யெகோவாவின் சாட்சிகள் சீக்கிரம் குணமாகிறார்கள்
ஆஸ்திரேலியா: “யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக இரத்தம் ஏற்றிக்கொள்வதில்லை, அதனால் மற்ற நோயாளிகளைவிட அதிக சீக்கிரமாக குணமாகிறார்கள்” என்று அக்டோபர் 2, 2012 தேதியிட்ட த சிட்னி மார்னிங் ஹெரல்ட் சொல்கிறது.
சிட்னி பல்கலைக்கழகத்தில் சிட்னி மேடிகல் ஸ்கூலில் பணியாற்றும் மருத்துவ பேராசிரியர் ஜேம்ஸ் இஸ்பிஸ்டர் சொன்ன கருத்தும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. “சிகிச்சையின்போது நோயாளிகளின் [யெகோவாவின் சாட்சிகளின்] இரத்தம் அதிகம் வீணாகாமல் பாதுகாப்பதன் மூலம் டாக்டர்கள் சிறந்த சிகிச்சை கொடுத்தார்கள். அதனால், மற்ற நோயாளிகளுடன் ஒப்பிடும்போது சாட்சிகள் மத்தியில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. அதோடு, மருத்துவமனையில் அவர்கள் அதிக நாட்கள் தங்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. தீவிர சிகிச்சை பிரிவில்கூட அதிக நாட்கள் இருக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.”
டாக்டர் இஸ்பிஸ்டரை போலவே மற்றவர்களும் சொல்கிறார்கள். இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சாட்சிகளை பற்றி ஆகஸ்ட் 13-27, 2012 அன்று வெளிவந்த ஆர்கய்வ்ஸ் ஆஃப் இன்டர்நல் மெடிசின் என்ற பத்திரிகை இப்படி சொன்னது: “சாட்சிகளை பொறுத்தவரை சிகிச்சைக்கு பிறகு அதிக சிக்கல்கள் ஏற்படுவதில்லை. இரத்தம் ஏற்றிக்கொண்ட மற்ற நோயாளிகளைவிட சாட்சிகள் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் குறைவாகவே இருக்கிறது.”