Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

செக்ஸ் தொல்லையிலிருந்து எப்படித் தப்பிக்கலாம்?

செக்ஸ் தொல்லையிலிருந்து எப்படித் தப்பிக்கலாம்?

 செக்ஸ் தொல்லை என்றால் என்ன?

 தப்பாக தொடுவது, நம்மைப் பற்றியோ நம்முடைய உடலைப் பற்றியோ தேவையில்லாத கமென்ட் அடிப்பது செக்ஸ் தொல்லை. காரணமே இல்லாமல் நம்மை தொடுவதும் செக்ஸ் தொல்லைதான். கிண்டல் பண்ணுவதற்கும் வழிவதற்கும் செக்ஸ் தொல்லைக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது சிலசமயங்களில் கஷ்டமாகிவிடலாம்.

 உங்களால் இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதா?  அது செக்ஸ் தொல்லை தானா? கண்டுபிடியுங்கள் என்ற பெட்டியைப் பாருங்கள்.

 செக்ஸ் தொல்லைகள் பள்ளிகளோடு நின்றுவிடுவது கிடையாது. அது தொடர்ந்துகொண்டே இருக்கலாம். ஆனால், நீங்கள் எப்படி அதை தைரியமாக சமாளிக்கலாம், அதிலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இப்போதே தெரிந்துகொண்டால், வளர்ந்து பெரியவர்களாகி வேலைக்கு போகும்போதும் அது உங்களுக்கு உதவும். அதோடு, இந்த மாதிரி ஆட்கள் மற்றவர்களுக்கு செக்ஸ் தொல்லைக் கொடுப்பதைக்கூட நீங்கள் தடுக்கலாம்!

 அதில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?

 செக்ஸ் தொல்லை என்றால் என்ன? யாராவது அப்படித் தொல்லைக் கொடுக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இதையெல்லாம் தெரிந்து வைத்திருந்தால்தான் அதை நம்மால் தடுக்க முடியும். இப்போது நாம் மூன்று சூழ்நிலைகளைப் பார்க்கலாம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் எப்படி நடந்துகொள்ளலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

சூழ்நிலை:

”நான் வேலை செய்கிற இடத்தில் என்னைவிட வயதில் பெரியவர்களாக இருக்கிற சில ஆண்கள் என்னிடம் வந்து, ‘நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்’ என்று எப்போதும் சொல்வார்கள். எங்களுக்கு மட்டும் 30 வயது கம்மியாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று சொல்வார்கள். அதில் ஒருவர் என் பின்னால் நெருக்கமாக வந்து என்னுடைய முடியை முகர்ந்து பார்த்தார்.“–தபீதா, 20.

 தபீதா இப்படி யோசிக்கலாம்: ‘நான் இதை கண்டுக்காமல் அமைதியாக பல்லைக் கடித்துக்கொண்டு இருந்துவிட்டால் அவர் என்னிடம் தப்பாக நடந்துகொள்வதை நிறுத்திவிடலாம்.’

 இது ஏன் வேலைக்கு ஆகாது: செக்ஸ் தொல்லைக்கு ஆளாகிறவர்கள் அமைதியாக பொறுத்து கொள்ளும்போது நிறைய சமயங்களில் அந்தத் தொல்லைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, சொல்லப்போனால், ரொம்ப மோசமாகிவிடுகிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

 இப்படிச் செய்து பாருங்கள்: ’இந்த மாதிரி பேசுவதையும், தொடுவதையும் நான் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டேன்’ என்று உறுதியாக பொறுமையாக உங்களுக்குத் தொல்லைக் கொடுப்பவரிடம் சொல்லிவிடுங்கள். 22 வயது டெரன் இப்படி சொல்கிறார்: ”யாராவது என்னை தேவையில்லாமல் தொடும்போது, நான் நேரடியாக அவரைப் பார்த்து, ‘இனிமேல் இப்படி என்னை தொடாதீர்கள்’ என்று சொல்லிவிடுவேன். நாம் அப்படி சொல்வோம் என்று தொல்லை கொடுக்கிற அந்த நபர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்.” ஒருவேளை அவர் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தால் பயப்படாதீர்கள். உறுதியாக இருங்கள். அவருக்கு இணங்கி போய்விடாதீர்கள். உயர்ந்த ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும்போது பைபிள் சொல்லும் இந்த ஆலோசனையை கடைப்பிடியுங்கள்: “முதிர்ச்சி உள்ளவர்களாகவும், உறுதியான நம்பிக்கை உள்ளவர்களாகவும், நிலைத்து நிற்பவர்களாகவும் இருக்க வேண்டும்.”—கொலோசெயர் 4:​12.

