யெகோவாவின் சாட்சிகள் அமெரிக்க மதப்பிரிவை சேர்ந்தவர்களா?
எங்களது உலக தலைமை அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது. என்றாலும், நாங்கள் ஒரு அமெரிக்க மதப்பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல என்பதற்கு பின்வரும் காரணங்களை கவனியுங்கள்:
நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட மதத்திலிருந்து பிரிந்து வரும் ஒரு தொகுதியையே மதப்பிரிவு என்று சிலர் சொல்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் எந்த மத தொகுதியிலிருந்தும் பிரிந்து வந்தவர்கள் அல்ல. மாறாக, முதல் நூற்றாண்டில் கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தை நாங்கள் மீண்டும் நிறுவியிருப்பதாக நம்புகிறோம்.
யெகோவாவின் சாட்சிகள் 230-க்கும் அதிகமான தேசங்களிலும் நாடுகளிலும் ஊழிய வேலையை மும்முரமாக செய்துகொண்டு வருகிறார்கள். நாங்கள் எங்கு வசித்தாலும் சரி எங்கள் பற்றுறுதி யெகோவாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் மட்டுமே, அமெரிக்க அரசாங்கத்திற்கோ வேறெந்த மனித அரசாங்கத்திற்கோ அல்ல.—யோவான் 15:19; 17:15, 16.
எங்களது அனைத்து போதனைகளும் பைபிள் அடிப்படையிலானவை, எந்த அமெரிக்க மத தலைவர்களின் கருத்துகளையும் சார்ந்தவை அல்ல.—1 தெசலோனிக்கேயர் 2:13.
நாங்கள் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் எந்த மத தலைவர்களையும் அல்ல.—மத்தேயு 23:8-10.