எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம்
ஜூலை 2011 இதழிலிருந்து எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம் வெளிவர தொடங்கியது. மக்களின் வரவேற்பை பார்ப்பதற்காக இதை ஒருவருட காலத்திற்கு மட்டுமே பிரசுரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. மக்களின் அமோக வரவேற்பை பெற்றதால் இதை தொடர்ந்து பிரசுரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஜனவரி 2013 தொடங்கி எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம் பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், ஸ்பானிய மொழிகளில் கிடைக்கும்.
ஆங்கிலத்தை தாய் மொழியாய் கொண்டில்லாதவர்கள் ஆங்கில சபைகளில் கலந்துகொள்ளும்போது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தோடு இந்த பத்திரிகை தயாரிக்கப்பட்டது.
முதல் இதழ் வெளிவந்த சமயத்திலிருந்தே பாராட்டு கடிதங்கள் குவிய ஆரம்பித்தன. 64 வயது ரெபேக்காவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. இவர் லைபீரியாவில் குடியிருக்கிறார், பள்ளிக்கு போனதே இல்லை. அவர் இப்படி எழுதினார்: “நான் இப்போதான் வாசிக்க பழகுறேன். சிலசமயம் காவற்கோபுரம் வாசிப்பேன், ஆனா எனக்கு ஒன்னும் புரியாது. இப்போ, எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எனக்கு நல்லா புரியுது.”
யெகோவாவின் சாட்சிகளின் கூட்டங்களில் காவற்கோபுர படிப்பு நடத்தப்படுகிறது. அந்த படிப்புக்கு, பிள்ளைகள் தயாரிப்பதற்காக எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரத்தை பெற்றோர்கள் பயன்படுத்துகிறார்கள்.
மூன்று பேத்திகளை வளர்க்கும் ரோஸ்மேரி இப்படி எழுதினார்: “பிள்ளைகளோடு சேர்ந்து காவற்கோபுரத்தை படிக்கிறது எப்பவுமே கஷ்டமா இருக்கும். நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தத்தை டிக்ஷ்னரியில தேடி கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். வார்த்தைகளோட அர்த்தத்தை புரிஞ்சிக்கிறதுக்கே நிறைய நேரம் செலவாயிடும். அதனால, கட்டுரையோட முக்கிய குறிப்பை பிள்ளைகள் புரிஞ்சிக்க முடியாம போயிடுது. எளிமையாக்கப்பட்ட காவற்கோபுரம் வந்ததுக்கு அப்புறம் வசனங்களை எடுத்து வாசிக்க நிறைய நேரம் கிடைக்குது, அந்த வசனங்கள் எப்படி கட்டுரையோட சம்பந்தப்பட்டிருக்குனு தெரிஞ்சிக்க முடியுது.”
வழக்கமாக வெளிவரும் காவற்கோபுர பத்திரிகைக்கும் எளிமையாக்கப்பட்ட பத்திரிகைக்கும் இருக்கும் வித்தியாசத்தை பார்க்க இதோ ஒரு உதாரணம். அப்போஸ்தலர் 15-வது அதிகாரத்தில் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் ஒன்றுகூடி வருவதை பற்றிய விவரிப்பு இருக்கிறது. வழக்கமாக வெளிவரும் காவற்கோபுரம் அதை பற்றி இப்படி குறிப்பிடுகிறது: “ஏதோ நுட்பமான விவரங்களை பற்றிய மனதை உறையவைக்கும் இறையியல் சர்ச்சையில் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனால் கோட்பாடு சம்பந்தமான விஷயத்தை பற்றித்தான் உயிரூட்டமான விதத்தில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
” இதே விஷயத்தை எளிமையாக்கப்பட்ட பத்திரிகை இப்படி குறிப்பிடுகிறது: “அவர்கள் ஏதோ உப்புச்சப்பில்லாத விஷயங்களைப் பேசி வீண் விதண்டாவாதம் செய்யவில்லை, பைபிள் போதனைகளைப் பற்றியே உற்சாகமாகக் கலந்து பேசினார்கள்.
”