 தொல்லை கொடுக்கிற அந்த நபர் உங்களை ஏதாவது செய்துவிடுவேன் என்று பயமுறுத்தினால் என்ன செய்வது? அந்த மாதிரி சமயத்தில் சண்டைக்கு நிற்காதீர்கள். அந்த இடத்திலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடையைக் கட்டுங்கள். நீங்கள் நம்பும் ஒரு முதிர்ச்சியுள்ள நபரிடம் உதவி கேளுங்கள்.

 சூழ்நிலை:

”நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் நான் வராண்டாவில் போய் கொண்டிருந்தபோது இரண்டு பெண்கள் என்னை பிடித்து இழுத்தார்கள். அதில் ஒரு பெண் லெஸ்பியன், அதாவது, பெண்ணோடு பெண் உறவு வைத்துகொள்பவர்கள். நாம் இருவரும் வெளியே போய் சந்தோஷமாக இருக்கலாம் என்று என்னை கூப்பிட்டாள். நான் முடியாது என்று சொன்னாலும் அந்த பெண் எனக்கு தினமும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தாள். ஒரு தடவை என்னை பிடித்து சுவரில் தள்ளிவிட்டாள்.“–விக்டோரியா, 18.

 ஒருவேளை விக்டோரியா இப்படி யோசிக்கலாம்: ‘நான் இதை பற்றி யாரிடமாவது சொன்னால், மற்றவர்கள் என்னை பயந்தாங்கொள்ளி என்று முத்திரை குத்திவிடுவார்களோ? என்னை யாரும் நம்ப மாட்டார்களோ?’ என்று யோசிக்கலாம்.

 இது ஏன் வேலைக்கு ஆகாது: இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை என்றால் தொல்லைக் கொடுக்கும் அந்த நபர் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருப்பார். மற்றவர்களுக்கும் தொல்லைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.–பிரசங்கி 8:11.

 இப்படிச் செய்து பாருங்கள்: உதவி எடுத்துக்கொள்ளுங்கள். இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்கத் தேவையான உதவியை அப்பா- அம்மாவால் அல்லது ஆசிரியரால் கொடுக்க முடியும். ஆனால், நீங்கள் சொல்லும் விஷயத்தை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? டிப்ஸ்: ஒவ்வொரு தடவையும் அந்த நபர் உங்களுக்கு தொல்லைக் கொடுக்கும்போது அதைப் பற்றி விவரமாக எழுதுங்கள். தேதி, நேரம், எந்த இடத்தில் நடந்தது, தொல்லைக் கொடுக்கிற நபர் என்னவெல்லாம் சொன்னார் என்று விளக்கமாக எழுதுங்கள்.அதை உங்கள் அப்பா, அம்மாவிடம் அல்லது ஆசிரியரிடம் கொடுங்கள். வெறுமனே சொல்வதைவிட, இந்த மாதிரி எழுதிக் கொடுக்கும்போது நிறையப் பேர் சீக்கிரமாக நடவடிக்கை எடுப்பார்கள்.

 சூழ்நிலை:

”ரக்பி என்கிற ஒருவகை கால்பந்து விளையாடும் டீமில் இருந்த ஒரு பையனை பார்த்தாலே எனக்கு ரொம்ப பயமாக இருக்கும். அவன் கிட்டத்தட்ட 61⁄2 அடி, 135 கிலோ இருப்பான். அவன் என்னோடு செக்ஸ் வைத்துகொள்ள வேண்டும் என்ற முடிவோடு சுத்திக்கொண்டு இருந்தான். அதனால் ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தான். இப்படியே ஒரு வருஷத்துக்கு நடந்தது. ஒரு நாள் க்லாஸ் ரூமில் நானும் அவனும் மட்டும் தனியா இருந்தோம். அப்போது அவன் என் பக்கத்தில் வந்தான். நான் உடனே க்லாஸ் ரூம்மை விட்டு ஓடி போயிவிட்டேன்.“—ஜூலிட்டா, 18.

 ஒருவேளை ஜூலிட்டா இப்படி யோசிக்கலாம்: ‘பையன்கள் என்றாலே அப்படிதான்.’

 இது ஏன் வேலைக்கு ஆகாது: எல்லாருமே அதே மாதிரி நினைத்துவிட்டால் தொல்லை கொடுக்கிற அந்த நபர் திருந்தாமல் போய்விடலாம்.

