தனிப்பட்ட விவரங்களின் பயன்பாடு—நெதர்லாந்து
ஒருவர் பிரஸ்தாபியாக ஆகும்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய மத அமைப்பும், யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையும், உள்ளூர் கிளை அலுவலகமும், யெகோவாவின் சாட்சிகளுடைய அதுபோன்ற மற்ற அமைப்புகளும் அவற்றின் மத சம்பந்தமான வேலைகளுக்காக தன்னுடைய தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறார். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி பிரஸ்தாபிகள், தங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தங்களுடைய சபைக்கு மனப்பூர்வமாக அளிக்கிறார்கள். தங்களுடைய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட மத வேலைகளில் ஈடுபடுவதற்கும், ஆன்மீக உதவி பெறுவதற்கும் அப்படிச் செய்கிறார்கள்.—1 பேதுரு 5:2.
மத சம்பந்தப்பட்ட மற்ற வேலைகளில் ஈடுபடுவதற்கு பிரஸ்தாபிகள் தங்களைப் பற்றிய இன்னும் சில விவரங்களை யெகோவாவின் சாட்சிகளுக்கு அளிக்க வேண்டியிருக்கலாம். ஒருவருடைய தனிப்பட்ட விவரங்களில், அவருடைய பெயர், பிறந்த தேதி, பாலினம், ஞானஸ்நானம் பெற்ற தேதி, தொடர்புகொள்வதற்கான தகவல் அல்லது அவர்களுடைய ஆன்மீக நலனோடும் ஊழியத்தோடும் சம்பந்தப்பட்ட தகவல் அல்லது யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பில் அவர்களுக்கு இருக்கும் ஸ்தானம் போன்றவை அடங்கும். இந்த விவரங்களில், ஒரு பிரஸ்தாபியின் மத நம்பிக்கைகளைப் பற்றிய தகவல்களும், அவரைப் பற்றி ரகசியமாக வைக்க வேண்டிய தகவல்களும் உட்பட்டிருக்கின்றன. தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவது என்பது, அந்த விவரங்களைச் சேகரிப்பது, பதிவுசெய்வது, ஒழுங்குபடுத்துவது, பாதுகாத்து வைப்பது ஆகியவற்றையும் இதுபோன்ற மற்ற வேலைகளையும் அர்த்தப்படுத்துகிறது.
இந்த நாட்டில் பின்பற்றப்படும் தகவல் பாதுகாப்பு சட்டம் இதுதான்:
பொது தகவல் பாதுகாப்பு விதிமுறை (EU) 2016/679.
இந்த தகவல் பாதுகாப்பு சட்டத்தின்படி, பிரஸ்தாபிகள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை மத விஷயங்களுக்காகவும் பின்வரும் விஷயங்களுக்காகவும் யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கிறார்கள்:
யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கும், ஏதாவது ஒரு பணியில் அல்லது புராஜெக்ட்டில் வாலண்டியராக ஈடுபடுவதற்கும்;
உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஆன்மீக போதனைகளுக்காக பதிவுசெய்யப்பட்டு ஒலிப்பரப்பப்படுகிற ஒரு கூட்டத்தில் அல்லது மாநாட்டில் கலந்துகொள்வதற்கும்;
ஒரு நியமிப்பைச் செய்வதற்கு அல்லது சபையில் ஒரு பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் (இவற்றைச் செய்கிற பிரஸ்தாபிகளின் பெயரும் நியமிப்பும், யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தின் அறிவிப்பு பலகையில் போடப்படும்);
சபை பிரஸ்தாபியின் பதிவு அட்டைகளைப் பராமரிப்பதற்கும்;
யெகோவாவின் சாட்சிகளுடைய மூப்பர்கள் மந்தையை மேய்ப்பதற்கும் கவனிப்பதற்கும் (அப்போஸ்தலர் 20:28; யாக்கோபு 5:14, 15);
அவசர நிலை ஏற்படும்போது தொடர்புகொள்வதற்கான தகவலைப் பதிவுசெய்வதற்கும்.
மேலே சொல்லப்பட்டுள்ள நோக்கங்கள் நிறைவேறும்வரை அல்லது சட்டப்பூர்வ காரணங்கள் பூர்த்திசெய்யப்படும்வரை, குறிப்பிடப்படாத காலத்துக்கு ஒருவருடைய தனிப்பட்ட விவரங்கள் பாதுகாத்து வைக்கப்படும். ஒரு பிரஸ்தாபி, தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவதற்கான அறிவிப்பும் ஒப்புதலும் என்ற படிவத்தில் கையெழுத்து போட மறுத்தால், சபையில் சில பொறுப்புகளைக் கொடுப்பதற்கு அல்லது மத சம்பந்தப்பட்ட சில வேலைகளில் ஈடுபடுவதற்கு அவர் தகுதியானவரா என்பதை யெகோவாவின் சாட்சிகளால் சரியாகத் தீர்மானிக்க முடியாமல் போய்விடும்.
