம் எடுத்த தேதி மற்றும் தொடர்புத் தகவல், அத்துடன் அவரது ஆன்மீக நல்வாழ்வு, வெளி ஊழிய செயல்பாடு, யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் உள்ள எந்தப் பொறுப்புகள் அல்லது கூடுதல் மத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பிரஸ்தாபிகள் வழங்கும் எந்தவொரு விவரங்கள் போன்றவை அடங்கும். இந்த விவரங்களில் பிரஸ்தாபிகளுடைய மத நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படும் மற்றும் பிற சென்சிடிவ் விவரங்களும் உட்படலாம். தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவது என்பது, அந்த விவரங்களைச் சேகரித்தல், பதிவு செய்தல், ஒழுங்கமைத்தல் மற்றும் சேமித்தல் மற்றும் அந்த விவரங்களின் மீது நிகழ்த்தப்படும் ஒத்த செயல்பாடுகளைக் குறிக்கலாம்.

இந்த நாட்டின் தகவல் பாதுகாப்புச் சட்டம் பின்வருமாறு:

2019-ன் தகவல் பாதுகாப்புச் சட்டம் எண். 24 மற்றும் அந்தச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள்.

இந்த தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், யெகோவாவின் சாட்சிகள் பிரஸ்தாபிகளின் தனிப்பட்ட தகவலை மத காரணங்களுக்காக பயன்படுத்துகிறார்கள், அவற்றில் பின்வருபவை உட்பட்டுள்ளன:

  • யெகோவாவின் சாட்சிகளுடைய மதத்தை பராமரிப்பது மற்றும் நிர்வகிப்பது

  • யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையின் ஏதாவது கூட்டத்தில் கலந்துகொள்வது மற்றும் ஏதேனும் வாலண்டியர் செயல்பாட்டில் அல்லது திட்டத்தில் கலந்துகொள்வது

  • உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் ஆன்மீக போதனைக்காக பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும் கூட்டம், அசெம்பிளி அல்லது மாநாட்டில் தானாக முன்வந்து பங்கேற்பது

  • சபையில் மற்ற ஏதாவது பொறுப்பில் நியமிக்கப்படுவது அல்லது அதை நிறைவேற்றுவது

  • சபையின் பிரஸ்தாபிகளின் பதிவுகளை பராமரிப்பது

  • யெகோவாவின் சாட்சிகளுடைய மூப்பர்களின் மேய்ப்பு வேலை மற்றும் கவனித்தல் (அப்போஸ்தலர் 20:28; யாக்கோபு 5:14, 15)

  • அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக அவசரகால தொடர்பு விவரங்களை பதிவுசெய்வது

மேலே குறிப்பிடப்பட்ட நோக்கங்கள் அல்லது பிற சட்டப்பூர்வமான நோக்கங்கள் பொருந்தும் வரை மட்டுமே தனிப்பட்ட விவரங்களை சேமிக்கப்படும். ஒரு பிரஸ்தாபி தனது தனிப்பட்ட விவரங்களைச் செயலாக்குவதற்குத் தேவையான தனிப்பட்ட விவரங்களையோ பொருட்களையோ வழங்க வேண்டாம் என தெரிவுசெய்தால், சபைக்குள் சில பொறுப்புகளை நிறைவேற்றவோ அல்லது சில மத நடவடிக்கைகளில் பங்கேற்கவோ பிரஸ்தாபிகளின் தகுதியை யெகோவாவின் சாட்சிகளால் மதிப்பிட முடியாது.

யெகோவாவின் சாட்சிகள் உலகளவில் செயல்படுகிறார்கள். எனவே, பிரஸ்தாபிகளின் தனிப்பட்ட விவரங்கள் இடமாற்றம் செய்யப்படலாம், அவர்கள் இருக்கும் நாட்டிற்கு வெளியே சேமிக்கப்படலாம். தகவல் பாதுகாப்பின் வெவ்வேறு நிலைகளை வழங்கும் சட்டங்கள் உள்ள நாடுகளும் இதில் அடங்கும், அவை விவரங்களை அனுப்பப்படும் நாட்டின் தகவல் பாதுகாப்பின் நிலைக்கு எப்போதும் சமமாக இருக்காது. அவ்வாறு மாற்றப்படும் எந்தவொரு தகவலுக்கும் போதுமான பாதுகாப்பை உறுதிப்படுத்த யெகோவாவின் சாட்சிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அத்தகைய இட மாற்றங்களுக்கு பிணைப்பு ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும். யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் அனைத்து பெறுநர்களும், யெகோவாவின் சாட்சிகளின் உலகளாவிய தகவல் பாதுகாப்புக் கொள்கையின்படி மட்டுமே பிரஸ்தாபிகளின் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துகின்றனர்.