 இப்படிச் செய்து பாருங்கள்: தொல்லை கொடுக்கும் நபர்கள் கேட்கிற கேள்விகளுக்குச் சிரித்துக்கொண்டே பதில் சொல்லாதீர்கள். அல்லது சிரித்து மழுப்பாதீர்கள். நீங்கள் நடந்துகொள்கிற விதத்திலிருந்து நீங்கள் எதைப் பொறுத்துக்கொள்வீர்கள் எதைப் பொறுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று தொல்லைக் கொடுக்கிற நபர் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய முகபாவனையிலும் நீங்கள் இதைக் காட்ட வேண்டும்.

 உஷாராக இருப்பது எப்படி?

 உண்மை கதை 1:

”எனக்கு மற்றவர்களிடம் கடுகடுவென்று நடந்துகொள்வது பிடிக்காது. அதனால் பையன்கள் எனக்கு தொல்லை கொடுக்கும்போது, அவர்களிடம் ‘இப்படி பண்ணாதீர்கள்’ என்று சொல்வேன். ஆனால், நான் அதை ரொம்ப உறுதியாக சொல்லவில்லை. சிலசமயம் அதை சொல்லும்போது சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறேன். அதனால் நான் அவர்களிடம் வழிகிறேன் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.“—தபீதா.

  •    ஒருவேளை நீங்கள் தபீதாவின் இடத்தில் இருந்திருந்தால் தொல்லை கொடுக்கிற அந்த நபர்களிடம் எப்படி நடந்திருப்பீர்கள்? ஏன்?

  •    தொல்லை கொடுப்பவருக்கு என்னுடைய எந்த செயல் நான் வழிகிறேன் என்ற தப்பான சிக்னலை காட்டும்?

 உண்மை கதை 2:

”பி.டீ க்லாசில் சில பையன்கள் அசிங்கமான கமென்ட்கள் சொன்னபோதுதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பித்தது. கொஞ்சம் வாரங்களுக்கு அதை நான் கண்டுக்காமல் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால், அது போக போக ரொம்ப மோசமாகிகொண்டே போனது. பிறகு பையன்கள் என் பக்கத்தில் உட்கார்ந்து என் தோள் மேல் கையை போட ஆரம்பித்தார்கள். நான் தட்டிவிட்டாலும் அவர்கள் திரும்ப திரும்ப இதே மாதிரி செய்துகொண்டு இருந்தார்கள். கடைசியில் அவர்களில் ஒருவன் ஒரு பேப்பரில் ரொம்ப அசிங்கமாக எழுதி என்னிடம் கொடுத்தான். நான் அதை என் டீச்சரிடம் கொடுத்தேன். அந்த பையனை ஸ்கூலில் இருந்து சஸ்பென்ட் பண்ணிவிட்டார்கள். என்னுடைய ஆசிரியரிடம் இதை பற்றி நான் முன்னாடியே பேசி இருக்கலாம் என்று அப்போதுதான் எனக்கு புரிந்தது.“—சபீனா.

  •    சபீனா ஏன் இதைப் பற்றி முன்பே டீச்சரிடம் சொல்லவில்லை என்று நினைக்கிறீர்கள்? அவள் எடுத்தது ஒரு நல்ல முடிவுதானா? ஆமாம்/ இல்லை. ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

 உண்மை கதை 3:

”என்னுடைய தம்பி க்ரேக் பாத்ரூமில் இருக்கும்போது திடீர் என்று ஒரு பையன் அங்கு வந்துவிட்டான். அவன் க்ரேக்கிடம் ரொம்ப நெருக்கமாக வந்து எனக்கு முத்தம் கொடு என்று சொல்லியிருக்கிறான். ஆனால், க்ரேக் முடியாது என்று சொல்லியும் அந்த பையன் அங்கியிருந்து போகவே இல்லை. அதனால், என்னுடைய தம்பி அவனைப் பிடித்து தள்ள வேண்டியதாகிவிட்டது.“—சுசன்.

  •    க்ரேக் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டாரா? ஆமாம்/ இல்லை. ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

  •    பொதுவாக பையன்களுக்கு பையன்கள் செக்ஸ் தொல்லைக் கொடுக்கும்போது அதை வெளியில் சொல்ல ஏன் சிலர் தயங்குகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

  •    க்ரேக் செய்தது சரி என்று நினைக்கிறீர்களா? நீங்கள் அங்கு இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

மேலும் தெரிந்துகொள்ள: இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும் என்ற சிறுபுத்தகத்தில் “செக்ஸ் வைத்துக்கொள்ள தொந்தரவு செய்தால் என்ன செய்யலாம்?” என்ற தலைப்பில் இருக்கும் கேள்வி 7-ஐயும் “செக்ஸ் தாக்குதலைப் பற்றி என்ன தெரிந்திருக்க வேண்டும்?” என்ற தலைப்பில் இருக்கும் கேள்வி 8-ஐயும் பாருங்கள்.