கிறிஸ்தவர்கள் கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவது சரியா?
பைபிள் தரும் பதில்
இயேசு தன்னைப் பின்பற்றிய நபர்களிடம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றோ பெற்றுக்கொள்ளாதீர்கள் என்றோ கட்டளையிடவில்லை. இயேசுவின் சீஷர்கள்கூட அப்படி எந்தவொரு கட்டளையையும் கொடுக்கவில்லை. குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது தவறு என்று பைபிள் எந்த வசனத்திலும் கண்டனம் செய்யவில்லை. இந்த விஷயத்தில் ரோமர் 14:12-லுள்ள இந்த நியமம் பொருந்தும்: “நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.”
அப்படியானால், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்ற தீர்மானத்தை தம்பதிகளே தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொள்ளலாம். எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது, எப்போது பெற்றுக்கொள்வது போன்ற தீர்மானங்களையும் அவர்களே எடுத்துக்கொள்ளலாம். ஒரு தம்பதி கருக்கலைப்பை ஏற்படுத்தாத கருத்தடை முறைகளைப் பயன்படுத்த விரும்பினால், அது அவர்களுடைய சொந்தத் தீர்மானம். அந்தத் தீர்மானத்திற்கு அவர்களே பொறுப்பாளிகள். வேறு யாரும் அவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது.—ரோமர் 14:4, 10-13.