யெகோவாவின் சாட்சிகள் வைத்திருக்கும் தனிப்பட்ட விவரங்கள் தொடர்பாக பிரஸ்தாபிகளுக்கு பின்வரும் உரிமைகள் உள்ளன: விவரங்களை அணுகுவதற்கான உரிமை; விவரங்களைத் திருத்த அல்லது நீக்கக் கோருவதற்கான உரிமை; விவரச் செயலாக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதற்கான உரிமை; மற்றும் விவரச் செயலாக்கத்தை எதிர்க்கும் உரிமை. பிரஸ்தாபிகள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை பிற செயல்பாடுகளுக்குச் செயலாக்க ஒப்புதல் அளித்தால், அவர்கள் எந்த நேரத்திலும் தங்கள் தனிப்பட்ட விவரங்களின் சில எதிர்காலப் பயன்பாடுகள் தொடர்பாக தங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறலாம். தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவதற்கு பிரஸ்தாபிகள் ஆட்சேபனை தெரிவித்தாலோ அல்லது அதன் ஒப்புதலைத் திரும்பப் பெற்றாலோ அல்லது பிரஸ்தாபிகள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை நீக்குமாறு கோரினாலோ அல்லது அதன் செயலாக்கத்தைக் கட்டுப்படுத்த கோரினாலோ, யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வ மத நோக்கங்களின் அடிப்படையில் அல்லது தகவல் பாதுகாப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட மற்றொரு சட்டப்பூர்வமான அடிப்படையில் சில தனிப்பட்ட விவரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். தாங்கள் தற்போது வசிக்கும் நாட்டில் உள்ள தகவல் பாதுகாப்பு மேற்பார்வை ஆணையத்திடம் புகார் அளிக்க தங்களுக்கு உரிமை உண்டு என்பதை பிரஸ்தாபிகள் அறிவார்கள்.

தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பதற்காக, தகவல் பாதுகாப்புச் சட்டத்தின்படி, யெகோவாவின் சாட்சிகள் பல்வேறு நடைமுறை மற்றும் தொழில்நுட்பப் பாதுகாப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்ற, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் மட்டுமே அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அணுகப்படும் என்பதை பிரஸ்தாபிகள் புரிந்துகொள்கிறார்கள்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் உள்ளூர் தகவல் பாதுகாப்பு அதிகாரியைத் தொடர்பு கொள்ள விரும்பினால், பின்வரும் முகவரிக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பலாம்:

InboxLGL.ke@jw.org

தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள டேட்டா கன்ட்ரோலரின் அடையாளம் மற்றும் தொடர்புத் தகவல், பொருத்தமானால், அதன் பிரதிநிதி மற்றும் அதன் தகவல் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் விவரங்களை jw.org-ன் தகவல் பாதுகாப்புத் தொடர்புகள் பக்கத்தில் காணலாம் என்பதை பிரஸ்தாபிகள் புரிந்துகொள்கிறார்கள்.

சில மத நடவடிக்கைகள், சட்டம் அல்லது தொழில்நுட்பத்தின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக யெகோவாவின் சாட்சிகளின் தகவல் நடைமுறைகள் அவ்வப்போது மாறக்கூடும். இந்த தனிப்பட்ட விவரங்களின் பயன்பாடு பக்கத்தில் மாற்றங்கள் தேவைப்பட்டால், அந்த மாற்றங்கள் இந்த பக்கத்தில் அறிவிக்கப்படும். இதனால் பிரஸ்தாபிகளால், என்ன விவரங்கள் சேகரிக்கப்படுகிறது மற்றும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை எப்போதும் அறிந்திருக்கிறார்கள். இந்தப் பக்கத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை அவ்வப்போது தயவுசெய்து பாருங்கள்