தேவைப்படும் சமயங்களிலும் பொருத்தமான சமயங்களிலும் ஒருவருடைய தனிப்பட்ட விவரங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய வேறு ஏதாவது அமைப்புக்கு அனுப்பப்படலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய சில அமைப்புகள் செயல்படுகிற நாடுகளில், தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பதற்காகப் பின்பற்றப்படும் சட்டங்கள் தங்களுடைய நாட்டில் பின்பற்றப்படும் சட்டங்களிலிருந்து வித்தியாசப்பட்டதாக இருக்கும் என்பதை பிரஸ்தாபிகள் புரிந்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுக்கொள்கிற அமைப்பு, அது அமெரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகமாக இருந்தாலும் சரி, யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய தகவல் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில்தான் அவற்றைப் பயன்படுத்தும் என்பதைப் புரிந்திருக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளிடம் இருக்கிற தங்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பார்க்க... அவற்றை அழிக்கும்படியோ அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்தும்படியோ கேட்க... அவற்றில் ஏதாவது தவறுகள் இருந்தால் திருத்தம் செய்ய... பிரஸ்தாபிகளுக்கு உரிமை இருக்கிறது. தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை, குறிப்பிட்ட சில விஷயங்களுக்காக யெகோவாவின் சாட்சிகள் பிற்பாடு பயன்படுத்துவதை எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் பிரஸ்தாபிகளால் ரத்துசெய்ய முடியும். தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவதற்கு கொடுத்த ஒப்புதலை ஒரு பிரஸ்தாபி வாபஸ் பெற்றால், அவருடைய ஒப்புதல் இல்லாமலேயே அந்த விவரங்களில் சிலவற்றை யெகோவாவின் சாட்சிகளால் தொடர்ந்து பயன்படுத்த முடியும். அதாவது, யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய அங்கத்தினர்களின் தகவல்களைப் பராமரிப்பது மற்றும் நிர்வகிப்பது போன்ற சட்டப்பூர்வ மத நோக்கங்களின் அடிப்படையில் அல்லது தகவல் பாதுகாப்பு சட்டத்திலுள்ள வேறொரு சட்டப்பூர்வ காரணத்தின் அடிப்படையில் அவற்றைப் பயன்படுத்த முடியும். பிரஸ்தாபிகளுக்கு, தாங்கள் தற்போது வாழும் நாட்டிலுள்ள தகவல் பாதுகாப்பு மேற்பார்வை அதிகாரியிடம் புகார் பதிவுசெய்வதற்கான உரிமை இருக்கிறது என்று தெரியும்.
தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு இசைவாக, தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் நடைமுறையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அங்கீகாரம் பெற்ற சில நபர்கள் மட்டுமே தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்துவார்கள் என்பதைப் பிரஸ்தாபிகள் புரிந்திருக்கிறார்கள்.
ஏதாவது தகவலைத் தெரிந்துகொள்ள விரும்பினால் அது சம்பந்தமான தகவல் பாதுகாப்பு அதிகாரிக்கு, பின்வரும் ஈ-மெயில் ஐ.டி. மூலமாக அனுப்பலாம்:
DataProtectionOfficer.NL@jw.org.
jw.org-லுள்ள தகவல் பாதுகாப்பு தொடர்புகள் என்ற பக்கத்திலிருந்து, தாங்கள் வாழும் நாட்டில் தகவலைப் பயன்படுத்துவோரின் அடையாளத்தையும் அவர்களைத் தொடர்புகொள்வதற்கான தகவலையும், தேவைப்பட்டால், அவர்களுடைய பிரதிநிதி மற்றும் தகவல் பாதுகாப்பு அதிகாரியைப் பற்றிய தகவலையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பிரஸ்தாபிகள் புரிந்திருக்கிறார்கள்.
எங்களுடைய மதம் சம்பந்தப்பட்ட வேலைகள், சட்டம் அல்லது தொழில்நுட்பத்தைப் பொறுத்து, தகவலைப் பயன்படுத்தும் விதம் அவ்வப்போது மாறலாம். ஒருவேளை தனிப்பட்ட விவரங்களின் பயன்பாடு என்ற பக்கத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், அவற்றை இந்தப் பக்கத்தில் போடுவோம். அப்போதுதான் பிரஸ்தாபிகளால், என்ன தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம் என்பதையும் அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பக்கத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை அவ்வப்போது தயவுசெய்து பாருங்கள்.