யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவர்களா?
ஆம். பின்வரும் காரணங்களால் நாங்கள் கிறிஸ்தவர்களே:
இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் செயல்களையும் அப்படியே பின்பற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம்.—1 பேதுரு 2:21.
இயேசுவின் மூலம்தான் இரட்சிப்பு என்றும், “நாம் மீட்புப் பெறும்படி வானத்தின் கீழுள்ள மனிதர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றும் நம்புகிறோம்.—அப்போஸ்தலர் 4:12.
மக்கள் யெகோவாவின் சாட்சிகளாக மாறும்போது, அவர்களுக்கு இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது.—மத்தேயு 28:18, 19.
நாங்கள் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்கிறோம்.—யோவான் 15:16.
இயேசுதான் தலைவர் அதாவது அனைத்து மனிதர்கள்மீதும் அதிகாரம் செலுத்த நியமிக்கப்பட்டிருக்கிறவர் என்பதை நம்புகிறோம்.—1 கொரிந்தியர் 11:3.
என்றாலும், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மற்ற மத தொகுதியினருக்கும் எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்திற்கு, இயேசு கடவுளுடைய மகன், திரித்துவத்தின் பாகம் அல்ல என்று பைபிள் கற்பிக்கிறதை நாங்கள் நம்புகிறோம். (மாற்கு 12:29) ஆத்துமா அழியாது என்றோ, கடவுள் மனிதர்களை நிரந்தரமாக நரகத்தில் வதைக்கிறார் என்றோ, மத நடவடிக்கைகளை முன்னின்று நடத்துபவர்களுக்கு மற்றவர்களைவிட உயர்ந்த பட்டப்பெயர்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றோ பைபிள் சொல்வதில்லை; எனவே, நாங்கள் இவற்றை நம்புவதில்லை.—பிரசங்கி 9:5; எசேக்கியேல் 18:4; மத்தேயு 23:8-10.