Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

ஸ்கூலுக்குப் போகவே எனக்குப் பிடிக்கவில்லை என்றால்...

ஸ்கூலுக்குப் போகவே எனக்குப் பிடிக்கவில்லை என்றால்...

 ஸ்ட்ரிக்டான டீச்சர்கள்... நண்பர்களுடைய தொல்லை... எக்ஸாமினால் வரும் ஸ்ட்ரெஸ்... மலைபோல் குவிந்து கிடக்கும் ஹோம்வர்க். நீங்கள் ஏன் ஸ்கூலுக்கு போகவே பிடிக்கவில்லை என்று சொல்கிறீர்கள் என்று நன்றாகவே புரிகிறது. a டீனேஜ் பெண் ரேச்சல் b இப்படிச் சொல்கிறாள்:

 “நீங்கள் என்னை எங்கே போகச் சொன்னாலும் போவேன், பீச்சுக்கு போக சொன்னாலோ... பிரெண்ட்ஸ் கூட இருக்க சொன்னாலோ... வீட்டிலேயே இருந்து என்னுடைய அப்பா அம்மாவுக்கு கூடமாட வேலை செய்து கொடுக்க சொன்னால் கூட செய்வேன். ஆனால் என்னை ஸ்கூலுக்கு மட்டும் போக சொல்லாதீர்கள்!“

 ரேச்சல் மாதிரியே நீங்களும் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், ஸ்கூல் உங்களுக்கு ஒரு ஜெயில் மாதிரி இருக்கலாம். படித்து முடித்தால்தான் அதிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியென்றால் ஸ்கூலுக்குப் போவதைப் பற்றி நீங்கள் பாசிட்டிவாக நினைக்க ஏதாவது வழி இருக்கிறதா?

 இப்படி யோசித்துப் பாருங்கள்: ஸ்கூலைப் பற்றி நீங்கள் பாசிட்டிவாக யோசிக்க ஆரம்பித்தால், ரொம்ப சந்தோஷமாக ஸ்கூலுக்கு போவீர்கள். ‘எனக்கு வேறு வழியில்லை, ஸ்கூலுக்கு போய்தான் ஆக வேண்டும்!’ என்று நினைத்துக்கொண்டு போக மாட்டீர்கள். சொல்லப்போனால், நீங்கள் பெரியவர்களான பிறகு உங்களுக்கு தேவைப்படும் திறமைகளைப் பட்டைதீட்டும் ஒரு இடமாக ஸ்கூல் இருக்கும்.

 ஸ்கூலைப் பற்றி பாசிட்டிவாக நினைப்பதற்கு, கீழே இருக்கும் விஷயங்களை கொஞ்சம் யோசித்து பாருங்கள்:

 உங்களுடைய கல்வி. நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள எதிர்காலத்தில் உங்களுடைய வேலையிலோ, உங்கள் வாழ்க்கையிலோ வரும் பிரச்சினைகளை உங்களால் நன்றாக சமாளிக்க முடியும். எப்போதும் மற்றவர்களிடமே உதவி கேட்டுக்கொண்டு இருக்க மாட்டீர்கள். அதனால் உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஸ்கூலைப் பற்றி எனக்கு பிடிக்காத விஷயங்கள் நிறைய இருந்தாலும், படிப்பதால் எனக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன?’

 பைபிள் நியமம்: “ஞானத்தையும் யோசிக்கும் திறனையும் பாதுகாத்துக்கொள்.”​—நீதிமொழிகள் 3:21.

 இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “எக்ஸாமில் நான் ஃபெயில் ஆகிக்கொண்டே இருக்கிறேனா?“ என்ற கட்டுரையை (ஆங்கிலம்) பாருங்கள்.

 உங்களுடைய பழக்கவழக்கங்கள். ஸ்கூலில் நீங்கள் கற்றுக்கொள்ளும் பழக்கவழக்கங்கள், நேரத்தை சரியாக பயன்படுத்துவதற்கும்... உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்வதற்கும்... சுறுசுறுப்பாக, கடினமாக வேலை செய்வதற்கும் உங்களுக்கு உதவும். இந்த குணங்கள் நீங்கள் பெரியவர்களானாலும் உங்களுக்கு கண்டிப்பாகக் கைகொடுக்கும். உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஸ்கூலில் நான் கற்றுக்கொள்ளும் பழக்கவழக்கங்கள், எனக்கு நானே ரூல்ஸ் வைத்துக்கொள்வதற்கும், திறமையாக வேலை செய்வதற்கும் எனக்கு எப்படி உதவுகின்றன?’ இந்த விஷயங்களில் நான் இன்னும் எப்படி முன்னேறலாம்?’

 பைபிள் நியமம்: “எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்.”​—நீதிமொழிகள் 14:23.

 இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “நேரத்தை ஞானமாகச் செலவிடுவது எப்படி?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

 மற்றவர்களோடு பழகுகிற விதம். ஸ்கூலில் உங்களுடன் படிப்பவர்களோடு நீங்கள் பழகும்போது, அவர்களுடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்ப்பீர்கள், அவர்களை மரியாதையாகவும் நடத்துவீர்கள். ஜோஷ்வா என்ற ஒரு இளைஞர் இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் ஹிஸ்ட்ரி, சயின்ஸ் படிப்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி மற்றவர்களிடம் பேசிப் பழகுவது எப்படி என்று கற்றுக்கொள்வதும் முக்கியம். உங்கள் வாழ்க்கை முழுவதும் அது உங்களுக்கு உதவி செய்யும்.“ உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஸ்கூலில் மற்றவர்களுடன் சகஜமாக பழகுவதால் எனக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது? அதுவும் குறிப்பாக, ஸ்டேட்டஸ் அல்லது நம்பிக்கைகளில் வித்தியாசமாக இருக்கிறவர்களிடம் பழகுவது எனக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கிறது?’

 பைபிள் நியமம்: “எல்லாரோடும் சமாதானமாக இருக்கப் பாடுபடுங்கள்.”​—எபிரெயர் 12:14.

 இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, “மற்றவர்களோடு சகஜமாகப் பேசி பழக தயங்குகிறீர்களா?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

 உங்களுடைய எதிர்காலம். உங்கள் திறமைகளைக் கண்டுபிடிப்பதற்கும் அதற்கு ஏற்றபடி லட்சியங்களை வைப்பதற்கும் ஸ்கூல் உங்களுக்கு உதவி செய்யும். ப்ரூக் என்ற ஒரு இளம் பெண் இப்படி சொல்கிறாள்: “நான் எடுத்தது போலவே நீங்களும் ஒரு ஸ்பெஷல் டிரைனிங் எடுத்துக்கொண்டால், படித்து முடித்த பிறகு ஒரு வேலையை கண்டுபிடிக்க முடியும்.“ உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘படித்து முடித்த பின்பு, என் சொந்தக் காலில் நிற்க நான் என்ன செய்யப்போகிறேன்? அந்த வேலைக்காக இப்போதே நான் என்ன படிக்க வேண்டியிருக்கும்?’

 பைபிள் நியமம்: “நீ போகிற பாதையை நன்றாகத் தெரிந்துவைத்துக்கொள்.”​—நீதிமொழிகள் 4:​26, கண்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்.

a இந்தக் கட்டுரையில் இருக்கும் நிறைய ஆலோசனைகள் வீட்டில் இருந்தே படிக்கும் பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கும்.

b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.